ஜிவி.பிரகாஷுக்கு ஜோடியாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி

Enga Veetu Mappillai fame Aparnathi romance with GV Prakashஅங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் படங்களை இயக்கிய வசந்தபாலன், அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னை ஓல்டு மகாபலிபுரம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு அரங்கமைப்பில் பூஜையுடன் நாளை காலை ஆரம்பமாகிறது.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ நாயகன் பாண்டி, ஆர்யாவுடன் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அபர்ணதி கதாநாயகியாக நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். இவர்களுடன் ஜெனிஃபர், மணிமேகலை, பாகுபலி வில்லன் பிரபாகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இசை -ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு-கணேஷ் சந்திரா, சண்டை-அன்பு அறிவு, வசனம்- G.ராமகிருஷ்ணன், பாக்கியம் சங்கர், எடிட்டிங்-ரேமண்ட், பாடல்கள்-கபிலன், கருணாகரன். கதை,திரைக்கதை, இயக்கம்-வசந்தபாலன்,

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் பி.டி.செல்வகுமார். தயாரிப்பு- கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் ஸ்ரீதரன் மரியதாசன்.

இவர் விஷால் நடித்த இரும்பு திரை, மிஷ்கினின் சவரக்கத்தி படங்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enga Veetu Mappillai fame Aparnathi romance with GV Prakash

Overall Rating : Not available

Related News

இயக்குனர் ஷங்கர் ஒரு சில படங்களில்…
...Read More
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன்…
...Read More

Latest Post