‘விக்ரம்’ அப்டேட் : 2022 பொங்கலை குறி வைக்கும் உலகநாயகன்

‘விக்ரம்’ அப்டேட் : 2022 பொங்கலை குறி வைக்கும் உலகநாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இதில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ், நரேன், ஷிவானி முக்கியமான வேடங்களில் நடித்து வருகின்றனர்.

கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஓரிரு தினங்களுக்கு முன் தொடங்கியதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

2022 பொங்கலுக்கு விக்ரம் திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சி் வருகிறதாம்.

Kamal’s Vikram is set to release for next year pongal

சிவகார்த்திகேயன் அழைப்புக்காக காத்திருக்கும் சந்தானம் அணி மாறன்

சிவகார்த்திகேயன் அழைப்புக்காக காத்திருக்கும் சந்தானம் அணி மாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் மாறன்.

சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ படத்தில் பைத்தியமாக நடித்திருந்தார்.

‘இன்னும் என்ன நீ பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கல..’ என்ற வசனம் இவரை தற்போது இன்னும் பிரபலமாக்கியுள்ளது.

இந்த காமெடி காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மாறன் கூறியுள்ளதாவது…

‘நான் பல வருடங்களாக சந்தானம் டீமுடன் இருக்கிறேன்.

அதனால் சிவகார்த்திகேயன் அவருடைய படங்களில் நடிக்க அழைக்க மாட்டார்.

விவேக்குடன் பல படங்களில் நடித்த செல் முருகன் மற்ற நடிகர்கள் படத்தில் (விவேக் அல்லாத படங்களில்) நடிக்க மாட்டார்.

ஆனால் நான் அப்படியில்லை. என்னை சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் நடிக்க அழைத்தால் நடிப்பேன்” என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Dikkiloona fame Maaran talks about working with Sivakarthikeyan

இளையராஜாவின் 1417வது படத்தை இயக்கும் ‘சிலந்தி’ ஆதிராஜன்

இளையராஜாவின் 1417வது படத்தை இயக்கும் ‘சிலந்தி’ ஆதிராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது..

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி என பன் மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார்.

இதில் நேரடி படங்கள், டப்பிங் படங்கள், இசையமைத்து ரிலீசாகாத படங்கள், அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்கள் என இதுவரை மொத்தம் 1416 படங்களுக்கு இசையமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.

இந்தநிலையில் அவரது இசையில் உருவாகும் 1417 படமாக ‘நினைவெல்லாம் நீயடா’ என்கிற படம் உருவாகிறது.

இசைஞானியின் இசையில் உருவாகும் இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் மிகப்பெரிய பாக்கியத்தை பெற்றுள்ளார் இயக்குநர் ஆதிராஜன்.

இவர் சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கியவர்.

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க, மற்றொரு நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார்.

இவர்கள் தவிர முக்கிய வேடத்தில் அப்பா படத்தில் நடித்த யுவலஷ்மி நடிக்கிறார். அவருடன் தோழியாக மூக்குத்தி அம்மன் புகழ் அபிநயஸ்ரீ நடிக்கிறார்.. மற்றும் மனோபாலா, காளி வெங்கட், மதுமிதா, ரஞ்சன்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.

“பியர் பிரேமா காதல்” படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாச்சார்ஜி இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கையாளுகிறார். படத்தொகுப்பை பிரபாகர் கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை பிரதிப் தினேஷ் அமைக்கிறார்.

முனிகிருஷ்ணா கலை அமைக்கிறார். பாடல்களை பழநிபாரதி சினேகன் ஆகியோர் எழுதுகின்றனர். நடன கட்சிகளை பிருந்தா, தினேஷ், தீனா அமைக்கின்றனர்.

காதலைக் கொண்டாடிய அழகி, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், 96 பட வரிசையில் முதல் காதலை மறக்க முடியாமல் தவிக்கும் காதலர்களை பற்றிய இளமை துள்ளும் கதையாக இந்தப்படம் உருவாகிறது. குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் உருகாத இதயங்களையும் உருக வைத்துவிடும்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாடல்கள் பாண்டிச்சேரி, கூர்க், இடுக்கி ஆகிய இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது.

