தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வேலுதாஸ் இயக்கத்தில் விமல் நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படம் செப்டம்பர் 1 தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற இயக்குநர் திருமலை பேசும்போது…
“பத்து பேர் மட்டுமே திரையுலகை ஆள வேண்டும் என நினைக்கின்றனர். எல்லோரும் ஒன்று சேர்ந்து இதை தடுக்க வேண்டும்.
தயாரிப்பாளர் கே.ராஜன் தனியாளாக இதற்காக போராடுகிறார். நூறு பேர் ஒன்று சேர்ந்தால் தான் இந்த பத்து பேரை விரட்ட முடியும்” என்று கூறினார்.
நகைச்சுவை நடிகர் டேனி பேசும்போது…
“ஜெயிக்கிற படத்தில் ஜெயிக்கிற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்.. நானும் சிம்புவும் ஒரு விளம்பர படத்தில் நடித்தோம். அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வருவதற்கு முன் மிகப்பெரிய பிரச்சனையும் சலசலப்பும் ஓடிக்கொண்டு இருந்தது.
ஆனால் அவர் வந்ததும் கப்சிப் ஆகி வேலைகள் சரியாக நடக்கத் துவங்கின. இப்போது வெளியாகும் படங்களில் நடித்துள்ள பெரிய நடிகர்கள் கூட பிரமோஷன் என்கிற பெயரில் உணவு விமர்சனம் செய்ய இறங்கி விட்டதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது” என்று கூறினார்.
Actor Dani trolls irfans food review with stars