சந்திரமுகி-காஞ்சனா வரிசையில் பூர்ணா கலக்கும் பேய் படம்

சந்திரமுகி-காஞ்சனா வரிசையில் பூர்ணா கலக்கும் பேய் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Poorna stills in kundhi movie (5)அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க SFF TV வழங்கும் படம் “ குந்தி “

இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார்.

ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படம் பற்றி A.R.K.ராஜராஜா கூறியதாவது..

தெலுங்கில் ராட்சஷி என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்ட இந்த படமே தமிழில் “ குந்தி “ என்ற பெயரில் தயாரித்து வருகிறோம்.

தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பூர்ணாவின் வாழ்வில் திடீரென ஒரு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடக்கிறது.

ஒரு பேய் தனது குழந்தைகளை கொல்ல துடித்துக் கொண்டிருக்க அந்த பேயிடமிருந்து எப்படி குழந்தைகளை காப்பாற்றினார் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

அருந்ததி, சந்திரமுகி, முனி, காஞ்சனா போன்ற படங்களை மிஞ்சும், தமிழ் சினிமாவின் அடுத்த பிரமாண்டமான பேய் படமாக இந்த குந்தி இருப்பாள்.

முப்பது நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பாகவும், திகிலாகவும் இருக்கும். இதுவரை பேய் படங்களில் நடித்த பிரபலங்களை மிஞ்சும் அளவிற்கு இந்த படத்தில் பூர்ணா தனது நடிப்பு திறமையை வெளிபடுத்தி இருக்கிறார்.

இந்த படம் அவரது திரையுலக வாழ்கையில் ஒரு மைல்கல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. விரைவில் அனைவரையும் பயத்தில் உறைய வைக்க வருகிறாள் இந்த “ குந்தி “ என்றார் A.R.K.ராஜராஜா.

ஒளிப்பதிவு – கர்ணா
இசை – யஜமன்யா
எடிட்டிங் – SFF TV காளிராஜ், சந்திரபிரகாஷ்
பாடல்கள் – வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர்தேவன்
இணை தயாரிப்பு – மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம்
இயக்கம் – பண்ணா ராயல்
வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – A.R.K.ராஜராஜா
தயாரிப்பு – மே.கோ.உலகேசுகுமார்

Poorna new movie titled Kundhi news updates

Poorna stills in kundhi movie (7)

நடிகர்களுக்காக ரத்தம் சிந்தியவர்களுக்கு விஜய்சேதுபதி ரத்ததானம்

நடிகர்களுக்காக ரத்தம் சிந்தியவர்களுக்கு விஜய்சேதுபதி ரத்ததானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathy donated blood in Stunt Union eventஸ்டன்ட் யூனியன் துவங்கப் பட்ட நாளான இன்று ஸ்டன்ட் யூனியன் 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக கொண்டாப்பட்டது.

எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஏராளமான உறுப்பினர்கள் ரத்த தானம், கண் தானம் செய்தனர்.

விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஸ்டன்ட் யூனியனுக்கு ஒரு லட்சம் ரூபாய் நண்கொடையாக வழங்கினார்.

இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் பேசும்போது..ரத்ததானம் கண்தானம் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, ஸ்டன்ட் காட்சிகளில் கொஞ்சம் நிதானத்தையும் கடைபிடியுங்கள் என்று அறிவுரை கூறினார்.

கண் மருத்துவரும் மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகனுமான டாக்டர் விஜய்சங்கர் இலவச கண் சிகிச்சையை உறுபினர்கள் அனைவருக்கும் அளித்தார்.

விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய்சேதுபதி ரத்ததானம் வழங்கி பேசும்போது “ படப்பிடிப்பின் போது சண்டைக் காட்சிகளில் எங்களுக்காக தினம் தினம் எவ்வளவோ ரத்தத்தை நீங்கள் இழந்து கொண்டு இருகிறீர்கள், உங்கள் விழாவில் நான் கலந்துகொண்டு ரத்ததானம் செய்ததை உங்களுக்கு நான் செலுத்தும் நன்றிக் கடனாக நினைக்கிறன்.

