கிராமத்து கலாச்சாரத்தை சொன்ன ‘தண்டட்டி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

கிராமத்து கலாச்சாரத்தை சொன்ன ‘தண்டட்டி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி நடிப்பில் வெளியான படம் ‘தண்டட்டி’.

இந்தப் படத்தில் பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலருடன் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ‘தண்டட்டி’ அணிந்த அப்பத்தாக்கள் நடித்துள்ளனர்.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக S. லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார்.

‘தண்டட்டி’ படம் கடந்த ஜூன் 23ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘தண்டட்டி’ படம் ஜூலை 14ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

‘Thandatti’ movie OTT Release Date Announcement

ரூ. 200 கோடி மிரட்டி பறித்த வழக்கு.; நடிகை லீனா மரியா ஜாமீன் மனு தள்ளுபடி

ரூ. 200 கோடி மிரட்டி பறித்த வழக்கு.; நடிகை லீனா மரியா ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2013-ம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பிரியாணி’.

இப்படத்தில் கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிகை லீனா மரியா பால் இடம்பெற்றிருப்பார்.

இவர் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் ஜான் ஆபிரகாம் நடித்த ‘மெட்ராஸ் கஃபே’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் காதலி ஆவார்.

நடிகை லீனா மரியா பால் சட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரி போல் நடித்து ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில் கடந்த 2021-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2021-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி முதல் சிறையில் இருந்து வரும் லீனா மரியா பால் இந்த வழக்கில் ஜாமின் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார், லீனா மரியா பாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Delhi high court rejects bail plea of Leena Maria Paulose

60 வயதில் 2வது மனைவியுடன் ஹனிமூன் சென்ற விஜய்யின் ரீல் அப்பா

60 வயதில் 2வது மனைவியுடன் ஹனிமூன் சென்ற விஜய்யின் ரீல் அப்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘கில்லி’ படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்து பிரபலமான நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி.

தமிழில் பாபா, பகவதி, ஏழுமலை, மாப்பிள்ளை, உத்தம புத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஏற்கனவே நடன கலைஞரான ராஜோஷி பருவாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார்.

ஆஷிஷ் வித்யார்த்தி

இந்த நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

60 வயதில் திருமணம் தேவையா? என்று வலைத்தளத்தில் பலரும் அவரை கேலி செய்தனர். காதலுக்கு வயது இல்லை என்று ஆஷிஷ் வித்யார்த்தி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் புதிய மனைவியுடன் ஆஷிஷ் வித்யார்த்தி விடுமுறைக்காக இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுக்கு சென்றுள்ளார்.

அங்கு தனது இரண்டாவது மனைவியுடன் செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஆஷிஷ் வித்யார்த்தி

Ashish Vidyarthi went on honeymoon with his 2nd wife at the age of 60

விஜய்சேதுபதி-யின் 50வது படத்திற்கு தோல்வி படத்தலைப்பை வைத்த நித்திலன்

விஜய்சேதுபதி-யின் 50வது படத்திற்கு தோல்வி படத்தலைப்பை வைத்த நித்திலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்த இயக்குநரான நிதிலன் சாமிநாதனுடன் விஜய் சேதுபதி இணைந்துள்ள படம்தான் ‘மகாராஜா’.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’ வலுவான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என நம்பலாம்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் பல படங்களைத் தந்த ’பேஷன் ஸ்டுடியோஸ்’ சுதன் சுந்தரம் இந்தப் படத்தைத் ’தி ரூட்’ ஜெகதீஷ் பழனிச்சாமியுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி போன்ற முன்னணி நடிகர்கள் மற்றும் திறமை வாய்ந்த தொழில்நுட்பக்குழு என்ற சிறந்த கூட்டணியைக் கொண்டுள்ளதால், இந்தப் படமானது பான்-இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தின் டிரைலர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

மகாராஜா

’மகாராஜா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி (நட்ராஜ்), மம்தா மோகன்தாஸ், அபிராமி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன், சரவணன் சுப்பையா, எஸ்.எஸ்.ஸ்டான்லி, கல்கி, காளையன் மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர்.

*தொழில் நுட்பக்குழு விவரம்:*

இசை: அஜனீஷ் லோக்நாத்,
ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்,
எடிட்டிங்: பிலோமின் ராஜ்,
கலை இயக்குநர்: வி செல்வகுமார்,
வசனம்: நித்திலன் சாமிநாதன் & ராம் முரளி,
சண்டைப்பயிற்சி: அனல் அரசு,
ஒப்பனை: ஏஆர் அப்துல் ரசாக்,
ஆடை வடிவமைப்பாளர்: தினேஷ் மனோகரன்,
படங்கள்: ஆகாஷ் பாலாஜி,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா டி’ஒன்,
டிஜிட்டல் புரமோஷன்: கார்த்திக் ரவிவர்மா,
தயாரிப்பு நிர்வாகி: கே சக்திவேல்-சுசி காமராஜ்.

கூடுதல் தகவல்…

மனோகர் இயக்கத்தில் இமான் இசையில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மகாராஜா’. இந்த படத்தில் சத்யா, அஞ்சலி, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஒரு க்ளார்க் வேலை செய்யும் நாசருக்கும் ஐடியில் வேலை செய்யும் சத்யாவுக்கு நடக்கும் ஈகோ மோதலை மையப்படுத்தி இந்த மகாராஜா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஜா

Failure movie title for Vijay Sethupathis 50th film

ஜப்பானில் வெளியாகும் ‘கேஜிஎப் 2’.; நடிகர் யஷ் தந்த வீடியோ அப்டேட்

ஜப்பானில் வெளியாகும் ‘கேஜிஎப் 2’.; நடிகர் யஷ் தந்த வீடியோ அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2018-ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான படம் ‘கே.ஜி.எஃப்’.

