THE EAGLE IS COMING ! லியோ படத்தில் நடிக்க இருக்கும் கமல் ஹாசன்

THE EAGLE IS COMING ! லியோ படத்தில் நடிக்க இருக்கும் கமல் ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லியோ படத்தின் கலை இயக்குனர் சதீஸ் குமாரின் சமீபத்திய சமூக வலைத்தள பதிவு வைரலாகி வருகிறது.

கமல் விரைவில் தனது ‘விக்ரம்’ அவதாரத்தில் லியோ படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

சதீஸ்குமார் ஒரு தங்க கழுகின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதில் “தி ஈகிள் இஸ் கம்மின்” என்று எழுதியுள்ளார்.

இது ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுக்காக அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த தீம் பாடலாகும்.

LCU ரசிகர்கள் “code word” ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

The eagle ‘Vikram’ entering the ‘Leo’?

வெற்றியின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்..; ஜி.பி. முத்துக்கு ‘பம்பர்’ கிடைக்குமா?

வெற்றியின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்..; ஜி.பி. முத்துக்கு ‘பம்பர்’ கிடைக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜீவி’ படத்தின் நடிகர் வெற்றி அடுத்ததாக பிக் பாஸ் சீசன்4 புகழ் நடிகை ஷிவானி நாராயணனுடன் இணைந்து நடித்துள்ள படம் ‘பம்பர்’.

இப்படத்தை இயக்குனர் முத்தையாவின் முன்னாள் உதவியாளரான எம் செல்வகுமார் இயக்குகிறார்.

இப்படத்தில் ஹரீஸ் பெரேடி, கவிதா பாரதி, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.

இந்நிலையில், ‘பம்பர்’ படத்திற்கு தணிக்கை குழுவால் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மேலும், ‘பம்பர்’ படத்தை மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

பம்பர்

Vetri & Shivani’s ‘Bumper’ censored

நடிகர் சந்தானம் பட நாயகி மருத்துவமனையில் அனுமதி.; உருக்கமான பதிவு

நடிகர் சந்தானம் பட நாயகி மருத்துவமனையில் அனுமதி.; உருக்கமான பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் அறிமுகமானவர் நடிகை விஷாகா சிங்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

விஷாகா சிங் மருத்துவமனையில் இருந்து தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.

சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக விஷாகா சிங் அனுமதிக்கப்பட்டு, தற்போது வீடு திரும்பியதாகவும், குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகை விஷாகா சிங் கூறியது, “இல்லை, என்னால் ஒருபோதும் கீழே இருக்க முடியாது மற்றும் நீண்ட நேரம் வெளியேயும் இருக்க முடியாது. இலையுதிர், குளிர்காலம், வசந்த காலத்தில் அடிக்கடி ஏற்படும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் மகிழ்ச்சியான ஆரோக்கியத்தை நோக்கித் திரும்பினேன். கோடைகாலம்.ஏப்ரல் எப்போதுமே எனக்கு உண்மையான புத்தாண்டாகவே உணர்கிறது/ ஒருவேளை இது புதிய நிதியாண்டாக இருக்கலாம், அல்லது இது எனது பிறந்தநாள் மாதத்தின் முன்னோட்டமாக இருக்கலாம்.வெயில் நாட்களை நோக்கி முழு ஆர்வத்துடனும் ஆரோக்கியத்தின் மீது புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடனும் முன்னோக்கி நகர்கிறேன். மகிழ்வான தருணங்கள் அமையட்டும்.” என கூறினார்.

Actress Vishaka Singh gets hospitalised

JUST IN சினிமா டிக்கெட் விலையில் திருத்தம்.; 8AM – NIGHT 2AM வரை காட்சிகளுக்கு அனுமதி

JUST IN சினிமா டிக்கெட் விலையில் திருத்தம்.; 8AM – NIGHT 2AM வரை காட்சிகளுக்கு அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழர்களையும் தமிழ் சினிமாவையும் எப்போதும் பிரித்துப் பார்க்க முடியாது.

தமிழக மக்களின் வாழ்வியலோடும் அரசியலோடும் தமிழ் சினிமா எப்போதுமே கலந்து ஒன்றோடு ஒன்றாக பயணித்து வருகிறது.

பல அரசியல் கட்சித் தலைவர்களையும் தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது. மேலும் தமிழகத்தை ஆண்ட எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா ஆகியோர் திரைத்துறைக்கு தங்களது பெரும் பங்களிப்பையும் செய்துள்ளனர்.

மேலும் தமிழ் சினிமாவில் ரஜினி – கமல் முதல் இன்று வளர்ந்து வரும் நடிகர்கள் ஒரு வசனத்தை பேசினால் அதை அரசியலோடு கலந்தே மக்கள் ரசித்து வருகின்றனர்.

எனவே தங்களின் அன்றாட வாழ்வோடு சினிமாவுக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுப்பதில் தமிழர்களுக்கு நிகர் இல்லை.

மக்களின் ஆர்வத்தால் நிறைய திரைப்படங்களும் திரை கலைஞர்களும் உருவாகி வருகின்றனர்.

