டிசம்பர் 9-10 இந்த வார தியேட்டர் & ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் & ரீ-ரீலீஸ்.?

டிசம்பர் 9-10 இந்த வார தியேட்டர் & ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் & ரீ-ரீலீஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை டிசம்பர் 9ல் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ள படங்கள் இதோ…

ஜீவா நடிக்கும் ‘வரலாறு முக்கியம்’…் நட்டி நடராஜ் நடித்த ‘குருமூர்த்தி’, கலையரசன், ரம்யா நம்பீசன் நடித்த ‘எஸ்டேட்’ & சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ’ ஆகிய தமிழ் படங்கள் இந்த வாரம் (டிசம்பர் 9) வெளியாக உள்ளது.

ஓடிடி ரிலீஸ்:

இயக்குநர் ரஃபீக் இஸ்மாயீல் இயக்கியுள்ள ‘ரத்தசாட்சி’ ஆஹா ஓடிடி தளத்திலும்…

ரோகினி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வினோத் சாகர் நடித்துள்ள ‘விட்னஸ்’ சோனிலிவ் ஓடிடி தளத்திலும் 9-ம் தேதி வெளியாகிறது.

கன்னட படங்களின் 2 டப்பிங் படங்கள்…

ப்ரியாமணி நடித்துள்ள ‘டிஆர்56’ மற்றும் ரிஷிகா ஷர்மா இயக்கியுள்ள ‘விஜயானந்த்’ (Vijayanand Biopic) ஆகிய இரண்டு படங்கள் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றன.

ஓடிடி வெப் சீரிஸ்

அஞ்சலி நடித்துள்ள ‘ஃபால்’ (Fall) தமிழ் இணையத்தொடர் ஹாட்ஸ்டாரில் 9-ம் தேதி வெளியாகிறது.

ஏற்கெனவே தியேட்டரில் ரிலீசான படங்கள் ஓடிடியில் ரிலீஸாகிறது.. அவை…

சுந்தர்.சி இயக்கிய ‘காஃபி வித் காதல்’ ஜீ5 ஓடிடி தளத்தில் 9-ம் தேதி வெளியாகிறது.

சமந்தா நடித்த ‘யசோதா’ அமேசான் ப்ரைம் ஓடிடியில் 9-ம் தேதி வெளியாகிறது.

ரஜினி பர்த் டே ஸ்பெஷல்..ரீ-ரீலீஸ் படங்ஙள்

டிசம்பர் 10ஆம் தேதி ‘பாபா’ ரீ- ரிலீசாகிறது.

ஷங்கர் ரஜினி கூட்டணியில் உருவான ‘சிவாஜி’ திரைப்படமும் டிசம்பர் 9 முதல் 15 வரை பிவிஆர் & சினிபொலிஸ் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பிரம்மாண்ட திரைப்படம் மூலம் பாலிவுட்டில் கால் பாதிக்கும் சாய் பல்லவி

பிரம்மாண்ட திரைப்படம் மூலம் பாலிவுட்டில் கால் பாதிக்கும் சாய் பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாய் பல்லவி ஒரு பிரம்மாண்டமான, படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு படத்தில் சீதா தேவியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .

‘பிரம்மாஸ்திரா’ புகழ் ரன்பீர் கபூர் இதிகாச புராண படத்தில் ராமராக நடிக்கவுள்ளார்.

தீபிகா படுகோன் மற்றும் கரீனா கபூர் படத்தில் இருந்து விலகியதை அடுத்து சாய் பல்லவிக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.

ரஜினி பிறந்தநாள் மெகா கொண்டாட்டம்.; 2 படங்களை ரீ-ரீலீஸ் செய்யும் சூப்பர் ஸ்டார்

ரஜினி பிறந்தநாள் மெகா கொண்டாட்டம்.; 2 படங்களை ரீ-ரீலீஸ் செய்யும் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தன் பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

பொதுவாக ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சூப்பர் ஹிட் படங்கள் திரையரங்குகளில் ஓரிரு காட்சிகள் திரையிடப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். இதையே ரசிகர்கள் புதிய படம் போல கொண்டாடுவார்கள்..

ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ரஜினி நடித்த ‘பாபா’ மற்றும் ‘சிவாஜி தி பாஸ்’ ஆகிய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆகின்றன.

இதற்காக நிறைய திரையரங்குகள் ரெடியாகி வருகின்றன.

