அசுரன் & பிகில் சூப்பரூ; தனுஷ்-அட்லியை புகழ்ந்து தள்ளிய கரண் ஜோஹர்

அசுரன் & பிகில் சூப்பரூ; தனுஷ்-அட்லியை புகழ்ந்து தள்ளிய கரண் ஜோஹர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

asuran bigilபாலிவுட்டில் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் கரண் ஜோஹர்.

இவரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பல பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் இவர் அசுரன் மற்றும் பிகில் படங்களை பார்த்து தன் கமெண்டுக்களை தெரிவித்துள்ளார்.

“வெற்றிமாறனின் அசுரன் படத்தைப் பார்த்தேன். கடவுளே… அது மொத்தமாக என் மனதை புரட்டிப் போட்டது. தனுஷ் ஆச்சர்யமளிக்கிறார். பிரம்மிக்கவைக்கிறார். இருக்கையின் நுனியில் அமர்ந்து படத்தைப் பார்த்தேன்.

அட்லீ இயக்கிய பிகில் படத்தை விரும்பினேன். அது மிகப் பெரிய வெற்றிப் படம். நான் அவருடைய எல்லாப் படங்களையும் பார்த்துள்ளேன்.

அவர், மசாலா சினிமாவில் வித்தகர்” என்று கூறியுள்ளார்.

கரண் ஜோகரின் கருத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் அட்லீ.

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தை கரண் ஜோஹர் தயாரிப்பார் என கூறப்பட்டது இங்கே கவனிக்கத்தக்கது.

ஆனால், அந்த படம் தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

சினிமாவை நசிந்து விடாமல் காக்க வேண்டும்..; முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்

சினிமாவை நசிந்து விடாமல் காக்க வேண்டும்..; முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathi raja edapadi palanisamyஇரண்டு மாதங்களுக்கு பிறகு கொரோனா பொது முடக்கம் சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது.

இந்த நிலையில் தியேட்டர்களை திறக்கவும் சினிமா படப்பிடிப்புகளை நடத்தவும் அனுமதி கேட்டுள்ள்ளார் பாரதிராஜா.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

“படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.

விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள். அதேசமயம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம்.

பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர்.

சினிமாவை நசிந்து விடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

முதல்வர் தயைகூர்ந்து சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளதைப் போன்ற ஒரு அனுமதியை சினிமாவுக்கும் படப்பிடிப்பைத் தொடங்க கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசு வரையறுக்கும் கட்டுப்பாடு , பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதியளிக்கிறோம். இதன்மூலம் சிறுபடங்கள் படப்பிடிப்பிற்குச் செல்ல ஏதுவாக அமையும்.

திரையரங்குகளும் தங்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி திறந்து செயல்பட திரையுலகினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்”

அப்பா உயிரைக் காப்பாற்ற கல்லீரல் தானம் செய்த டைரக்டர்

அப்பா உயிரைக் காப்பாற்ற கல்லீரல் தானம் செய்த டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Adhin OllurPennanveshanam என்ற மலையாள படத்தை இயக்கி வருபவர் இளம் இயக்குநர் ஆதின் ஒல்லூர்.

இவர் தன் தந்தை உயிரைக் காப்பாற்ற கல்லீரல் தானம் (LIVER DONATION) செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது..

எனது தந்தைக்கு கல்லீரல் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

இப்போது இருவரும் நலமாக உள்ளோம். நண்பர்களுடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

கல்லீரல் தானம் கொடுத்ததை நான் பெருமையாக கருதவில்லை, இது எனது கடமை, அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்காக இணைந்த இளையராஜா-எஸ்பிபி..; துணை ஜனாதிபதி வாழ்த்து

கொரோனாவுக்காக இணைந்த இளையராஜா-எஸ்பிபி..; துணை ஜனாதிபதி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

venkaiah naiduகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் பொது முடக்கத்தை அறிவித்து மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன.

இந்த வைரஸை கட்டுப்படுத்த டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினர் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர்.

கள வீரர்களை கௌரவிக்கும் விதமாக இளையராஜா பாரத பூமி என்ற பாடலை எழுதி இசையமைத்துள்ளார்.

இந்தப் பாடலை தமிழில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். மேலும் இந்தியில் சாந்தனு முகர்ஜி பாரத பூமி பாடலைப் பாடியுள்ளார்.

இளம் வயதில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள லிடியன் பியானோ, கீ போர்டு உள்ளிட்ட வாத்தியங்களை இளையராஜாவின் மேற்பார்வையில் இசைத்துள்ளார்.

