ஜெயலலிதா பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விஜய்

ஜெயலலிதா பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayalalithaas biopic titled Thalaivi Directed by Vijayமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் இன்று பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் அவரின் வாழ்க்கையை படமாக்கவுள்ள இயக்குனர் விஜய் அவர்கள் அப்படத்தலைப்பை அறிவித்துள்ளார்.

`தலைவி’ என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளார்.

இப்படம் பற்றி இயக்குநர் விஜய் பேசும்போது,

“தலைவி என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் “தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்” என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது.

ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர், அவர் பிறப்பிலேயே அத்தகைய தலைமைப் பண்புகளை பெற்றவர்.

அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, அனுபவம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை ஒரு தலைவரை உருவாக்கும் குணங்கள் என்றால், அவர் பிறப்பிலேயே அந்த குணங்களை பெற்றவர்.

இத்தகைய உயர்ந்த தலைவரின் தைரியமே என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடனேயே எந்த யோசனையும் இல்லாமல் ஒப்புக் கொண்டேன். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன் என்றார்.

விப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்தூரி இந்த படத்தை தயாரிக்கிறார். பாகுபலி எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக இணைகிறார்.

ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Jayalalithaas biopic titled Thalaivi Directed by Vijay

Jayalalithaas biopic titled Thalaivi Directed by Vijay

விஜயகாந்தை கட்டித் தழுவிய ரஜினிகாந்த்; அழுது நெகிழும் சேரன்

விஜயகாந்தை கட்டித் தழுவிய ரஜினிகாந்த்; அழுது நெகிழும் சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Cheran talks about Rajinikanth and Vijayakanth meetingதேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களாக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவர் தன் உடல் நலத்திற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது பூரண குணமடைந்து சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளார்.

எனவே அவரை பலரும் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் அவரை சந்தித்து உடம் நலம் குறித்து கேட்டறிந்தார்.

அந்த வீடியோ இணையங்களில் வைரலானது. அந்த வீடியோவில் விஜயகாந்தின் கன்னத்தை தழுவி ஒரு குழந்தையை போல் அவருக்கு வாழ்த்து சொல்லி வந்தார் ரஜினிகாந்த்.

இந்த வீடியோவை பதிவிட்டு இயக்குனர் சேரன் கூறியதாவது…

Cheran Pandian‏ @cherandreams
இந்த மனிதநேயம்தான் ரஜினியிடம் எனக்கு பிடித்த முதல் விஷயம்.. அவரின் தழுவலும் அவர் விஜயகாந்த் அவர்களை கன்னத்தில் தொடும் உணர்வும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறது… கண்ணீர் வரவைக்கும் வீடியோ… தூர இருந்து உங்களை ரசிக்கிறேன் மதிக்கிறேன்… அரசியல் தாண்டி… நீங்கள் நீடூடி வாழ்க. “
என பதிவிட்டுள்ளார்.

Director Cheran talks about Rajinikanth and Vijayakanth meeting

அம்மன்-அருந்ததி படங்களை இயக்கிய கோடி ராமகிருஷ்ணா மரணம்

அம்மன்-அருந்ததி படங்களை இயக்கிய கோடி ராமகிருஷ்ணா மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Veteran Telugu director Kodi Ramakrishna no moreதெலுங்கில் பிரபலமான இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா.

இவர் தமிழில் அம்மன், அருந்ததி, கேப்டன் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவர் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

கோடி ராமகிருஷ்ணன் இழப்பால் தெலுங்கு திரையுலகம் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Veteran Telugu director Kodi Ramakrishna no more

‘ரெமோ’ இயக்குனரின் அடுத்த படத்தில் ‘கீதா கோவிந்தம்’ ராஷ்மிகா

‘ரெமோ’ இயக்குனரின் அடுத்த படத்தில் ‘கீதா கோவிந்தம்’ ராஷ்மிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Geetha Govindam fame Rashmika Mandanna pair up with Karthiசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் பாக்யராஜ் கண்ணன். இப்படத்திற்கு இவர் எந்த படங்களை இயக்கவில்லை.

தற்போது கார்த்தி நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கார்த்தி இப்படத்தை முடித்துவிட்டு ரெமோ இயக்குனருடன் இணைகிறார்.

தற்போது முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் சூட்டிங் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் கார்த்தி ஜோடியாக கீதா கோவிந்தம் தெலுங்கு பட புகழ் ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

Geetha Govindam fame Rashmika Mandanna pair up with Karthi

‘96’ தெலுங்கு ரீமேக்.; பிரச்சினையால் விலகும் பிரேம் குமார்.?

‘96’ தெலுங்கு ரீமேக்.; பிரச்சினையால் விலகும் பிரேம் குமார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Premkumar in trouble to remake 96 movie in Teluguபிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்த படம் ‘96’.

கோவிந்த் வசந்தா என்பவர் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை அண்மையில் பிரபலங்களுடன் கொண்டாடினார் இப்பட இயக்குனர் பிரேம் குமார்.

மாபெரும் வெற்றி பெற்றதால் இப்படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்யவுள்ளனர். ‘தில்’ ராஜு தயாரிக்கிறார்.

இதில் சர்வானந்த், சமந்தா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த வசந்தாவை தயாரிப்பாளர் மாற்ற சொன்னதாக கூறப்படுகிறது.

ஆனால் டைரக்டர் பிரேம்குமார் முடியாது என மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஒருவேளை தயாரிப்பாளர் சம்மதிக்காத பட்சத்தில் இயக்குனரே விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Director Premkumar in trouble to remake 96 movie in Telugu

விஜய் தங்கைக்கு தீவிர சிகிச்சை; திரைத்துறையினர் உதவ சகோதரி வேண்டுகோள்

விஜய் தங்கைக்கு தீவிர சிகிச்சை; திரைத்துறையினர் உதவ சகோதரி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Friends fame Vijayalakshmi hospitalizedமலையாள இயக்குனர் சித்திக் இயக்கிய பிரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தவர் விஜயலட்சுமி.

தற்போது சினிமா சான்ஸ் இல்லாத காரணத்தினால் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

கடந்த 2006-ம் ஆண்டில் இவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இந்த முயற்சிக்கு ஒரு உதவி இயக்குனரின் காதல் தான் எனவும் சொல்லப்பட்டது.

இதனையடுத்து இதுவரை திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் விஜயலட்சுமி.

இந்நிலையில் தற்போது அவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருந்து வந்துள்ளது.

எனவே தீவிர சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மல்லையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறாராம்.

இது குறித்து விஜயலட்சுமி சகோதரி கூறியதாவது:-

‘விஜயலட்சுமிக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம். சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பணத்தை எல்லாம் எங்கள் அம்மாவின் சிகிச்சைக்கே செலவு செய்துவிட்டோம். தற்போது பணச் சிக்கலில் உள்ளோம். சினிமா துறையினர் உதவ வேண்டும்‘ எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Friends fame Vijayalakshmi hospitalized

More Articles
Follows