திரையரங்கில் சினிமா டிக்கெட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் தரமான படங்களை ஆதரித்து வருகின்றனர்..

மேலும் முதல் நாள் முதல் காட்சிக்கு ரூ 1000, 2000 வரை செலவு செய்து படங்களை பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்க அனுமதி கட்டணத்தில் திருத்தம் வர உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் காலை 8 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Revision in cinema ticket prices.; 8AM and 2AM night show allowed

இயக்குநராக மாறிய விக்ரம் வேதா தயாரிப்பாளர்.; மாதவன் – நயன்தாரா – சித்தார்த் பேட்டி

இயக்குநராக மாறிய விக்ரம் வேதா தயாரிப்பாளர்.; மாதவன் – நயன்தாரா – சித்தார்த் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தமிழ்ப் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதிச்சுற்று’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ உள்ளிட்ட பல வெற்றிகரமான மற்றும் பெரிதும் பாராட்டப்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர். YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த்.

இவர் தற்போது தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் மாதவன் சித்தார்த் மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர்.

இந்த படத்தில் நடிப்பது குறித்து இவர்கள் மூவரும் கூறியதாவது..

*ஆர்.மாதவன் கூறுகையில்…

“சஷி இயக்குநராக அறிமுகமாவதில் மிகுந்த மகிழ்ச்சி. கட்டிட வடிவமைப்பு கலைஞராக இருந்து வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பாளராக மாறிய அவர், இப்போது இயக்குநராகவும் அவதாரம் எடுப்பதை பார்ப்பது உற்சாகம் அளிக்கிறது.

‘இறுதி சுற்று’ மற்றும் ‘விக்ரம் வேதா’வுக்குப் பிறகு YNOT உடனான எனது மூன்றாவது படமான ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

சித்தார்த் கூறுகையில்…

“ஒரு அற்புதமான தயாரிப்பாளர், இணை தயாரிப்பாளர் மற்றும் அன்பான நண்பராக சஷியை எனக்கு தெரியும். அவரை இயக்குநராக பார்க்க ஆவலாக உள்ளேன். இந்த ‘டெஸ்டில்’ அவர் சிறப்பாக தேர்ச்சி பெறுவார் என நான் நம்புகிறேன். இப்படத்தில் எனது பங்களிப்பு குறித்து மிகவும் ஆர்வமாக உள்ளேன்,” என்றார்.

*நயன்தாரா கூறுகையில்…

“சஷிகாந்த் தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் சிறந்த திறமைகள், தரமான கதைகள் உள்ளிட்டவற்றுக்கு சான்றாக திகழ்கின்றன. சஷிகாந்தின் அசாத்தியமான திறமையை பற்றி பல சகாக்களிடமிருந்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவருடைய தனித்துவமான பார்வையும், கதை சொல்லும் திறமையும் இந்தப் படத்தை அமோக வெற்றியடைய செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

YNOT தயாரிப்பில் சஷிகாந்தின் இயக்கத்தில் உருவாகும் முதல் படமான ‘டெஸ்ட்’டில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், சிறப்பான கதாபாத்திரத்தில் இப்படத்தில நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.

Madhavan Nayanthara Siddharth talks about their upcoming film

ஹாலிவுட்டிலே இல்லாத திரைக்கதை யாத்திசை-யில்..; சக்திவேலன் பெருமிதம்

ஹாலிவுட்டிலே இல்லாத திரைக்கதை யாத்திசை-யில்..; சக்திவேலன் பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவான படம் ‘யாத்திசை’.

ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான் ‘யாத்திசை’.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படத்தின் உரிமையை பெற்றுள்ள விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது…*

“யாத்திசை.. சக்தி ஃபிலிம் பேக்டரிக்கான பெருமை. எங்கள் நிறுவனத்தில் நிறைய பெருமையான படைப்புகளை வெளியிட்டுள்ளோம் அந்த வகையில் இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும்.

இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டே 30 பேருக்கு மேல் என்னை அழைத்துப் பேசினார்கள்.

எல்லோரையும் இந்தப்படம் சென்றடைந்துள்ளது என்பதே பெருமை. டிரெய்லரை விட இந்தப்படத்தில் இன்னும் பிரமாண்டம் இருக்கும்.

ஹாலிவுட் போர் படங்களில் கூட இல்லாத ஒரு அட்டகாசமான திரைக்கதை இந்தப்படத்தில் இருக்குறது. கண்டிப்பாக இது மிக முக்கியமான படமாக இருக்கும்.

*நடிகர் விஜய் சேயோன் பேசியதாவது…*

யாத்திசையை கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் கடமை. இது நம்முடைய பெருமைமிகு படைப்பு. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தில் ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இப்படம் வெற்றிபெற ஆதரவு தாருங்கள், நன்றி.

இத்திரைப்படம் ஏப்ரல் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Distributor Sakthi Velan praised Yaathisai movie

Yaathisai Movie Press Meet

*With ‘Yaathisai’ trailer getting massive response by crossing 6 million views in just 6 days, the film is gearing up to be released in theatres across Tamil Nadu by Sakthivelan B’s Sakthi Film Factory on April 21*

More Articles
Follows