தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி.க்கு எதிரான வசனங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை பாஜக.வினர் எதிர்க்க, அவர்களுக்கு எதிராகவும் மெர்சலுக்கு ஆதரவாக நாட்டின் முக்கிய தலைவர்கள் பேச ஆரம்பித்தனர்.
தமிழக அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை கருத்து சுதந்திரம் தேவை. சென்சார் செய்யப்பட்ட படத்தில் காட்சிகளை நீக்கக் கூடாது என குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் இன்று சற்றுமுன் மெர்சலை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அப்படம் பற்றி தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில்…
`முக்கியமான தலைப்பை பேசியிருக்கிறார்கள். வெல்டன். மெர்சலுக்கு குழுவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
Important topic addressed Rajini praises Viay movie Mersal