காதலனை ஹீரோவாக்கும் தயாரிப்பாளர் நயன்தாரா; யாருக்கு போட்டி.?

Nayanthara going to produce movie Vignesh Shivan as heroஅழகான திறமையான நடிகை என பெயரெடுத்தவர் நடிகை நயன்தாரா. இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கி 12 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் இன்று வரை நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.

ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

தன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளிலே இவர் கலந்துக் கொள்ளாதபோதும் இவரது கால்ஷீட்டுக்காக டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் காத்திருக்கின்றனர்.

இப்படியாக சினிமாவில் இவர் ஜொலித்துக் கொண்டிருந்தாலும் இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல காதல் தோல்விகளை கடந்து வந்திருக்கிறார்.

நடிகர் சிம்பு உடன் காதல் கொண்டிருந்தார். ஆனால் அந்த உறவு முறிந்தது.

அதன்பின்னர் நடிகர் பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருந்த இவர் திருமணம் வரை சென்ற பின், கருத்து வேறுபாடுகளால் அவரை விட்டு பிரிந்தார்.

அவருக்காக மதம் மாறி, பிரபுதேவாவின் பெயரை தன் கைகளில் கூட பச்சை குத்திக் கொண்டிருந்தார்.

அதன்பின்னர் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி நடித்துக் கொண்டிருந்தபோது நானும் ரௌடிதான் பட இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கம் கொள்ள ஆரம்பித்தார்.

இவர்களின் காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர்.

நிஜ காதலர்களை மிஞ்சும் அளவில் நெருக்கமான புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பதிவிட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்காக சிவகார்த்திகேயன் படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

ஆனால் சில பிரச்சினைகளால் அந்த படத்தை ராஜேஷ் இயக்கவுள்ளார்.

இதனையறிந்த நயன்தாரா, இனி நீங்களே படத்தை இயக்கி ஹீரோவாக நடியுங்கள். படத்தை நான் தயாரிக்கிறேன் என்ற கூறிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இனி விக்னேஷ் சிவனை நாம் ஹீரோவாக பார்க்கலாம். நயன்தாரா நாயகியாக நடிப்பாரா? என்ற தகவல்கள் இல்லை.

அதெல்லாம் சரிதான். இந்த புதிய ஹீரோ வேடம் யாருக்கு போட்டி..?

Nayanthara going to produce movie Vignesh Shivan as hero

Overall Rating : Not available

Related News

போடா போடி மற்றும் நானும் ரௌடிதான்…
...Read More
நானும் ரௌடிதான் படத்தை இயக்கியபோதே நயன்தாராவின்…
...Read More
சிம்பு நடித்த போடா போடி, விஜய்சேதுபதி…
...Read More
விக்னேஷ்சிவன் இயக்கிய 'நானும் ரெளடிதான்' படத்தில்…
...Read More

Latest Post