பாபா

‘பாபா’ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவானதால் அந்தப் படத்திற்கு புதிய காட்சிகளை இணைத்து டப்பிங் பேசியுள்ளார் ரஜினிகாந்த்.

எனவே தமிழகத்திலும் வெளிநாட்டிலும் நிறைய தியேட்டர்களில் வெளியிட உள்ளனர்.

டிசம்பர் 10ஆம் தேதி ‘பாபா’ ரிலீசாகவுள்ள இந்த நிலையில் தற்போது ஷங்கர் ரஜினி கூட்னணியில் உருவான ‘சிவாஜி’ திரைப்படமும் டிசம்பர் 9 முதல் 15 வரை பிவிஆர் & சினிபொலிஸ் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த வருடம் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இது மெகா விருந்து தான் என்பதில் சந்தேகம் இல்லை.

சிவாஜி தி பாஸ்

Superstar rajinikanth  re-releasing 2 films on his birthday

KGF பில்டப் நடிகர் கிருஷ்ணாஜி ராவ் மறைவுக்கு ஹோம்பலே பிலிம்ஸ் இரங்கல்

KGF பில்டப் நடிகர் கிருஷ்ணாஜி ராவ் மறைவுக்கு ஹோம்பலே பிலிம்ஸ் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யஷ் நடிப்பில் உருவான ‘கேஜிஎஃப்’ முதல் பாகத்தில் கிருஷ்ணாஜி ராவ் கண்பார்வையற்றவராக நடித்திருப்பார்.

இதன் KGF 2-தில், “உங்களுக்கு யோசனை சொல்றேன். நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்” என நாயகன் யாஷூக்கு இவர் பில்டப் கொடுப்பார்.

இந்த காட்சிக்கு தியேட்டரில் விசில் பறக்கும்.

மேலும் கன்னடத்தில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். துணை நடிகராக வலம் வருகிறார் இவர்.

இந்த நிலையில் உடல்நலக் குறைவால் காரணமாக கிருஷ்ணாஜி ராவ் அவதிப்பட்டு வந்தார்.

எனவே பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். மேலும், அவருக்கு வயது 73.

கிருஷ்ணா ஜி மறைவுக்கு கேஜிஎஃப் படத் தயாரிப்பு நிறுவனம் ஹோம்பலே இரங்கல் தெரிவித்துள்ளது.

அதில்… “கேஜிஎஃப் பட ரசிகர்களால் தாதா என்று அழைக்கப்பட்ட கிருஷ்ணா ஜி ராவின் மறைவுக்கு ஹோம்பலே குழுவினரின் இரங்கல். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளது.

கிருஷ்ணாஜி ராவ்

Hombale Films mourns the demise of KGF actor Krishnaji Rao

இயக்குனர் ஹரியுடன் மீண்டும் இணைகிறாரா சூர்யா ?

இயக்குனர் ஹரியுடன் மீண்டும் இணைகிறாரா சூர்யா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா சமீபத்தில் விலகினார்.

இந்த செய்தி அவரது பல ரசிகர்களின் இதயங்களை உடைத்தது.

2020 ஆம் ஆண்டில், இயக்குனர் ஹரியுடன் சூர்யா தனது ‘அருவா’ படத்தை அறிவித்தார்.

சில தவிர்க்க முடியாத காரணங்களால், அருவா கடைசி நேரத்தில் கிடப்பில் போடப்பட்டது.

ஆக்‌ஷன் படத்திற்கு இதுவே சரியான நேரமாக இருக்கும் என்று சூர்யா கருதுவதால், மீண்டும் அருவா படத்தை சூர்யா கையில் எடுப்பதாக சொல்லப்படுகிறது .

ஒரே நாளில் ரெண்டு போட்டியாளர்களை வெளியேற்றும் பிக்பாஸ் ?

ஒரே நாளில் ரெண்டு போட்டியாளர்களை வெளியேற்றும் பிக்பாஸ் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக் பாஸ் 6 தமிழில் தற்போது 13 பிரபலங்களுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது .

இந்த வாரம், ஆயிஷா, அசீம், ஜனனி, கதிரவன், ஏடிகே மற்றும் ராம் ஆகிய 6 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களில் இருவர் இந்த வார இறுதியில் ‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் ராம் மற்றும் ஆயிஷா குறைந்த சதவீத வாக்குகளைப் பெற்று கிட்டத்தட்ட சமமாக உள்ளனர்.

எனவே அவர்கள் இருவரும் இந்த வாரம் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More Articles
Follows