இப்பாடல் இளையராஜாவின் யூடியூப் பக்கத்தில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனாவை எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என வலியுறுத்தும் விதத்தில் இந்தப் பாடல் அமைந்துள்ளது

இதற்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: “இந்த இனிமையான இசைத் தொகுப்பை வழங்கியதற்காக மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள்.

சந்த இசையோடு இணைந்த இந்த காணொலியில் காட்சிப்படுத்தப் பட்டிருப்பது போல தொற்றை எதிர்க்கும் அதே நேரம் நாம் ஒன்று சேர்ந்து நமது வளமான பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காப்போம்.

இதுவரையில் கண்டிராத வகையிலான கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக முன் கள வீரர்களாக நின்று போராடுபவர்களுக்கும் ஒன்றின்றிணைந்து நிற்கும் இந்திய மக்களுக்கும் இந்திய திருநாட்டிற்கும் இசையால் பெருமை சேர்த்த பாரத பூமி என்ற தொகுப்பை கண்டு மகிழ்ந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கம்மி ரேட்ல படம் பார்க்கலாம்.; அரசுக்கு கோரிக்கை வைத்து ஆஃபர் தரும் தியேட்டர் ஓனர்கள்

கம்மி ரேட்ல படம் பார்க்கலாம்.; அரசுக்கு கோரிக்கை வைத்து ஆஃபர் தரும் தியேட்டர் ஓனர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Theatre Owners Association new ideas to reduce ticket ratesதிரையரங்குகளில் சினிமா டிக்கட் விலையை குறைக்க திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது

கொரானோ தொற்று பரவலை பொறுத்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என எல்லா தொழில்களையும் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது

முதலில் மூடப்பட்ட தனித்திரையரங்குகள், மால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை

அரசாங்கத்தின் எந்தவிதமான சலுகைகளும் இன்றி சொந்த முதலீட்டில் நடைபெற்று வந்த திரையரங்க தொழில் மூலம் அரசுக்கு வருவாய் தரக்கூடியது.

இந்த தொழில் மூலம்சுமார் 50,000ம் தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது.

திரையரங்குகள் மூடப்பட்ட பின் 50,000ம் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது.

பிற தொழில்களுக்கு விதி முறைகளுடன் அனுமதி வழங்கியது போன்று திரையரங்கு தொழிலை மீண்டும் தொடங்க மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என “தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்” வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோரிக்கைகள்…

திரையரங்கு உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடை முறைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டுகிறோம்.

அரசு வெளியிடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த குறைந்தது இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதால் அரசு உடனடியாக விதிமுறைகளை வெளியிட்டுட்டு திரையரங்கு உரிமையாளர்கள் முன் தயாரிப்பு பணிகளை முடிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.

தற்போது கொரானா ஊரடங்கு காலத்தில் அனைத்து பொருட்கள், போக்குவரத்து செலவுகள் விலையேற்றம் பெற்றுள்ளன.

இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு திரையரங்குகளில் திரைப்படங்களை கண்டுகளிப்பது சமூக இடைவெளியின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கட்டுகள் விற்பனை செய்து பார்வையாளர்களை அனுமதிக்க முடியும்.

இதன் காரணமாக டிக்கட் விலையை அதிகரிக்காமல் அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருக்க கூடிய திரையரங்கு தொழிலை பாதுகாக்கவும் பார்வையாளர்கள் வருகையை உறுதிப்படுத்தி அதிகரிக்க கீழ்க்கண்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றித்தர வேண்டுகிறோம்

தமிழ்நாட்டில் தற்போது 1000 திரையரங்குகள் இயங்கி வருகின்றது இவற்றில்தனி திரையரங்குகள் 700 இரண்டு மற்றும் அதற்கு அதிகமான திரைகளை கொண்டமால், மல்டிபிளக்ஸ் 300 உள்ளது.

தற்பொழுது நடைமுறையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி 8% முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம்.

இதனை ரத்து செய்வதன் மூலம் திரையரங்க டிக்கட் கட்டணம் குறையும் அதிக எண்ணிக்கையில் மக்கள் குடும்பமாக படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் இதன்மூலம் திரையரங்கு, விநியோகஸ்தர்கள், அரசு எனஅனைத்து பிரிவினருக்கும் வருவாய் கூடுதலாகக் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்

தனிதிரையரங்குகளுக்கானGSTவரியை 5%சதவிகிதமாககுறைத்து நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம்.

