‘தண்டட்டி’ படத்திற்கு ஓடிடி தளத்திலும் தரமான வரவேற்பு

‘தண்டட்டி’ படத்திற்கு ஓடிடி தளத்திலும் தரமான வரவேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாரான தண்டட்டி கடந்த ஜூன் 23ல் திரையரங்கில் வெளியாகியது. பின் ஜூலை 14ந் தேதி அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது.

கிராமத்து வாழ்வியலை, தண்டட்டி என்ற அப்பத்தாக்கள் அணிந்திருக்கும் நகையை வைத்து அழகுறச் சொல்லியிருந்த இப்படம் வெகு வரவேற்பை பெற்று வருகிறது.

நல்ல சினிமா என மக்கள் பார்த்துக் கொண்டாடும் ஒரு படமாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. நல்ல சினிமாக்களை கொண்டாடும் ரசிகர்கள் மத்தியில் தண்டட்டி சென்று சேர்ந்துள்ளது.

அதன் காரணமாக வெளியிட்ட நாள் முதல் இன்று வரை அமேசான் பிரைமில் தண்டட்டி முதலிடத்தில் இருக்கிறது.

இயக்குநர் ராம் சங்கையா இயக்கிய இப்படத்தில் பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் மகேஷ் முத்துசாமி. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக S. லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு A. வெங்கடேஷ். நிர்வாகத் தயாரிப்பு ஷ்ராவந்தி சாய் நாத். தயாரிப்பு மேற்பார்வை AP. பால்பாண்டி.

‘thandatti’ movie has received on the OTT platform as well responce

தனுஷ் பிறந்த நாளில் மெகா ட்ரீட் வைக்கும் சன் பிக்சர்ஸ்

தனுஷ் பிறந்த நாளில் மெகா ட்ரீட் வைக்கும் சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டிலை படக்குழு தனுஷில் பிறந்தநாள் பரிசாக ஜூலை 27ம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

dhanush 50th movie title reveal to him birthday

ஹரிஷ் & இவானா-வின் LETS GET MARRIED எப்போ.? தெரியுமா.?

ஹரிஷ் & இவானா-வின் LETS GET MARRIED எப்போ.? தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் ‘எல்.ஜி.எம்’ (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

‘எல்.ஜி.எம்’ படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘எல்.ஜி.எம்’ திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

எல்.ஜி.எம்

LGM movie release date announcement

உணவுத்துறையில் சாதனை.; விரு(ந்த)தளிக்கும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்

உணவுத்துறையில் சாதனை.; விரு(ந்த)தளிக்கும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உணவுத்துறையில் சாதனை படைத்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு ‘மாதம்பட்டி கோல்டன் லீஃப் 2023’ விருதுகள் வழங்கப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை நடிகரும், உணவுத்துறையில் சாதனை படைத்து வருபவருமான மாதம்பட்டி ரங்கராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

(இவர் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

உலகளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழில்துறையில் உணவு துறையும் ஒன்று. சுவையான உணவு தயாரித்தல்… சுடச்சுட பரிமாறுதல்… குறைவான நேரத்தில் அதிகமான நபர்களுக்கு தரமான உணவை நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக தயாரித்து வழங்குதல்.. என உணவுத்துறை தனித்தனி பிரிவாக பிரிந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.

மெத்த படித்த தனவந்தர்கள் முதல் படிக்காத பாமரர்கள் வரையில் பசி என்பது இயல்பான ஒன்று. மக்களின் பசியை போக்குவதற்காக செயல்படும் இந்த உணவுத் துறையில் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களில் பிரதி பலன் பாராது தங்களது சேவையை கடமையாக கருதி உழைத்து வரும் சாதனையாளர்கள்… மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் சாதனையாளர்கள்…

பசியை களைவதற்காக புதிய கோணத்தில் சிந்தித்து, அதனை நடைமுறையில் செயல்படுத்தி வரும் சாதனையாளர்கள்.. என பல சாதனையாளர்களை கண்டறிந்து, அவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த மாதம்பட்டி கோல்டன் லீப் 2023 விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது.

கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா ஹாலில் ஜூலை 22 ஆம் தேதி அன்று கோலாகலமாக நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே விருந்தோம்பல் துறையில் புதிய அடையாளத்தை பதிவு செய்து தமிழக முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், இந்த விருது வழங்கும் நிகழ்வினை ஒருங்கிணைப்பதால் இத்துறையில் பணியாற்றி வரும் அனைவரும் இந்த விருதினை பெறுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Madhampatty Rangaraj presents Golden Leaf 2023 awards

தென்னிந்திய மொழிகளில் ஓடிடி-யில் ரிலீஸாகும் ‘மாமன்னன்’

தென்னிந்திய மொழிகளில் ஓடிடி-யில் ரிலீஸாகும் ‘மாமன்னன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

‘மாமன்னன்’ படம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

‘மாமன்னன்’ திரைப்படம் தெலுங்கில் “நாயகுடு” (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14-ம் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

‘மாமன்னன்’ படம் வருகிற ஜூலை 27ம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று போஸ்டர் வெளியிட்டுள்ளது.

மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளிலும் வெளியாகிறது.

மாமன்னன்

udhayanidhi’s Maamannan to release digitally on Netflix

எதிர்மறை தலைப்புகளை வைத்து ஏணியில் ஏறிய விஜய் ஆண்டனியின் ‘கொலை’ 1020 தியேட்டரில் ரிலீஸ்

எதிர்மறை தலைப்புகளை வைத்து ஏணியில் ஏறிய விஜய் ஆண்டனியின் ‘கொலை’ 1020 தியேட்டரில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் இல்லாத நடிகர்கள் நட்சத்திர அந்தஸ்தை எட்டுவது இனிமேல் எட்டாக்கனிதான் என்ற சூழல் நிலவி வந்த காலத்தில் 2012 ஆம் ஆண்டு நான் என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய்ஆண்டனி.

சென்டிமென்ட், சகுனங்கள் என புரையோடிப்போன தமிழ் சினிமாவில் பெயர் வைப்பதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி தயாரிப்பாளராக, நடிகராக, இசையமைப்பாளராக, இயக்குநராக வெற்றிக் கண்டவர் விஜய்ஆண்டனி.

வணிக லாபத்துக்காக படம் தயாரிக்கும் திரைப்பட துறையில் பிச்சைக்காரன், நம்பியார், சைத்தான், திமிரு புடிச்சவன், எமன், கொலைகாரன், இந்தியா பாகிஸ்தான் என எதிர்மறையான பெயர்களை படத்திற்கு சூட்டி மே 19 அன்று வெளியான பிச்சைகாரன் – 2 தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் குறுகிய நாட்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தியதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் 100 கோடி ரூபாய் வியாபார நடிகராக வளர்ந்திருக்கும் நட்சத்திர நடிகர் விஜய்ஆண்டனி.

இவரது நடிப்பில் நாளை ஜூலை 21 வெளிவர இருக்கும் படம் ‘கொலை’ க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை ‘விடியும் முன்’ படத்தின் இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கியுள்ளார்.

அவருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி நடிகர் விஜய் ஆண்டனி கூறுகிறபோது..

“தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த ரசிகன்.

சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர். பாலாஜி குமார் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக்களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் தீவிரமாக இருந்ததை உணர்ந்தேன்.

ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா வாழ்க்கையில ஒருமுறையாவது இதுபோன்ற கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். அது போன்ற இந்த வாய்ப்பை ’கொலை’ வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இது தனக்குள்ளேயே உள்ள குழப்பமான சவால்களை எதிர்த்துப் போராட வேண்டிய மற்றும் மர்மத்தை உடைக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம் என்று நான் சொல்வேன்.

அதுமட்டுமின்றி, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது.

மேலும் கூறுகையில்…

“இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகத் திறமையானவர்கள். முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்த நடிகை ரித்திகா சிங், அடுத்தடுத்த தனது படங்களில் நடிப்பின் புதிய பரிமாணங்களை நிரூபிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் வெளியான பிறகு மீனாட்சி சவுத்ரிக்கு அதிக ரசிகர் பட்டாளம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர் என அனைவரும் ‘கொலை’யை தங்களது நடிப்பால் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்”.

‘கொலை’ திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வருமா? என்ற கேள்விக்கு, “’கொலை’யின் உலகம் இன்னும் பல பாகங்களுடன் விரிவடைவதைக் காண நான் ஆர்வமாக உள்ளேன். எங்கள் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இந்த யோசனையை தெரிவித்துள்ளனர். விரைவில் இது குறித்து வரும் காலத்தில் அறிவிப்போம்” என்றார்.

’கொலை’ திரைப்படத்தை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த மிஸ்ட்ரி திரில்லர் கதைக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விடியும் முன் படத்தை இயக்கியபாலாஜி குமார் எழுதி இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங் தவிர, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ’கொலை’ திரைப்படத்தைசக்தி ஃபிலிம் ஃபேக்டரி தமிழ்நாடு முழுவதும் 300 திரைகளில் வெளியிடுகிறது.

தமிழ்நாட்டை போன்றே தெலுங்கில் விஜய்ஆண்டனிக்கு ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது பிச்சைக்காரன், பிச்சைக்காரன் – 2 தமிழ்நாட்டுக்கு இணையாக பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது அதனால் 300க்கும் மேற்பட்ட திரைகளில்
ஆந்திரா – தெலங்கானா மாநிலத்தில் வெளியாகிறது.

கர்நாடகா மாநிலத்தில்75 திரைகளிலும்
கேரள மாநிலத்தில் – 60 திரைகளிலும்
வட இந்திய மாநிலங்களில் – 35 திரைகளிலும் வெளிநாடுகளில் – 250 திரைகளும்ஆக மொத்தம்1020 திரைகளில் உலகம் முழுவதும் கொலை படம் வெளியாகிறது.

Vijay Antonys Kolai will be released in 1020 screens

More Articles
Follows