சிம்புவே ரூட்டை மாத்திட்டாரூ.. ஹிப் ஹாப் ஆதி வந்துட்டாரூ.; ஒர்க் அவுட் ஆகுமா.?

சிம்புவே ரூட்டை மாத்திட்டாரூ.. ஹிப் ஹாப் ஆதி வந்துட்டாரூ.; ஒர்க் அவுட் ஆகுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி மற்றும் ‘மரகத நாணயம்’ புகழ் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் ஆகியோர் ஒன்றிணைந்திருக்கும் படம் ‘வீரன்’.

மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த மின்னல் முரளி பட பாணியில் மின்னல் சார்ந்த சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

இதில் ஆதி, ஆதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தீபக் டி மேனன் ஒளிப்பதிவில் ஜி.கே. பிரசன்னா, படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் ‘வீரன்’ படத்தை வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணைந்து தயாரித்துள்ளனர்.

பிரபல சக்தி ஃபிலிம் பேக்டரி தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு உரிமையை பெற்றுள்ளது

இந்த ‘வீரன்’ படம் ஜூன் 2, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் நாளை மே 20 ஆம் தேதி சென்னையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் சிம்புவின் விரல் வித்தை பாணியில் நடிகர் ஆதியும் விரல் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது சிம்புவே அவரது ஸ்டைலை மாற்றி உள்ள போது சிம்பு ஸ்டைலுக்கு ஆதி வந்துள்ளார். இது ஒர்க் அவுட் ஆகுமா.? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

Be there to Witness the GRAND TRAILER launch of Namma Tamil Super Hero #Veeran at EXPRESS AVENUE MALL ( chennai ),
6PM onwards with @hiphoptamizha & Veeran team ⚡🎉🥁

#VeeranTrailerTomorrow

@ArkSaravan_Dir @VinayRai1809 @saregamasouth @SakthiFilmFctry @SathyaJyothi https://t.co/FglUeJEYk7

Hip hop aadhi follows simbu way. Will it work?

சாப்ட்வேர் இன்ஜினியரை மணக்கும் நடிகர் சர்வானந்த்.; வதந்திக்கு முற்றுப்புள்ளி.!

சாப்ட்வேர் இன்ஜினியரை மணக்கும் நடிகர் சர்வானந்த்.; வதந்திக்கு முற்றுப்புள்ளி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2004ம் ஆண்டு ‘இடவா தரீக்கு’ படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர் நடிகர் சர்வானந்த்.

நடிகர் சர்வானந்த் தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’, ‘நாளை நமதே’, ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் அதிக படங்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வந்தார்.

சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிச்சயதார்த்தம் சில காரணங்களால் நின்று போனதாக தெலுங்கு இணைய தளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பு தகவல் பரவி வந்தது.

இதனை சர்வானந்த் குடும்ப நண்பர் ஒருவர் மறுத்து இருந்தார்.

சர்வானந்த் 40 நாட்கள் லண்டனில் படப்பிடிப்புக்காக சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பி இருக்கிறார் என்றும், திருமண வேலைகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

ஆனாலும் நிச்சயதார்த்தம் நின்றுபோனதாக தொடர்ந்து தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது திருமண தேதியை சர்வானந்த் அறிவித்து இருக்கிறார்.

ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி சர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி திருமணம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சர்வானந்த்

Sharwanand And Rakshita Shetty Wedding In Jaipur On June 3

மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்த ஆறுமுக குமார்.; மலேசியாவில் ஆரம்பம்.!

மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்த ஆறுமுக குமார்.; மலேசியாவில் ஆரம்பம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விஜய் சேதுபதி

கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆர்.கோவிந்தராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து மேற்கொள்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளை தினேஷ்குமார் சுப்பராயன் அமைக்கிறார்.

ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 7 C ஸ் என்டர்டெய்ன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இதனிடையே இயக்குநர் பி. ஆறுமுக குமார், விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது என்பதும், ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தினை இயக்கி இவர், 2வது முறையாக இணைந்திருக்கிறார் என்பதும், இதன் காரணமாக இப்படத்திற்கு தொடக்க நிலையிலேயே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி

Vijay Sethupathi joins Arumuga Kumar for his next

இடது கையை செயல் இழந்த நடிகர் சல்மான் கான்.. மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை

இடது கையை செயல் இழந்த நடிகர் சல்மான் கான்.. மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான்.

