தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
40 வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘துடிக்கும் கரங்கள்’. தற்போது ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை தயாரிப்பில் அதே டைட்டிலில் உருவாகி இருக்கும் படத்தில் விமல் நாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளார். மேலும் வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் இணை தயாரிப்பாளர்களாக இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளனர்.
கதாநாயகியாக மிஷா நரங் நடித்துள்ள இப்படத்தில் சதீஷ், சுரேஷ் மேனன், சவுந்தர்ராஜா, இயக்குநர் சண்முகம், சங்கிலி முருகன், பில்லி முரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மணி சர்மாவின் சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை ராம்கோபால் வர்மா படங்களில் பணியாற்றிய ராமி கவனித்துள்ளார்.
படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோரும் கலை வடிவமைப்பை எஸ்.கண்ணனும் சண்டைப் பயிற்சியை சிறுத்தை கே.கணேஷ்குமாரும் மேற்கொண்டுள்ளனர். பாடல்களை விவேகா எழுதியுள்ளார்.
இந்த படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து துடிக்கும் கரங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக-23) மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர்கள் பேரரசு, வசந்தமணி, திருமலை நடிகர்கள் ரோபோ சங்கர், காளிவெங்கட் , டேனி போப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் நடிகர் சவுந்தர்ராஜா பேசும்போது…
“முன்பெல்லாம் குழந்தைகளிடம் படித்து என்னவாக போகிறாய் என்று கேட்டால் டாக்டராக, கலெக்டராக ஆகப்போகிறேன் என்று சொல்வார்கள். ஆனால் இன்றுள்ள குழந்தைகளிடம் கேட்டால் பெரிய யூடியூபராக வரப் போகிறேன் என்று சொல்லும் அளவுக்கு மீடியா பவர்ஃபுல்லாக மாறி உள்ளது.
அதே சமயம் எல்லோருமே மீடியா ஆகிவிட்டதால் நல்ல விஷயத்தை விட கெட்ட விஷயம் அதிக அளவில் சென்றடைகிறது.
வாட்ஸ் அப், யூட்யூப் சொல்லும் விஷயங்களை பெரும்பாலான மக்கள் அப்படியே நம்பி விடுகின்றனர். அதனால் சொல்லும் விஷயத்தை எந்த அளவிற்கு அதில் உண்மை தன்மை இருக்கு என்று தெரிந்து கொண்டு செல்வது நல்லது.
இந்த படத்தின் கதாநாயகன் விமல் ஒரு யூடியூபராக நடித்துள்ளார். இன்று சென்னைக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகம். அதனாலேயே இங்கே ஆரோக்கியம் இல்லாத உணவு, குறிப்பாக பிரியாணி அதிகப்படியாக பயன்பாட்டில் இருக்கிறது.
அதன் பின்னணியில் இருக்கும் சென்சிட்டிவான விஷயத்தை பொழுதுபோக்கு அம்சத்துடன் இயக்குனர் வேலுதாஸ் கூறியுள்ளார்.” என்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் சண்முகம் பேசும்போது…
“சினிமாவை நம்பி கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் வேலை செய்கின்றனர். அதனால் அரசாங்கம் இதன் மேல் கவனம் செலுத்த வேண்டும். இயக்குநர் வேலுதாஸ் என்னை ஒரு நடிகன் என நினைத்துக் கொண்டு இந்த படத்தில் நடிக்க அழைத்தார்.
முதல் நாளிலேயே எனக்கு செட்டாகவில்லை. ஆனால் இரண்டாவது நாளில் அவருக்கு ஏற்றபடி என்னை நான் மாற்றிக் கொண்டேன். ராம்கோபால் வர்மாவின் படங்களில் பணியாற்றியவர் என்பதால் ஒளிப்பதிவாளர் ராமியின் கேமரா கோணங்கள் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.
தலைப்புச் செய்தியாக வரவேண்டிய ஒரு விஷயத்தை இதில் கையில் எடுத்துள்ளார் இயக்குநர் வேலுதாஸ்.
இயக்குநர் வேலுதாஸ் படத்திற்கான கருவை நன்றாகவே தேடிப் பிடிக்கிறார். வருங்காலத்தில் மிகப்பெரிய இயக்குனராக வருவார். அதேபோல பட்ஜெட்டில் எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்பாதவர் வேலுதாஸ்.
500 டெம்போக்களை வைத்து எடுக்க வேண்டிய காட்சியில் முதல் நாள் குறைவான வாகனங்களே வந்ததால், அன்று படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மறுநாள் அந்த காட்சியை பிரமாண்டமாக படமாக்கினார்” என்று கூறினார்.
Healthy foods not available in chennai says Soundararaja