‘வீரன்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்தது சத்யஜோதி பிலிம்ஸ்

‘வீரன்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்தது சத்யஜோதி பிலிம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மரகத நாணயம்’ புகழ் இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடித்துள்ள படம் ‘வீரன்’.

இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஆதிரா ராஜ் நாயகியாக நடிக்க, முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

‘ஹிப் ஹாப்’ ஆதி படத்திற்கு இசையமைக்க, தீபக் டி.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில், ‘வீரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படம் வரும் ஜூன் 2ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வீரன்

Hip Hop Adhi’s Veeran to release on June 2

விஜய் – சமந்தா இணைந்த ‘குஷி’ பட சிங்கிள் ட்ராக் & மூவி ரிலீஸ் அப்டேட்

விஜய் – சமந்தா இணைந்த ‘குஷி’ பட சிங்கிள் ட்ராக் & மூவி ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ குஷி’ படத்தில் இடம்பெற்ற ‘என் ரோஜா நீயா..’ என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘குஷி’ திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடலுக்கு ‘என் ரோஜா நீயா..’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

‘என் ரோஜா நீயா ..’ எனும் பாடலின் மெட்டிற்கும், பாடல் வரிகளுக்கும் விஜய் மற்றும் சமந்தா திரையில் தோன்றி காதல் உணர்வை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதிய பாடல் வரிகளில் கதையின் நாயகனான விஜய், காதல் மீது கொண்ட பேரார்வத்தின் காரணமாக காதலை விவரிக்கிறார்.

காஷ்மீரின் பசுமையான நிலவியல் பின்னணியுடன் தொடங்கும் இந்த பாடலுக்கான காணொளியில் நடிகர் விஜய் பொருத்தமான காதலராகவும், சமந்தா அவருக்கு ஏற்ற அழகிய காதலியாகவும் தோன்றுகிறார்கள்.

ஹேஷாமின் இசையமைப்பும், அவரது சொந்தக் குரலும் பாடலின் ஜீவனுடன் ஒன்றிணைந்திருக்கின்றன. அவர் இனிமையான மற்றும் புதுமையான பாடலை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடல் தரமான இசையை கேட்பவருக்கு நிச்சயம் பிடிக்கும்.

இயக்குநர் சிவா நிர்வாணா மணிரத்னத்தின் ரசிகர் என்பதால், இந்த பாடலில் இடம்பெற்ற சில காட்சிகள், மணிரத்னம் படத்தின் அதிர்வை பிரதிபலிக்கின்றன. இந்தப் பாடலுக்கு சிவா நிர்வாணா நடனமும் அமைத்திருக்கிறார்.

‘குஷி’ திரைப்படம் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்திருக்கும் காதல் கதை. இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் பாடலை முதல் பாடலாக வெளியிட்டு, ரசிகர்களிடத்தில் கவனத்தை கவர்ந்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிதி பங்களிப்புடன் சிவா நிர்வாணா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதியன்று வெளியாகிறது.

இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, ரோகிணி, வெண்ணலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹேப் இசையமைத்திருக்கிறார்.

முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளான இன்று அவரது நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாக இருக்கும் ‘குஷி’ படத்திலிருந்து முதல் பாடல் வெளியிடப்பட்டிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Kushi’s First Song En Roja Neeye Is a Beautiful Melody

BREAKING பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்கு

BREAKING பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தன் திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் இயக்குனர் பா ரஞ்சித். ஓரிரு படங்களை இயக்கிய இவருக்கு ரஜினியின் கபாலி காலா என தொடர்ந்து இரு படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார். விரைவில் கமல்ஹாசன் படத்தை இயக்க உள்ளார்.

இவரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த பலரும் தற்போது இயக்குனர்களாக மாறி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவரின் உதவியாளர்கள் ஒருவரான விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் 30ல் சென்னை ராஜரத்தினம் அரங்கில் அபிராமபுரம் முத்தமிழ்பேரவை நிகழ்ச்சியில் இந்து கடவுள்களான ராமர், சீதா, அனுமனை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக விடுதலை சிகப்பி மீது புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A case filed against Pa Ranjith’s assistant director Viduthalai Sikappi in 5 sections

அனுஷ்கா – தனுஷ் இணையும் புது படம். வேற லெவல் அப்டேட்

அனுஷ்கா – தனுஷ் இணையும் புது படம். வேற லெவல் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை அனுஷ்கா நடிக்கும் புதிய படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

சமீபத்திய அப்டேட் என்னவென்றால், ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளில் ஒரு பெப்பி பாடலை பாடுவதற்கு தனுஷ் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் இசையமைப்பாளர் ரதன், தனுஷை அணுகியதாகவும், பாடலின் முக்கியத்துவத்தை அறிந்து ஒப்புக்கொண்டதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யாவுடன் அனுஷ்கா நடித்த ‘இரண்டாம் உலகம்’ பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush joins Anushka Shetty’s next?

அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட சூட்டிங் அப்டேட்.; விடாமல் நடத்த இயக்குநர் முடிவு.?!

அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட சூட்டிங் அப்டேட்.; விடாமல் நடத்த இயக்குநர் முடிவு.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித், இயக்குனர் மகிழ் திருமேனியுடன் தனது 62வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி அன்று லைகா தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 22ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது.

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை 70 நாட்கள் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதில் அஜித்தின் பகுதி 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளது.

அஜித் தற்போது உலக பைக் பயணத்தை முடித்த பிறகு இதில் இணைவார் எனவும் கூறப்படுகிறது.

மேலும், அஜித் கடைசியாக நேபாளத்தில் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ajith’s ‘Vidaamuyarchi’ first schedule shooting to go on for 70 days

‘தி கேரளா ஸ்டோரி-க்கு தமிழகத்தில் இடமில்லை.; திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி முடிவு

‘தி கேரளா ஸ்டோரி-க்கு தமிழகத்தில் இடமில்லை.; திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம் ‘தி கேரளா ஸ்டோரி’.

இதில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, ‘வெந்து தணிந்தது காடு’ படப்புகழ் சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்டது.

இந்தப் படத்துக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இப்படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், திட்டமிட்டபடி கடந்த மே 5-ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியானது.

தமிழகத்தில் சென்னையில் 12 தியேட்டர்களிலும் கோவையில் 3 தியேட்டர்களிலும் இந்தப் படம் வெளியானது.

‘தி கேரளா ஸ்டோரி’ படம் தற்போது தமிழகத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், திரையரங்குகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை நேற்று முதல் நிறுத்துவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், இச்செய்தியை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

‘The Kerala Story’ stops screening in Tamil Nadu

More Articles
Follows