இது மாதிரி ஒவ்வொரு வருடமும் ரத்ததானம், கண்தானம் செய்து மற்றவர்களையும் இது போல் செய்யும்படி வலியுறுத்துங்கள் “ என்றார் விஜய்சேதுபதி.

விழாவில் ஸ்டன்ட் யூனியனின் மூத்த உறுபினர்கள் 6 பேர் கௌரவிக்கப் பட்டனர். யூனியனின் செயல்பாடுகளுக்காக WWW.SISDSAU.COM என்ற இணைய தளமும் துவங்கப்பட்டது.

விழாவில் ஸ்டன்ட் யூனியன் தலைவர் சுப்ரீம் சுந்தர் வரவேற்புரையாற்றினார் சூப்பர் சுப்பராயன் நன்றியுரையாற்றினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர் எம்.செல்வம் பொருளாளர் சி.பி.ஜான் ஆகியோர் செய்திருந்தனர்.

Vijay Sethupathy donated blood in Stunt Union event

Vijay Sethupathi donates blood at stunt union function (5)

விக்ரம் பிறந்தநாளில் ஏழை எளியவர்களுக்கு நலதிட்ட உதவிகள்

விக்ரம் பிறந்தநாளில் ஏழை எளியவர்களுக்கு நலதிட்ட உதவிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram fans helped poor peoples on their heros birth dayசீயான் என்று ரசிகர்களால் அன்புடன் அழைப்படுபவர் நடிகர் விக்ரம். அவரின் 53 ஆவ து பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி விக்ரம் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக ஏழைகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் அதன் நிர்வாக தயாரிப்பாளர் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் ஏழை எளியவர்களுக்கு அயர்ன் பாக்ஸ், தையல் இயந்திரம், முச்சக்கர வாகனங்கள் என நலத்திட்ட உதவிகளும், கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கினர்.

இதனை தயாரிப்பாளர் மதன் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ஜேம்ஸ் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை விக்ரம் தலைமை ரசிகர் மன்றம் செய்திருந்தது. மன்றத்தின் மாநில நிர்வாகிகளும், மன்றத்தின் பொறுப்பாளர்களும், சீயானின் ரசிகர்களும் ஏராளமான அளவில் கலந்து கொண்டனர்.

இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் விக்ரமின் பிறந்த நாள் விழாவில் அவரது ரசிகர்கள் இரத்த தானம், அன்னதானம், ஏழைகளுக்கு நலதிட்ட உதவி ஆகியவற்றை செய்திருக்கின்றனர்.

சென்னையில் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நீளமான போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டிருப்பதை அவரது ரசிகர்கள் போட்டோ எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Vikram fans helped poor peoples on their heros birth day

vikram fans help

ஜோதிகா-ராதாமோகன் இணையும் பட டைட்டிலை சொல்லி விஐபி ஆகுங்க!

ஜோதிகா-ராதாமோகன் இணையும் பட டைட்டிலை சொல்லி விஐபி ஆகுங்க!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Guess Jyothika Radha Mohan film title and be their VIP guestஜூன் 2018 முதல் சென்னையில் எங்கள் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

துமாரி சுலு என்று இந்தியில் வெற்றிகரமாக ஓடியப் படத்தை தமிழில் இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார்.

ஜோதிகா – விதார்த் இன்னும் பலர் நடிக்கின்றனர். நீங்கள் அனைவரும் படப்பிடிப்புத் தளத்துக்கு வரவேற்கப்படுகிறீர்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்.. படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை யூகித்துச் சொல்ல வேண்டும்.

அதற்கான் க்ளூ பின்வருமாறு:

1. தலைப்பு இரு வார்த்தைகள் கொண்டது.

2. ஒரு வார்த்தை ராதாமோகன் மற்றும் ஜோதிகாவுடன் தொடர்புடையது.

