நடிகை ரைசா முகத்தில் நலுங்கு வைத்தது யார் ? அதிர்ச்சியில் ரசிகர்கள் !

நடிகை ரைசா முகத்தில் நலுங்கு வைத்தது யார் ? அதிர்ச்சியில் ரசிகர்கள் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘காஃபி வித் காதல்’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார் நடிகை ரைசா. படங்களில் ஒரு பக்கம் பிஸியாக நடித்து வரும் ரைசா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் படு ஆக்டிவ்.

அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வரும் இவரை 1,6 மில்லியன் பாலோவேர்ஸ் பின் தொடருகின்றனர்.

இந்நிலையில் அவர் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சோகமாக அழும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பது தொடர்பான தகவல்களை அதில் பதிவிடவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.

Raiza crying photos viral in social media

தினமும் 15 முதல் 20 பேரால் பலாத்காரம் – ‘தி கேரளா ஸ்டோரி’ நடிகை அதா சர்மா அதிரடி பேட்டி

தினமும் 15 முதல் 20 பேரால் பலாத்காரம் – ‘தி கேரளா ஸ்டோரி’ நடிகை அதா சர்மா அதிரடி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம் ‘தி கேரளா ஸ்டோரி’.

இப்படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, ‘வெந்து தணிந்தது காடு’ படப்புகழ் சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த மே 5-ம் தேதி தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியானதும், கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது.

கேரளாவிலேயே பல திரையரங்குகள் பட வெளியீட்டுக்கு முன்வரவில்லை.

தமிழகத்திலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேற்கு வங்காள அரசு படத்திற்கு தடை விதித்தது.

சுப்ரீம் கோர்ட்டு அந்த தடைக்கு இடைக்கால தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், நடிகை அதா சர்மா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் மீது மக்கள் அன்பும், ஆதரவும் காட்டி இருக்கிறீர்கள்.

இப்படம் கட்டாய மதமாற்றத்தில் பாதிக்கப்பட்டு, உண்மையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த இளம்பெண்களின் பின்னணியை பற்றி கவனித்து கேளுங்கள். அவர்களை பாராட்டுங்கள் என பேசியுள்ளார்.

ஓராண்டில் பல முறை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்களால் எப்படி சான்று தர முடியும் என கேட்டுள்ளார்.

அப்போது, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் வரும் நிமா என்ற பெண்ணின் வேடம் பற்றி குறிப்பிட்டு பேசிய அதா சர்மா.

அவர் தினசரி 15 முதல் 20 பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார். அதற்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முற்படுகிறார். அதற்கு அவர்கள் சான்று கேட்கின்றனர்.

இதுபற்றி சர்மா கூறும்போது, 15 பேர் ஒரு மாதத்திற்கு தொடர்ச்சியாக உங்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் என்றால், நீங்கள் என்ன சான்று தருவீர்கள்?

மேலும், இப்படத்தில் சர்மாவின் வேடம் (ஷாலினி) காதலில் துரோகத்திற்கு ஆளாகிறாள்.

காதலில் துரோகம் செய்யப்பட்டதற்கு எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்? என கேட்டு பேசியுள்ளார்.

தி கேரளா ஸ்டோரி

Rape by 15 to 20 people everyday – ‘The Kerala Story’ actress Adah Sharma

ஹைதராபாத் பறக்கும் ‘லியோ’ டீம்.; விஜய்க்கு சஞ்சய் தத் யார்.?

ஹைதராபாத் பறக்கும் ‘லியோ’ டீம்.; விஜய்க்கு சஞ்சய் தத் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

‘லியோ’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

விஜய் மற்றும் சஞ்சய் தத் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீர் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், ‘லியோ’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக சஞ்சய் தத் நடித்து வருவதாகவும், இருவரும் இந்த படத்தில் கேங்ஸ்டர் ஆக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அடுத்த மாதம் ஹைதராபாத்தில் படமாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sanjay dutt act vijay father role in leo

அரசியல் வாதிகளால் வாழ்க்கையை இழந்த நடிகை கங்கனா!

