தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
போடா போடி மற்றும் நானும் ரௌடிதான் படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.
நானும் ரவுடிதான் படம் மாபெரும் வெற்றிப் பெற்ற ராசியை அடுத்து நயன்தாராவுடன் நெருக்கம் காட்டினார் விக்னேஷ் சிவன்.
அதன்பின்னர் சில படங்களுக்கு பாடல்கள் எழுதினாலும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. பின்னர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார்.
கிட்டதட்ட 7 வருடங்களில் 3 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். ஆனால் தன் முழு நேர வேலையாக நயன்தாராவுடன் சுற்றி வருகிறார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளாராம் விக்னேஷ் சிவன்.
அப்படத்தை ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்க நாயகியாக நயன்தாரா நடிக்கிறாராம்.
எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.