இதில் ராக்கி பாய் என்ற கதாப்பாத்திரத்தில் யஷ் நடித்திருந்தார். மேலும், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், 250 கோடி ரூபாய் வரை வசூலித்ததோடு, கன்னட திரையுலகில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.

‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது.

ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப் 2’ படம் பல முன்னணி நடிகர்களின் படங்களை பின்னுக்குத் மாபெரும் வெற்றியை பெற்றது.

சர்வதேச அளவில் ‘கே.ஜி.எஃப் 2’ படம் சுமார் 1,200 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது.

இதை தொடர்ந்து இந்த படத்தின் 3-ம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ‘கே.ஜி.எஃப் 2’ படம் ஜப்பானில் வரும் 14-ந்தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனை நடிகர் யஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

மேலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

kgf 2 will be released in japan on the july 14th

50CENT Final Lap Tour : விஜயகாந்த் மகன் செய்யப் போகும் ஹிப்-ஹாப் புரட்சி

50CENT Final Lap Tour : விஜயகாந்த் மகன் செய்யப் போகும் ஹிப்-ஹாப் புரட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், அனைவராலும் கேப்டன் என்று அறியப்படும் விஜயகாந்த்-இன் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறார்.

இந்த கூட்டணியின் மூலம் மும்பையில் நடைபெற இருக்கும் முதல் கான்சர்ட்-இல் பிரபல ஹிப்-ஹாப் கலைஞரான 50-சென்ட் கலந்து கொள்கிறார். இவரது நிகழ்ச்சிகளுக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை வென்ற புகழ்பெற்ற கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சன் தனது உலகளாவிய இசைக்கச்சேரி “The Final Lap Tour 2023” இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த வரலாற்று நிகழ்வு இசைக் கச்சேரியானது 50 சென்ட்-இன் “Get Rich or Die Tryin” ஆல்பத்தின் 20-ஆவது ஆண்டு விழாவை குறிக்கிறது. இந்த நிகழ்ச்சி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அரங்கில் நடைபெற உள்ளது.

நேரடி பொழுதுபோக்கு, திரைப்பட தயாரிப்பு மற்றும் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு துறையில் புகழ் பெற்று விளங்கும் விஜய பிரபாகரனின் வி.ஜெ.பி. (VJP) மற்றும் டராக்டிகல் (Tracktical) கான்சர்ட்ஸ் என்ற இரு முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்கள் இணைந்து 50 சென்ட்-இன் வரலாறு, பிரபல பாடல்கள் மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாடல்கள் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களும் கலந்து கொண்டு பாட உள்ளனர்.

தன்னிகரற்ற பாடல் வரிகளை எழுதுவதில் புகழ்பெற்ற 50 சென்ட், முதன் முதலில் வெளியிட்ட “Get Rich or Die Tryin” பட்டித்தொட்டி எங்கும் சென்றடைந்து, இசை உலகில் நீங்கா இடம் பிடித்தது.

இந்த ஆல்பம் இவரது புகழை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்தது. இந்த ஆல்பத்தில் உள்ள “In da club,” “p.i.m.p,” மற்றும் “candy shop” போன்ற பாடல்கள் இன்றும் கலாச்சார புரிதல், ஆழமான கதையம்சம் மூலம் ரசிகர்களை இன்றும் கவர்ந்து வருகிறது.

இந்தியாவில் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து பேசிய 50 சென்ட்…

” நான் இந்தியாவுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2007 ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தேன். எப்போதும் போல் கடந்த முறையும் எனது இந்திய பயணம் அன்பால் நிறைந்திருந்தது. Final Lap Tour நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வர இருக்கிறேன், என்று தெரிவித்தார்.

டராக்டிகல் கான்சர்ட் யின் சிஇஓ ஆன வம்சிதரன் கௌதம ராஜன் இதற்கு முன்பாக சர்வதேச ஹிப் ஹாப் ஆர்டிஸ்ட் ஆகிய ப்ளாரிடாவை முதன் முறையாக சென்னைக்கு அழைத்து வந்து கான்சர்ட் செய்தவர். அதுமட்டுமில்லாமல் சர்வதேச புகழ்பெற்ற கிராமி மற்றும் எமி விருந்தினரான ஏகான் அவர்களை நம் தமிழில் லவ்வந்தம் பாடலுக்காக இணைந்து பணியாற்ற வைத்த புகழ் இவரை வந்து சேரும்.

இது இல்லாமல் பல சர்வதேசிய கலைஞர்களுடன் ஷோஸ் செய்த பெருமையும் வம்சிதரன் கௌதமராஜனுக்கு கொண்டு சேரும்.

விஜயகாந்த்-இன் மகன் விஜய பிரபாகரன் கூறும்போது…

திரை மற்றும் கலை உலகில் எனது தந்தை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஒரு தனி அடையாளம் உள்ளது. அதை முன் எடுத்துச் செல்லும் வழியில் எனது இந்த முயற்சி புதிதாகவும் மற்றும் கலை துறையில் ஒரு மாறுபட்ட தொடக்கமாக இருக்கும் என்று கூறினார்.

விஜய பிரபாகரன்

Vijaya Prabhakarans VJP & Tracktical Concerts Announce Arrival of 50 Cent To India

More Articles
Follows