ரஜினிகாந்த்-விஜயகாந்த் பட பாணியில் ’ராட்சஷி’ ஜோதிகா

Jyothika next movie titled Ratchashi Directed by Raj36 வயதினிலே படத்திற்ல் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஜோதிகா அதிரடியாக படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான படம் காற்றின் மொழி.

இப்படத்தை தொடர்ந்து தற்போது எஸ்.ராஜ் என்பவர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ராட்சஷி என்ற தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் ஜோதிகாவுடன் பூர்ணிமா, சத்யன், ஹரிஷ் பெரடி, கவிதா பாரதி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இதில் ஸ்கூல் டீச்சராக நடிக்கிறாராம் ஜோதிகா.

இந்த ஸ்கூல் காட்சிகளுக்காக 50 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி செட் போடப்பட்டுள்ளதாம்.

பகலில் டீச்சராகவும் இரவில் குற்றங்களை தடுக்கும் பெண்ணாகவும் நடிக்கிறாராம் ஜோ.

நான் சிகப்பு மனிதன் படத்தில் ரஜினிகாந்த், ரமணா படத்தில் விஜயகாந்த் ஆகியோரது கேரக்டர்களும் இப்படிதான் இருந்தது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Jyothika next movie titled Ratchashi Directed by Raj

Overall Rating : Not available

Related News

அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார்,…
...Read More

Latest Post