பார்வையை இழக்கும் ரசிகரை சந்தித்த விஜய்..!

பார்வையை இழக்கும் ரசிகரை சந்தித்த விஜய்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayathalapathy Vijay Met Fan Losing Eye Sightதமிழகம் போலவே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில், கேரளாவில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய் ரசிகரான ஜிதின் என்பவர் ஏதோ ஒரு நோயின் காரணமாக பார்வையை இழந்து வருகிறார்.

ஒரு கண்ணில் முற்றும் பார்வையை இழந்த அவருக்கு மற்றொரு கண்ணில் பார்வை 25% மட்டுமே உள்ளது.

இனி தன் கண்கள் முழு பார்வையை இழக்கும் முன்பு, தனக்கு விஜய்யை காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனை ரசிகர் மன்றங்கள் விஜய்க்கு தெரிவிக்கவே, ஜிதினை சென்னைக்கு வரவழைத்து, அவருடன் நீண்ட நேரம் செலவிட்டு ஆறுதல் கூறியுள்ளார் விஜய்.

மேலும் பார்வை முழுவதும் கிடைக்க என்ன சிகிச்சையாக இருந்தாலும் செய்யுங்கள். அதற்கான செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

‘இறைவி’க்காக இணைந்த விஜய்-அஜித்-சூர்யா-சிம்பு-தனுஷ்..!

‘இறைவி’க்காக இணைந்த விஜய்-அஜித்-சூர்யா-சிம்பு-தனுஷ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Ajith Suriya Simbu Dhanush Joins for Iraiviகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, ராதாரவி, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவ்ரியா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் இறைவி.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் நாளை மறுநாள் (ஜீன் 3) ரிலீஸ் ஆகிறது.

பொதுவாக தமிழில் சில வார்த்தைகள் ஆண் பாலை மட்டும்தான் குறிக்கும். அதற்கு பெண்பால் சொற்கள் கிடையாது.

உதாரணத்திற்கு… மனிதன், வாலிபன், இளைஞன், இறைவன்

அதுபோல் சில பெண்பால் சொற்களுக்கு ஆண்பால் சொற்கள் கிடையாது.

உதாரணத்திற்கு… விதவை, மலடி உள்ளிட்டவை.

எனவே, பெண்களுக்கான சில வார்த்தைகளை உருவாக்கி கார்த்திக் சுப்புராஜ் படக்குழுவினர் புதிதாக சில வார்த்தைகளை அறிமுகம் செய்துள்ளனர்.

அதில் மனிதன் சொல்லுக்கு நிகராக மனிதி என்றும், இறைவன் என்ற சொல்லுக்கு இறைவி என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போது இறைவி படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக என் இறைவி என் பெயரில் அஜித்-ஷாலினி, விஜய்-சங்கீதா, சூர்யா-ஜோதிகா, தனுஷ்-அவரது அம்மா, சிம்பு-அவரது அம்மா ஆகியோரது படங்களை டிசைன் செய்து உலாவ விட்டுள்ளனர்.

ரசிகர்களும் தங்கள் இறைவி படத்துடன் இதை ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.

எனவே இணையங்களில் என் இறைவி ட்ரெண்ட்ங்கில் உள்ளது.

மாதவனுடன் இணையும் சிவகார்த்திகேயனின் தாத்தா..!

மாதவனுடன் இணையும் சிவகார்த்திகேயனின் தாத்தா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madhavan May Work With Raj Kiranஇறுதிச்சுற்று என பெயர் வைத்ததால், அப்படமே மாதவனுக்கு இறுதிச்சுற்றாய் அமையும் என கோலிவுட் செண்டிமென்டர்கள் சொன்னார்கள்.

ஆனால், அது மாதவனின் இரண்டாவது சுற்றுக்கு ஆரம்பமானது.

தற்போது புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் மாதவன்.

இதனையடுத்து கரு. பழனியப்பன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இதில் முக்கிய வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனின் தாத்தாவாக நடித்து, ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தார் ராஜ்கிரண் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

‘மருமக மிரட்டுறா… அம்மா காப்பாத்துங்க…’ கதறும் சிவசங்கர்..!

