வெறித்தனமான போஸ்டருடன் ‘கர்ணன்’ டீசர் அப்டேட்..; தனுஷ் ரசிகர்கள் ஹாப்பி

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’.

இதில் தனுஷுடன் ரஜிஷா, லட்சுமி பிரியா, யோகிபாபு, லால் என பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் ஏப்ரல் 9ல் திரைக்கு வருகிறது.

இப்படத்தில் இடம் பெற்ற மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளது.

அதில் ஒரு பாடலான ‘கண்டா வரச்சொல்லுங்க…’ என்ற பாடலை ஒரு நாட்டுப்புறப்பாடலை தழுவியதாக ஏற்கெனவே சர்ச்சைகள் எழுந்தன.

தற்போது ‘பண்டாரத்தி புராணம்…’ என்ற பாடலில் ஒரு குறிப்பிட்ட தமிழ் சமூகத்தினரை இழிவுபடுத்துவது போன்ற வார்த்தைகள் உள்ளதாக புகாரும் எழுந்துள்ளது.

இந்த பாடல் தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது ஐகோர்ட்.

இந்த நிலையில் இப்பட டீசர் மார்ச் 23ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான போஸ்டரில் (கைது செய்யப்பட்ட) கை விலங்குடன் தனுஷ் அமர்ந்து இருக்கிறார்.

இந்த போஸ்டர் வெறித்தனமாக உள்ளதாக தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Karnan teaser release date is here

Overall Rating : Not available

Latest Post