நயன்தாராவை பார்த்து வியப்படையும் ஜோதிகா.; ஏன் தெரியுமா.?

Jyothika talks about Nayantharas carrier in Cinema industryஅறம், டோரா, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என நாயகியை முதன்மைப்படுத்திய படங்களில் நடித்து அசத்திக் கொண்டிருப்பவர் நயன்தாரா.

இதில் கோலமாவு கோகிலா படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதெல்லாம் நயன்தாராவிற்கு மட்டுமே கிடைத்த பெருமை.

தற்போது நயன்தாரா அஜித்தின் விஸ்வாசம், கொலையுதிர் காலம், தெலுங்கில் சைமா நரசிம்ம ரெட்டி, சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், கமலுடன் இந்தியன் 2 ஆகிய படங்கள் உள்ளன.

இந்நிலையில் நயன்தாராவின் வளர்ச்சி குறித்து ஜோதிகா கூறியதாவது,

‘ஒரு பெண்ணாக தொடர்ந்து வெற்றிகள் பெற்று வருகிறார் நயன்தாரா. ஹீரோக்களை முதன்மைப்படுத்தாத படங்களில் நடிக்கிறார்.

ஒரே நாளில் பல காட்சிகளில் நடித்து குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடித்து கொடுக்கிறார். இது ரொம்ப கடினமான செயல்.

நடிப்பது பெரிய கலையாக இருந்தாலும் அதையும் தாண்டி நேரம் மற்றும் பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்து கொடுக்கும் நயன்தாராவை பார்த்தால் வியப்பாக இருக்கிறது.’’ இவ்வாறு ஜோதிகா கூறியுள்ளார்.

ரஜினியின் சந்திரமுகி படத்தில் ஜோதிகா, நயன்தாரா இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Jyothika talks about Nayantharas carrier in Cinema industry

Overall Rating : Not available

Related News

தமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின்…
...Read More
கமல் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள…
...Read More

Latest Post