இதாண்டா ரஜினி.; JAILER FDFS பார்க்க லீவு கொடுக்கும் நிறுவனங்கள்

இதாண்டா ரஜினி.; JAILER FDFS பார்க்க லீவு கொடுக்கும் நிறுவனங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படம் இந்த வாரம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வியாழக்கிழமை உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப் உள்ளிட்ட இந்திய பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் தலைவர் அலப்பறை மற்றும் காவலா ஆகிய பாடல்கள் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்துள்ளது எனலாம்.

படத்தின் ரிசர்வேஷன் தற்போது தொடங்கி விட்டதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை புக்கிங் செய்து வருகின்றனர்.

ஜெயிலர்

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தை தங்கள் நிறுவன ஊழியர்கள் பார்க்க வேண்டும் என்பதால் அன்றைய தினம் சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், சில தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளித்து வருகின்றன.

இது பற்றி தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அனுப்பிய விடுமுறை சர்குலர்ஸ் அறிவிப்பும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ரஜினியின் ‘கபாலி’ படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை கொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகும் நாளில் நிறுவனங்கள் விடுமுறை அளிப்பது ரஜினிக்கு மட்டுமே சாத்தியம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுதாண்டா ரஜினி.. அலப்பறை கிளப்புரோம் என்கின்றனர் ரசிகர்கள்.

ஜெயிலர்

IT companys announced holiday on Rajinis Jailer release date

ARE YOU READY.? முத்துவேல் பாண்டியன் வருவதற்குள் அலெக்ஸ் பாண்டியன் ஆஜர்.!

ARE YOU READY.? முத்துவேல் பாண்டியன் வருவதற்குள் அலெக்ஸ் பாண்டியன் ஆஜர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட ஆர்வலர்கள், பார்வையாளர்கள் என சினிமா ஆர்வலர்கள் கொண்டாடும் ஒரு இடமாக கமலா சினிமாஸ் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை கொடுத்து வருகிறது.

அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எவர் க்ரீன் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘மூன்று முகம்’ படத்தின் டிஜிட்டல் ரீமாஸ்டர் செய்யப்பட்ட வெர்ஷனை கமலா சினிமாஸ் இப்போது மீண்டும் வெளியிடுகிறது.

இதுகுறித்து கமலா சினிமாஸ் உரிமையாளர் விஷ்ணு கமல் கூறும்போது,…

“எங்கள் திரையரங்குகளில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்களை பல வருடங்களாக ஒவ்வொரு பார்வையாளர்களும் இதயப்பூர்வமாக கொண்டாடி வருகின்றனர்.

தற்போது அவரது பிரம்மாண்டமான திரைப்படமான ‘மூன்று முகம்’ டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்பை மீண்டும் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆன போதிலும், ரஜினிகாந்த் சாரின் வசீகரத்திற்காகவும், சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக் மற்றும் ஸ்டைலுக்காகவும் தற்போதைய தலைமுறை இளைஞர்கள் கூட கொண்டாடுகிறார்கள்.

‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10, 2023 அன்று திரையரங்குகளில் வெளிவர இருக்கும் இந்த சூழலில், இந்தப் படத்தை மீண்டும் வெளியிடுவதன் மூலம் ரஜினிகாந்த் சாருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு கொண்டாட்டத்தைக் கொடுக்க விரும்பினோம்.

(ஜெய்லர் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டர் பெயரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.)

இந்த வெளியீட்டை எளிதாக்கிய சத்யா மூவிஸ் சார் தங்கராஜ் அவர்களுக்கு கமலா சினிமாஸ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘மூன்று முகம்’ ஆகஸ்ட் 6, 2023 கமலா திரையரங்கில் வெளியாகிறது.

மூன்று முகம்

Rajinis Moondrumugam rerelease at Chennai

‘ஜெயிலர்’ படத்தை அடுத்து ‘தலைவர் 170’ படத்திலும் மலையாள நட்சத்திரங்கள்

‘ஜெயிலர்’ படத்தை அடுத்து ‘தலைவர் 170’ படத்திலும் மலையாள நட்சத்திரங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் & விநாயகம், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கிசரஃப் உள்ளிட்ட பல இந்திய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்தப்படம் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வருவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

விரைவில் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஜினியுடன் நடிப்பவர்கள் யார் யார் ? என்ற விவரங்கள் அவ்வப்போது வெளிவருகின்றன.

