தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்தியாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் பி செளத்ரி தயாரிக்கும் 91-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜீவா.
இந்த நிறுவனம் ஜீவாவின் குடும்ப நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
“வரலாறு முக்கியம்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ளதாம்.
நடிகர் ஜீவாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று (4 ஜனவரி 2022) வெளியிடப்பட்டது.
ஜீவா நடித்த “சிவா மனசுல சக்தி” படத்தினைப் போன்று இப்படத்தினை எதிர்பார்க்கலாம் என்கிறது படக்குழு.
அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் சசியின் உதவியாளராக பணியாற்றியவர்.
நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, TSK, E ராமதாஸ், லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகாந்த் NB (எடிட்டிங்), ராஜு சுந்தரம்-பிருந்தா (நடன அமைப்பு), மதன் கார்க்கி, சந்தோஷ் ராஜன் (பாடலாசிரியர்கள்), R. சக்தி சரவணன் (ஸ்டன்ட் டைரக்ஷன்), மோகன் (கலை), வாசுகி பாஸ்கர் (ஆடை வடிவமைப்பு ), எஸ்.ஏ.சண்முகம் (மேக்கப்), மற்றும் சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு) ஆகியோர் இப்படத்தின் மற்ற தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.
சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Jiiva’s next film is titled Varalaru Mukkkiyam