‘மருமக மிரட்டுறா… அம்மா காப்பாத்துங்க…’ கதறும் சிவசங்கர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dance Master Shivashankar Reportநடன இயக்குனர், நடிகர் என் பன்முகம் கொண்டவர் சிவசங்கர்.

ஆயிரத்திற்குக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ள இவர் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரது மருமகள் இவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிவசங்கர் கூறியதாவது… “எனது மகன் விஜய் கிருஷ்ணாவுக்கும் ஜோதிக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தற்போது நாங்கள் வரதட்சணை கேட்டதாக மருமகள் ஜோதி தெரிவித்துள்ளார். நாங்கள் கேட்கவில்லை.

சில பிரச்சினைகள் எழுந்ததால், அவர்களை தனிக்குடித்தனம் வைத்தோம். ஆனால் பிரச்சினை தீராத காரணத்தால், என் மகன் என் வீட்டுக்கே வந்துவிட்டார்.

தற்போது சமாதானத்திற்கு பிறகு என் மகன் அவருடன் சேர்ந்து வாழ காத்திருக்கிறார்.

ஆனால் எங்களை சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டுள்ள ஜோதி, எங்களை மிரட்டுகிறார். ரூ.10 கோடி கேட்டு மிரட்டுகிறார்.

மாண்புமிகு முதல்வர்தான் இப்பிரச்சினையில் தலையிட்டு எங்களை காப்பாற்றவேண்டும்” என்று தெரிவித்துள்ளார் சிவசங்கர்.

அஜித்தின் ரெண்டு பாலிசியை பற்றிக் கொண்ட நயன்தாரா..!

அஜித்தின் ரெண்டு பாலிசியை பற்றிக் கொண்ட நயன்தாரா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara follows Ajith two Policyதமிழ் சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாராதான்.

அறிமுக ஹீரோ, டாப் ஹீரோ என பேதம் பார்க்காமல் எவருடன் வேண்டுமானாலும் நடிப்பவர் இவர்.

ஆனால், இவர் மீது இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு இதுதான். அதாவது தன் பட புரமோஷன், இசை வெளியீட்டு விழா என எதிலும் கலந்து கொள்ளாதவர் என்பதுதான்.

இதனால் இவரை லேடி அஜித் என்று கூறுவோரும் உண்டு.

தற்போது அஜித்தின் மற்றொரு பாலிசியையும் கடைபிடிக்கிறாராம் நயன்தாரா.

முன்பெல்லாம் தானுண்டு, கேரவன் உண்டு என்றிருந்த நயன்தாரா, இப்போதெல்லாம் தன் காட்சி முடிந்துவிட்டாலும் சக நடிகர்கள் நடிக்கும் நடிப்பை தளத்திலேயே உட்கார்ந்து பார்க்கிறாராம்.

அஜித்தும் இப்படிதான் சக நடிகர்களை ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெற்றிவேல் நாயகியை விடாத கிடாரி சசிக்குமார்…!

வெற்றிவேல் நாயகியை விடாத கிடாரி சசிக்குமார்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nikhila Again Team up With Sasi kumar's kidaari Movieதாரை தப்பட்டை, வெற்றிவேல் படங்களைத் தொடர்ந்து கிடாரி படத்தில் நடித்து வருகிறார் சசிகுமார்.

வசந்தபாலனின் உதவியாளர் பிரசாத் முருகேசன் இயக்கி வரும் இப்படத்தை படத்தின் நாயகனே தயாரிக்கிறார்.

இவரின் ஜோடியாக வெற்றிவேல் நாயகிகளில் ஒருவரான நிகிலா நடித்து வருகிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக நடிகர் தர்புகா சிவா அறிமுகமாகிறார். ‪‎

ராஜதந்திரம் படத்தில் இவரது நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹீரோவாகி வரும் நிலையில், ஒரு நடிகர் இசையமைப்பாளராக மாறியிருப்பது ஆச்சரியம்தான்.

More Articles
Follows