தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ஸ்டார்’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நன்கு அறியப்பட்ட மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் வெளியான படம் ‘ரெஜினா’.
இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார்.
யெல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர் எழுதியுள்ளனர்.
இப்படம் ஜூன் 23-ஆம் தேதி தமிழ், மலையாளம் என பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘ரெஜினா’ படம் இன்று (ஜூலை 25) அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
Sunainaa’s ‘Regina’ movie on OTT released from today