Ilayaraja to score music for Silandhi Aadhi Rajan’s next

‘மகான்’ படத்தின் மாஸ் அப்டேட் : சூறையாட்டம் ஆட வரும் விக்ரம் & துருவ்

‘மகான்’ படத்தின் மாஸ் அப்டேட் : சூறையாட்டம் ஆட வரும் விக்ரம் & துருவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘மகான்’.

இவர்களுடன் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் இதன் அடுத்த மாஸ் அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’சூறையாட்டம்’ என்ற சிங்கிள் பாடல் வரும் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mahaan First Single Soorayaatam to be out on Sep 22

அறக்கட்டளையின் ஒவ்வொரு ரூபாயும் ஒரு மனித உயிரை காப்பாற்றும்.. – சோனு சூட்

அறக்கட்டளையின் ஒவ்வொரு ரூபாயும் ஒரு மனித உயிரை காப்பாற்றும்.. – சோனு சூட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி, கோவில்பட்டி வீரலட்சுமி என பல படங்களில் நடித்தவர் ஹிந்தி் நடிகர் சோனு சூட்.

பெரும்பாலும் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களிலேயே நடித்தவர் இவர்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் இவர் செய்த உதவிகள் ஏராளம்.

குறிப்பாக இடம்பெயர் தொழிலாளர்கள் அவதிபட்டபோது பேருந்து விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார்.

உதவி செய்வதற்காகவே தன் சொத்துக்களை 10 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்தார்.

மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்பதற்காக ஸ்மார்ட்போன்களை வழங்கினார்.

மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் வைத்தும் கொடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கும் பெரும் உதவி செய்துள்ளார்.

கொரோனா காலத்தில் இவரது சேவையைப் பாராட்டி ஐநா சபை சார்பில் விருது வழங்கப்பட்டது.

தெலங்கானா மாநிலத்தில் சித்தி பேட் மாவட்டத்தில் உள்ள துப்ப தண்டா என்ற கிராமத்தில் சோனு சூட் சிலை அமைத்து கோயில் கட்டியுள்ளனர்

எனவே பொதுமக்கள் இவரை ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாகவே பார்த்தனர்.

இந்த நிலையில் இவருக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

பஞ்சாப் சட்ட சபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடிகர் சோனு சூட் களமிறக்கப்படலாம் என தகவல்களும் ஒரு பக்கம் பரவியது.

மேலும் புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு திட்டத்தின் தூதராக சோனு சூட் டை நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ 20 கோடி அதிகமாக வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது.

அவரது அறக்கட்டளை18 கோடி ரூபாய் வசூலித்ததில் ஒரு கோடியே 90 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டதாகவும், மீதித் தொகை பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் வருமானவரித்துறை தெரிவித்தது.

விதிகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து சோனு சூட் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை வாங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிவிட்டரில் சோனு சூட் கூறியதாவது..

“தமது அறக்கட்டளையில் இருக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு மனித உயிரை காப்பாற்றுவதற்காக காத்திருக்கிறது. ” என பதிவிட்டுள்ளார்.

Actor SonuSood speaks out over allegations of tax evasion after the Income Tax department conducted

இந்திய தலைநகருக்கு பறக்கும் தளபதி..; வைரலாகும் விஜய் போட்டோஸ்

இந்திய தலைநகருக்கு பறக்கும் தளபதி..; வைரலாகும் விஜய் போட்டோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் சண்டைக்காட்சிகள் டெல்லியில் படமாக்கப்பட உள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் டெல்லி சென்றனர்.

இவர்கள் விமானம் மூலம் டெல்லி சென்ற நிலையில், விமானத்திற்குள் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதன்பின்னர் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்த பீஸ்ட் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Vijay and Beast team head to New Delhi for next schedule

More Articles
Follows