3. மற்றுமொரு வார்த்தை எஃப்.எம்., ரேடியோவின் பெயர்.

இப்போது விளையாட்டைத் தொடங்குங்கள். எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

சரியான பதில்களை யூகித்துச் சொல்லும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்பு தளத்துக்கு அழைக்கப்படுவார்கள்.

ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு தளத்தில் நீங்கள் இருக்கலாம். மேலும், நடிகர், நடிகை மற்றும் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

இப்போதே உங்கள் சிந்தனையைத் தட்டி விடுங்கள் உங்கள் படைப்பாற்றலைக் காட்டுங்கள்.

போட்டி, வரும் ஏப்ரல் 20-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர் படத்தின் தலைப்பை ஒரு பிரபலம் அறிவிப்பார்.

Guess Jyothika Radha Mohan film title and be their VIP guest

FORM LINK : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfJq1N-sPDPy4T-dbbUJZ_dpYgkrH2DBgD-iLz7yQO19A9G3g/viewform

திருமணமான நடிகர்கள் மட்டும் முத்தமிட்டு நடிக்கலாமா? சமந்தா கேள்வி

திருமணமான நடிகர்கள் மட்டும் முத்தமிட்டு நடிக்கலாமா? சமந்தா கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samantha clarifies about Kiss scene in Rangasthalam movieசுகுமார் இயக்கத்தில் ராம்சரண்-சமந்தா நடித்துள்ள படம் ‘ரங்கஸ்தலம்’.

அண்மையில் வெளியான இந்த தெலுங்கு படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

’பாகுபலி’க்குப் பிறகு தெலுங்கில் அதிக வசூல் ஈட்டிய படம் இது என்கிறார்கள். இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி, போஜ்புரி மொழிகளில் டப் செய்து வெளியிடப்படுகிறது.

இந்தப் படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடந்தது. ராம் சரண் மற்றும் சமந்தாவின் அர்ப்பணிப்பையும் அனைவரும் புகழ்ந்து பேசினர்.

இந்த பட வெற்றியால் மகிழ்ச்சியான தயாரிப்பாளர் இப்பட இயக்குனருக்கு ரூ.10 லட்சம் பரிசு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ஒரு காட்சியில் முத்தம் கொடுப்பது போல் நடித்திருந்தார் சமந்தா. இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதுகுறித்து செய்தியாளர் கேட்ட்டபோது… “திருமணம் ஆன நடிகர்கள் முத்தக்காட்சியில் நடித்தால் மட்டும் யாரும் கேள்வி கேட்பது இல்லை. அதுவே நடிகைகள் என்றால்… ஏதேதோ கேட்கிறீர்கள்.

நான் ராம்சரண் கன்னத்தில் தான் முத்தமிட்டேன். அதை ‘கேமரா டிரிக்ஸ்’ மூலம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டது போல் மாற்றிவிட்டார்கள் என சமந்தா சமாளித்தார்.

Samantha clarifies about Kiss scene in Rangasthalam movie

தயாரிப்பாளர் விஜய்சேதுபதிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

தயாரிப்பாளர் விஜய்சேதுபதிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijay sethupathiஒரு பக்கம் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார் விஜய்சேதுபதி.

இந்த நிறுவனம் சார்பில் முதன்முதலாக ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை தயாரித்து நடித்தார்.

பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றிய லெனின் பாரதி இயக்கியிருக்கிறார்.

இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், துளுவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில், பார்வையாளர் மற்றும் நடுவர் குழுவின் சார்பாக சிறந்த படத்திற்கான விருதை வென்றுள்ளது.

ஒரு தயாரிப்பாளராக விஜய் சேதுபதிக்கு இந்த படம் சர்வதேச அங்கீகாரம் வாங்கிக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவையில்லாமல் கோகுல் இயக்கும் ஜுங்கா படத்தை தயாரித்து வருகிறார் விஜய்சேதுபதி. இதில் நாயகியாக சாயிஷா நடித்து வருகிறார்.

More Articles
Follows