மீண்டும் மோதலுக்கு தயாராகும் விக்ரம்-தனுஷ்

vikram and dhanushபிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தொடரி’ வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.

செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை வருவதால் நான்கு நாட்களை குறிவைத்து இப்படத்தை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள இருமுகன்  செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நாளை குறிவைத்தே படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

கடந்தாண்டும் விக்ரம் மற்றும் தனுஷின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி மோதிக் கொண்டது.

விக்ரம் நடித்த ’10 எண்றதுக்குள்ள’ மற்றும் தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ ஆகிய இரு படங்களும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post