சல்மான் கான் தற்போது ‘டைகர் 3’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘டைகர் 3’ ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும்.

இப்படத்தை இயக்குனர் மனீஷ் சர்மா இயக்குகிறார்.

இந்நிலையில், இன்று நடிகர் சல்மான் கானின் இடது தோளில் காயம் ஏற்பட்டுள்ளது.

“ஐந்து கிலோ எடையுள்ள டம்பல்” தூக்கும் போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் காயத்தின் வலியைக் குறைக்க அவர் பேண்டேஜ் அணிந்துள்ளது தெரிகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சல்மான் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

மேலும், ‘டைகர் 3’ படம் வரும் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கான்

salman khan left hand bone broken

ஆண்டனி தாசன் இயற்றிய தந்தையின் தாலாட்டுப் பாடல்

ஆண்டனி தாசன் இயற்றிய தந்தையின் தாலாட்டுப் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா மியூசிக் மற்றும் கேன்வாஸ் ஸ்பேஸ் இணைந்து ஒரு வலையொளி (பாட்காஸ்ட்) தொடரை வெளியிடுகின்றன.

சென்னையைத் தளமாகக் கொண்ட இசை லேபிள் ஆன பா மியூசிக், தன்னார்வம் கொண்ட இசைக்கலைஞர்களுக்கு ஆதரவளித்து வருகிறது.

பா மியூசிக்கும் கேன்வாஸ் ஸ்பேஸும் இணைந்து ஆண்டனி தாசனின் பாடலை, பாட்காஸ்ட்டின் முதல் எபிசோட் ஆக வெளியிடுகிறார்கள்.

பாட்காஸ்டின் தொடக்க எபிசோடில் ஆண்டனி தாசன் இயற்றிப் பாடிய ஒரு தந்தையின் தாலாட்டுப் பாடல் இடம்பெறுகிறது.

இது தாய்மார்கள் பாடும் பாரம்பரிய தாலாட்டுப் பாடல்களிலிருந்து விலகி, ஒரு தந்தையாக ஆண்டனி தாசன் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வருகிறார்.

அந்தோணி தாசன், தனது தனித்துவமான குரலுக்காகவும், உள்ளத்தை உருக்கும் வரிகளுக்காகவும் அறியப்பட்டவர்.

அவர், “இந்தத் தாலாட்டை எழுதுவது எனக்கு ஒரு முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியது.

ஒரு தந்தையாக, நான் உண்மையிலேயே ஆழ்ந்த அர்த்தமுள்ள தாலாட்டுப் பாடல் ஒன்றை உருவாக்க விரும்பினேன்.

என் மனதுக்கு நெருக்கமான இந்த அனுபவத்தை என்னுடைய நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்கிறார்.

இந்தப் பாட்காஸ்ட் தொடர் பல்வேறு இசை மரபுகளைச் சார்ந்த கலைஞர்களின் பன்முகத் தன்மையுடைய திறமைகளை வெளிப்படுத்துவதாக அமையும். அந்தோணி தாசன் போன்ற துடிப்பான கலைஞர்களின் திறமையை ஆதரிப்பதன் மூலம் பா மியூசிக்கும் கேன்வாஸ் ஸ்பேஸும் இணைந்து கலைத்திறனை வளர்ப்பதையும் தன்னார்வ கலைஞர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

பாட்காஸ்ட்

The inaugural episode of the podcast will feature a heartfelt lullaby sung by anthonydaasan

நடிகை ரைசா முகத்தில் நலுங்கு வைத்தது யார் ? அதிர்ச்சியில் ரசிகர்கள் !

நடிகை ரைசா முகத்தில் நலுங்கு வைத்தது யார் ? அதிர்ச்சியில் ரசிகர்கள் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘காஃபி வித் காதல்’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார் நடிகை ரைசா. படங்களில் ஒரு பக்கம் பிஸியாக நடித்து வரும் ரைசா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் படு ஆக்டிவ்.

அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வரும் இவரை 1,6 மில்லியன் பாலோவேர்ஸ் பின் தொடருகின்றனர்.

இந்நிலையில் அவர் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சோகமாக அழும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பது தொடர்பான தகவல்களை அதில் பதிவிடவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.

Raiza crying photos viral in social media

More Articles
Follows