இவ்வாறு குறைத்து நிர்ணயம் செய்யும் வரிக்குதற்பொழுது உணவகங்களுக்கு விதித்துள்ளது போன்று உள்ளீடு மறுப்பு(no input tax credit) முறையைஅமுல்படுத்த வேண்டுகிறோம்.

இவ்வாறு செய்வதன் மூலம் தற்பொழுது ரூ. 100க்கு விற்பனைசெய்யப்படும் (GST 12% + LBTtax8%) டிக்கெட் விலை 84 ரூபாய் 5% GSTயுடன் சேர்த்து குறையும். இதன் காரணமாக திரையரங்குகளில் டிக்கட் கட்டணம் குறையும், சாமான்ய மக்கள் திரையரங்குக்கு அதிகமாக வருவதற்கான சூழல் உருவாகும்

மால், மல்டிபிளக்ஸ் திரைகளுக்கு உள்ளீடு அனுமதியுடன் தற்பொழுது நடைமுறையில் 18% , 12% GST வரியை ரத்து செய்து, ஒரே GST 12% நிர்ணயம் செய்து தரவேண்டுகிறோம்.

தேசிய ஊரடங்கு காலத்திற்கு முன்பாக தனிதிரையரங்குகளுக்கு அதிக பட்சமாக 15% பார்வையாளர்கள் அளவில்தான் வருகை இருந்தது மேற்கூறிய கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றும் பட்சத்தில் 20% பார்வையாளர்கள் வரை திரையரங்குக்கு வரக்கூடிய சூழல் ஏற்படும் இல்லாத பட்சத்தில் 10% பார்வையாளர்களுக்கு குறைவாகவே வருவார்கள்.

இதன் காரணமாக ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிவரும் திரையரங்கு தொழில் நலிவடைவதற்கான சூழல் உருவாகும்.

தற்பொழுது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடியுள்ள நிலையில் திரையரங்கிற்கான மின் கட்டணத்தில் 50% சலுகைதர வேண்டுகிறோம்.

மேலும் தற்பொழுது முழு முடக்க காலம் வரை திரையரங்கிற்கான சொத்து வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம். தொழில் துவங்கிய பிறகு திரை தொழில் சகஜ நிலை திரும்பும்வரை சொத்து வரியில் 50% சலுகைதர வேண்டுகிறோம்.

தமிழகத்தில் கிராமங்கள் சிறுநகரங்களில் கெளரவத்திற்காக காலங்காலமாக இயங்கிவரும் தனித்திரையரங்குகளை அழிவில் இருந்து காத்திட மத்திய மாநில அரசுகள் மேற்காணும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுகிறோம்

M. திருப்பூர் சுப்பிரமணியன்
தலைவர்

R.பன்னீர் செல்வம்
பொதுச் செயலாளர்

D.C.இளங்கோவன்
பொருளாளர்

TN Theatre Owners Association new ideas to reduce ticket rates

http://tntmoa.com/

ஹீரோயின் அம்மாவிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்ட பிரபலங்கள்.; கல்யாணியை கதற விட்ட சினிமா.!

ஹீரோயின் அம்மாவிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்ட பிரபலங்கள்.; கல்யாணியை கதற விட்ட சினிமா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

serial actress poornithaகுழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் கல்யாணி.

தனது பெயரை பூர்ணிமா என மாற்றிய பின் நாயகியாக சில படங்களில் நடித்தார்.

சினிமா வாய்ப்பு குறைந்த பின் டிவிகளில் தொகுப்பாளினியாக வலம் வந்தார்.

பின்னர் ‘பிரிவோம் சந்திப்போம், அண்ணாமலை, ஆண்டாள் அழகர் உட்பட பல டிவி தொடர்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டு கர்நாடகாவில் செட்டில் ஆனார். சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

தற்போது அவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தான் நடிப்பில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து ஓபனாக பேசியுள்ளார் கல்யாணி.

அதில்..

எங்க படத்துல உங்க மகள்தான் ஹீரோயின். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்யனும் என்பார்கள்.

அட்ஜெஸ்மெண்ட் என்றால் கால்ஷீட் தேதி என நினைத்து அம்மா ஓகே சொல்வார்.

பின்னர் தான் அட்ஜெஸ்மெண்ட் என்பது வேறு மாதிரியான பொருள் என அம்மாவுக்கு தெரிந்தது.

டிவியில் பணி புரிந்த போதும் இந்த பிரச்னை வந்தது… ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் வந்த வாய்ப்புகளும் போய்விட்டது…”

என தெரிவித்துள்ளார் கல்யாணி.

More Articles
Follows