‘காதர் பாட்சா’வை காலி செய்து ‘வீரனை துரிதமாக நெருங்கும் ‘சண்டியர்’ ஜெகன்

‘காதர் பாட்சா’வை காலி செய்து ‘வீரனை துரிதமாக நெருங்கும் ‘சண்டியர்’ ஜெகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஜூன் 2ம் தேதி தமிழ் சினிமாவில் 3க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீசானது.

இதில் முக்கியமாக இரண்டு படங்கள் ரிலீஸ்க்கு முன்பே ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

1) முத்தையா இயக்கத்தில் ஆர்யா சித்தி இதானி நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க பிரபு ஆடுகளம் நரேன் தமிழ் விஜி உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

2) ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து நடித்த படம் ‘வீரன்’. இந்த படத்தை ஏ ஆர் கே சரவணன் இயக்க சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருந்தது.

ஆர்யா மற்றும் ஆதி ஆகிய இருவரும் முன்னணி நடிகர்கள் என்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘காதர் பாட்சா’ என்ற படம் பெரும் மோசமான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் ‘சண்டியர்’ ஜெகன் நடித்துள்ள ‘துரிதம்’ என்ற படம் பெரும்பாலும் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனிவாசன் இயக்கத்தில் திருவருள் ஜெகநாதன் தயாரிப்பில் ‘சண்டியர்’ ஜெகன்,
ஈடன், ஏ.வெங்கடேஷ் , பாலசரவணன், பூ ராமு, ராமச்சந்திரன் (ராம்ஸ்), வைஷாலி, ஸ்ரீநிகிலா, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தான் ‘துரிதம்’.

Thuridham gets good response compared to KEM and Veeran

“நாட்டையே உலுக்கிய ரெயில் விபத்து”; ‘இதயக்கூடும் நொறுங்கிவிட்டது’ – வைரமுத்து வேதனை

“நாட்டையே உலுக்கிய ரெயில் விபத்து”; ‘இதயக்கூடும் நொறுங்கிவிட்டது’ – வைரமுத்து வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீப காலமாக ரயில் விபத்துக்கள் பெரிதும் தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு நடந்த இந்த கோர விபத்து பல உயிர்களை பலி வாங்கி உள்ளது நாட்டையே உலுக்கியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது.

இதில், இதுவரை 250-க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல் மீட்புப் பணியாளர்க்குத் தலைதாழ்ந்த வணக்கம் இருந்த இடத்தில் எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன் கண்ணீர் கன்னம் தாண்டுகிறது” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

orissa train accident vairamuthu express condolence

சிரஞ்சீவி தம்பி மகனை திருமணம் செய்யும் சசிகுமார் பட நாயகி

சிரஞ்சீவி தம்பி மகனை திருமணம் செய்யும் சசிகுமார் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் வருண் தேஜ்.

இவர் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான நாகேந்திர பாபுவின் மகன் ஆவார்.

தமிழ் சினிமாவில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை லாவண்யா.

இந்த நிலையில் வருண் தேஜ் மற்றும் லாவண்யா ஆகிய இருவரும் ஓரிரு தெலுங்கு படங்களில் இணைந்து ஜோடியாக நடித்தனர்.

அப்போது இருவரும் காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இவர்கள் நிச்சயதார்த்தம் வரும் ஜூன் 9-ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது.

இவர்களின் திருமணத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Varun Tej and Lavanya Tripathi to get engaged on june 9

‘தர்பார்’ படத்தை விட ‘ஜெயிலர்’ பட காமெடி வேற லெவல்.; யோகி பாபு அப்டேட்

‘தர்பார்’ படத்தை விட ‘ஜெயிலர்’ பட காமெடி வேற லெவல்.; யோகி பாபு அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு.

ஒரு பக்கம் காமெடியில் கலக்கி கொண்டு இருந்தாலும் மறுபக்கம் கதையின் நாயகனாக பல படங்களின் அடுத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் ஆஸ்தான காமெடி நடிகர் தற்போது இவர் தான்.

ரஜினி விஜய் அஜித் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடனும் இவர் நடித்துள்ளார்.

தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார். இதற்கு முன்பு நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா டாக்டர் ஆகிய படங்களில் யோகி பாபு காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

அதுபோல ‘தர்பார்’ படத்தில் ரஜினி – யோகி பாபுவின் காமெடி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

எனவே ரஜினி யோகி பாபு நெல்சன் ஆகியோரது கூட்டணியில் தற்போது காமெடிக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் தன்னுடைய காமெடி ட்ராக் குறித்து யோகி பாபு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

‘தர்பார்’ படத்தில் ஓரளவுக்கு ஓட்டியிருந்தோம். இந்த படத்தில் இன்னும் புல்லாவே ஓட்டியிருக்கோம்.

காமெடி வித்தியாசமாக இருக்கும். எப்போதும் உடன் நடிக்கும் காமெடி நடிகர்களுக்கு அந்த அளவுக்கு சுதந்திரம் கொடுப்பார் ரஜினி” என யோகிபாபு கூறியுள்ளார்.

The comedy of ‘Jailor’ is on a different level than ‘Darbar’- Yogi Babu

கார்த்தி – சிம்பு – உதயநிதி பட நடிகையுடன் உலகம் சுற்றும் நடிகர் சித்தார்த்

கார்த்தி – சிம்பு – உதயநிதி பட நடிகையுடன் உலகம் சுற்றும் நடிகர் சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘காற்று வெளியிடை’, செக்கச் சிவந்த வானம்’, ஹே சினாமிகா மற்றும் ‘சைக்கோ’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை அதிதி ராவ்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மாநில மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

அதுபோல தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் சித்தார்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள டக்கர் திரைப்படம் வருகிற ஜூன் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் சித்தார்த் மற்றும் அதிதி ஆகிய இருவரும் தற்போது நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதனை நிரூபிக்கும் வகையில் மும்பை ஏர்போர்ட்டில் இருவரும் விமானத்தில் வெளிநாடு பறக்க வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கோடை விடுமுறையை ஒன்றாக கழிக்க வெளிநாடு பறந்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோக்கள் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Aditi Rao Hydari flies with boyfriend actor Siddharth

மீண்டும் இணையும் சூர்யா – கார்த்தி.. வில்லனாகும் அரவிந்தசாமி.; இயக்குனர் இவரா?

மீண்டும் இணையும் சூர்யா – கார்த்தி.. வில்லனாகும் அரவிந்தசாமி.; இயக்குனர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற படத்தை தயாரித்தவர் நடிகர் சூர்யா. 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்த இந்த படத்தில் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தன் தம்பியை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளார் சூர்யா. இதில் கார்த்திக்கு வில்லனாக அரவிந்தசாமி நடிக்கிறார் என தெரிய வந்துள்ளது.

இந்த படத்தை 96 பட புகழ் இயக்குனர் பிரேம் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பெரும் வெற்றி பெற்ற 96 படத்திற்கு பிறகு எந்த படத்மையும் பிரேம் இயக்கவில்லை. தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் ஒப்புக்கொண்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Again Suriya and Karthi teamsup Arvindsamy as baddie

More Articles
Follows