காமெடி சீனை கொரியோகிராப் செய்வார் ஒளிப்பதிவாளர் – நடிகர் ஷாரா

காமெடி சீனை கொரியோகிராப் செய்வார் ஒளிப்பதிவாளர் – நடிகர் ஷாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள ‘வரலாறு முக்கியம்’ படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்வினில்… நடிகர் ஷாரா பேசியதாவது…

“இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஜீவா சார், சூப்பர் குட் பிலிம்ஸ், இயக்குனர் சந்தோஷ் மூவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் சக்தி, காமெடி சீனை கொரியோகிராப் செய்வார், அது பலரிடத்தில் இருப்பது இல்லை.

SMS போன்று இதுவும் ஒரு ஜாலியானா படமாக இருக்கும். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்.” என்றார்.

சூப்பர் குட் பிலிம்ஸில் நான் நடித்தது பெருமை; டைரக்டர் கூலான மனிதர் – நடிகர் டி எஸ் கே

சூப்பர் குட் பிலிம்ஸில் நான் நடித்தது பெருமை; டைரக்டர் கூலான மனிதர் – நடிகர் டி எஸ் கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “. ரொமான்ஸ் காமெடி ஜானரில் கம்ர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொள்ள நேற்று இனிதே நடைபெற்றது.

இந்த நிகழ்வினில் ..

நடிகர் டி எஸ் கே பேசியதாவது…

“சூப்பர் குட் பிலிம்ஸில் நான் நடித்தது எனக்கு பெருமையான விஷயம். இயக்குனர் போன்ற ஒரு கூலான மனிதரை பார்க்க முடியாது, மொத்த குழுவையும், நடிகர்களையும் சரியாக வழிநடத்தி படத்தை உருவாக்கியுள்ளார். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்.”

‘தளபதி விஜய்யின் 30 வருட’ ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்ட வாரிசு டீம் !

‘தளபதி விஜய்யின் 30 வருட’ ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்ட வாரிசு டீம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி விஜய் தற்போது தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நடிகராக உள்ளார்.

அவரது ரசிகர் பட்டாளமும், நட்சத்திர அந்தஸ்தும் இணையற்ற அளவில் வளர்ந்துள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கு முன்பு ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

டிசம்பர் 4ம் தேதி அவரது சினிமா வாழ்க்கையில் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதனையடுத்து விஜய்யின் ‘வரிசு’ தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு டிசம்பர் 4 அன்று ஒரு சிறப்பு விருந்தை அறிவித்துள்ளனர்.

வாரிசு இரண்டாவது சிங்கிள், ‘தீ தளபதி’, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

அதிவி சேஷ் நடித்த ‘ஹிட் 2’: முதல் நாள் வசூல் வெளியானது

அதிவி சேஷ் நடித்த ‘ஹிட் 2’: முதல் நாள் வசூல் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘HIT 2’ பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலேயே ஒரு க்ரைம் த்ரில்லருக்கான மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்றது.

வெள்ளியன்று ரூ 11.75 கோடி வசூல் எடுத்தது.

அதிவி சேஷ் நடித்த படங்களிலே அதிக வசூல் எடுத்தது இந்த படம் தான்.

தயாரிப்பாளர் நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் அவரது பேனர் வால் போஸ்டர் சினிமா மகிழ்ச்சியில் நிறைந்து உள்ளது.

சேஷுக்கு ‘HIT 2’ இந்தப் படத்தின் இரண்டாவது வெற்றி.

‘மேஜர்’ திரைப்படம் ஜூன் மாதம் மாபெரும் வெற்றி பெற்றது.

‘வெண்ணிலா கபடி குழு’ பட நடிகர் ஹரி வைரவன் காலமானார்

‘வெண்ணிலா கபடி குழு’ பட நடிகர் ஹரி வைரவன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் விஷ்ணு விஷால் & சூரி ஆகியோர் சினிமாவில் அறிமுகமாகினர்.

இந்த படம் இதில் நடித்த பெரும்பாலான புது முகங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இதில் விஷ்ணு கபடி குழுவில் ஒருவராக நடித்தவர் ஹரி வைரவன். இதில் இவருக்கான காமெடி காட்சிகள் இருந்தன.

இந்த நிலையில் நடிகர் ஹரி வைரவன் 03.12.2022 இன்று அதிகாலை 12.15 மணியளவில் காலமானார்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் கடச்ச நேந்தல் சொந்த ஊரில் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அவருக்கு மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

‘இந்தியானா ஜோன்ஸ் 5’ அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் டிரெய்லர் வெளியானது!

‘இந்தியானா ஜோன்ஸ் 5’ அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் டிரெய்லர் வெளியானது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியானா ஜோன்ஸ் 5 இன் அதிகாரப்பூர்வ தலைப்பு – ‘தி டயல் ஆஃப் டெஸ்டினி’ மற்றும் படத்தின் முதல் டிரெய்லர் இன்று இணையத்தில் வெளிவந்தது.

2 நிமிட வீடியோவில், வயதான டாக்டர் ஜோன்ஸ் ஒரு தொல்பொருள் பேராசிரியராக தனது வாழ்க்கையை வாழ்வதைக் காட்டுகிறது, ஆனால் ஹைலைட் என்னவென்றால், டிரெய்லர் இந்தியானா ஜோன்ஸின் இளைய உருவத்தை காட்டுகிறது.

கதைக்களம் இரண்டு காலகட்டங்களில் நடப்பது போன்று உள்ளது .

இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி ஜூன் 30, 2023 அன்று திரையரங்குகளுக்கு வருகிறது.

More Articles
Follows