இதில் நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. மேலும் தெலுங்கு நடிகர் நானியம் இந்த படத்தில் ரஜினியுடன் இணையுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘மாமன்னன்’ படத்தின் மூலம் ரத்னவேல் கேரக்டரை எங்கும் ஒலிக்கச் செய்த பகத் பாசில் ‘தலைவர் 170’ படத்தில் இணையுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ‘அசுரன்’ பட நாயகி மஞ்சு வாரியாரும் ரஜினியுடன் இணைவார் என தகவல்கள் வந்துள்ளன.

ஆக இந்த படமும் ‘ஜெயிலர்’ படம் போல மல்டி ஸ்டார் படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Fahad Fazil and Manju warrior will join in Thalaivar 170

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்.? நடிகர் இயக்குநர் சேரன் கிண்டல் பதில்

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்.? நடிகர் இயக்குநர் சேரன் கிண்டல் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகரும் இயக்குனருமான சேரன்.

அப்போது இவரிடம் சூப்பர் ஸ்டார் டைட்டில் சர்ச்சை குறித்த கேள்விகளை முன் வைத்தனர் செய்தியாளர்கள். அதற்கு சேரன் பதில் அளிக்கும் போது…

”நான் யார் இதை சொல்றதுக்கு. நான் இவங்க ரெண்டு பேரையும் வச்சு படம் பண்ணல. நான் ரசிகன் அவ்வளவுதான். எனக்கு என் பொழப்பு முக்கியம். யார் சூப்பர் ஸ்டார் என்பது எனக்கு முக்கியமில்ல” என அதிரடியாக சேரன் பதிலளித்தார்.

Who is next super star cheran reply is here

‘புரோ டாடி’ தெலுங்கு ரீமேக்.; மோகன்லால் – மீனா வேடத்தில் நடிப்பவர்கள் யார்.?

‘புரோ டாடி’ தெலுங்கு ரீமேக்.; மோகன்லால் – மீனா வேடத்தில் நடிப்பவர்கள் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2022-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ‘புரோ டாடி’.

பிருத்விராஜ் இயக்கிய இந்த படத்தில் மோகன்லால், மீனா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிக்க இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

மோகன்லால் – மீனா ஜோடியின் மகன் பிருத்விராஜ். இவர்களின் குடும்ப நண்பனின் மகள் கல்யாணி.

பிருத்வி கல்யாணி இருவரும் காதலிக்க ஒரு கட்டத்தில் கல்யாணி கர்ப்பம் அடைகிறார். இதே நேரம் பிருத்வி அம்மா மீனாவும் கர்ப்பம் அடைந்திருக்கிறார்.

இந்தத் திரைக்கதையை யதார்த்தமாக அமைத்திருந்தார் இயக்குனர் பிருத்விராஜ்.

இந்த நிலையில் ப்ரோ டாடி படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. ‘பங்கர்ராஜூ’ படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணா இயக்குகிறார்.

மோகன்லால் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்க மீனா கேரக்டரில் த்ரிஷா நடிக்கிறார்.

பிருத்விராஜ் கேரக்டரில் ஷர்வானந்தும் கல்யாணி கேரக்டரில் ஸ்ரீலீலாவும் நடிக்கின்றனர்.

Bro daddy Telugu remake actors update

கண்ணா லட்டு ரசிக்க ஆசையா.? மனதை மயக்கும் ‘சந்திரமுகி2’ போஸ்டர்

கண்ணா லட்டு ரசிக்க ஆசையா.? மனதை மயக்கும் ‘சந்திரமுகி2’ போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சந்திரமுகி 2’.

இப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தில் வேட்டையன் ராஜாவாக இருக்கும் ராகவா லாரன்ஸ் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில், ‘சந்திரமுகி -2’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மனதை மயக்கும் அழகியாக கங்கனா இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

சந்திரமுகி2

Kangana Ranaut looks stunning in the ‘Chandramukhi 2’ first look poster

More Articles
Follows