அரசியல் வாதிகளால் வாழ்க்கையை இழந்த நடிகை கங்கனா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை கங்கனா ரணாவத் அரசியல் கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

இந்த நிலையில் கங்கனா ரணாவத் அளித்துள்ள பேட்டியில், “அரசியல், சினிமா, சமூகப் பிரச்சினை எதுவாக இருந்தாலும் உடனே நான் கண்டனம் தெரிவிக்கிறேன். இதன் காரணமாக சில அரசியல் தலைவர்கள் நான் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் செய்து விட்டார்கள்.

சுமார் 30 விளம்பரங்களில் நடிக்க நான் ஒப்பந்தமாகி இருந்த நிலையில் இரவோடு இரவாக அவற்றை ரத்து செய்துவிட்டனர். இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு ரூ.30 முதல் ரூ.40 கோடி வருவாய் இழந்துவிட்டேன் என்றார்.

Actress Kangana who lost her life to politicians

தனுஷ் படத்தை தயாரிக்கும் கமல்.; ரஜினி – விஜய் பட இயக்குனருடன் கூட்டணி.?!

தனுஷ் படத்தை தயாரிக்கும் கமல்.; ரஜினி – விஜய் பட இயக்குனருடன் கூட்டணி.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் கமல்ஹாசன். இது கமல் நடிப்பில் உருவாகும் #Kamal234வது படமாகும்.

நடிப்பு ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் தயாரிப்பு பணிகளில் அதிக ஆர்வத்தை காட்டி வருகிறார் கமல்ஹாசன்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தையும் சிம்பு நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார் கமல்ஹாசன்.

மேலும் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை கமல் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரைவில் தனுஷ் நடிக்க உள்ள படத்தை கமல் தயாரிக்கிறார் எனவும் அந்த படத்தை ஜெயிலர் இயக்குனர் நெல்சன் இயக்குவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் விஜய் நடித்த பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே விரைவில் கமல் – தனுஷ் படம் பற்றிய முறையான அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Kamal will produce Dhanush movie

விபத்திலிருந்து விஸ்வரூபமெடுத்த விஜய் ஆண்டனியின் காதல் சொட்டும் ‘கல்லூறும் பூவே’ பாடல்.!

விபத்திலிருந்து விஸ்வரூபமெடுத்த விஜய் ஆண்டனியின் காதல் சொட்டும் ‘கல்லூறும் பூவே’ பாடல்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் நடிகர் என மக்கள் மத்தியில் அறியப்பட்ட விஜய் ஆண்டனி தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.

இந்த படம் நாளை மே 19 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விஜய் ஆண்டனி இசையமைத்து தயாரித்துள்ள இந்த படத்தில் காவ்யா தப்பார் நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற கல்லூரும் பூவே என்ற பாடல் மலேசியாவில் படமாக்கப்பட்டபோது ஒரு பெரிய விபத்தில் சிக்கினார் விஜய் ஆண்டனி. அதிலிருந்து மீண்டு வந்து தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படத்தை அதிலே செய்யும் பணிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவரது மனைவி பாத்திமா சமீபத்தில் *கணவரின் கதை முடிந்து விட்டதாக கூட நினைத்தேன்.. ஆனால் மக்கள் அன்பினால் அவர் மீண்டும் வந்துள்ளார்* என உருக்கமாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது கல்லூறும் பூவே என்ற வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அருண் பாரதி பாடல் எழுத சரத் சந்தோஷ் மற்றும் மது ஸ்ரீ இந்த பாடலை பாடியுள்ளனர்.

Here is a mellifluous melody 🥰 #KalloorumPoove 🫶🏽🩷 from #Pichaikkaran2

▶️ https://t.co/Ys5WUVLxGH

Kalloorum Poove song release from ‘Pichaikkaran 2’

More Articles
Follows