விஜய் படத்திற்கு 100 படகுகளை வைத்து படமாக்கிய முருகதாஸ்

விஜய் படத்திற்கு 100 படகுகளை வைத்து படமாக்கிய முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 62 vijay stillsமெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், நாயகியாக கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 19-ம் தேதி அன்று எளிமையான பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விட்டது.

தற்போது ஈசிஆரில் 100 படகுகளைக் கொண்டு சில காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

விரைவில் இப்படக்குழு மும்பை பறக்கவுள்ளதாம்.

இப்படத்தின் வசனங்களை ஜெயமோகன் எழுதியுள்ளார்.

இவர் ‘அங்காடித் தெரு’, ‘நீர்ப்பறவை’, ‘2.0’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி-வைரமுத்து கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த இளையராஜா

ரஜினி-வைரமுத்து கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayarajaஇசையமைப்பாளர் இளையராஜா நேற்றுமுன்தினம் திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

அங்கிருந்த தேவஸ்தான அதிகாரிகள், தீர்த்த பிரசாதங்கள் வழங்கி இளையராஜாவை கவுரவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் கோயிலை விட்டு வெளியே வந்தபோது அவரிடம் ரஜினி அரசியல், ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் சர்ச்சை பேச்சு ஆகியவை குறித்து செய்திகாளர்கள் கேள்வி கேட்டனர்.

ஆனால் அவர் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்று விட்டார்.

ரஜினிக்கு அரசியல் செட்டாகாது; காலா பட கலைஞர் நானா படேகர் பேட்டி

ரஜினிக்கு அரசியல் செட்டாகாது; காலா பட கலைஞர் நானா படேகர் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Nana Patekarரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து வரும் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

இப்படத்தின் டப்பிங் பணிகளில் ரஜினிகாந்த் கலந்துக கொண்டதை பார்த்தோம்.

இந்நிலையில் காலா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நானா படேகர் அவர்கள் ரஜினியின் அரசியல் வருகை பற்றி கூறியுள்ளதாவது…

நம் நாட்டில் இன்றைய ஜனநாயகம் மோசமாக உள்ளது.

தற்போது ரஜினி அரசியலுக்கு வருகிற்றார். அவர் மிகவும் எளிமையான நல்ல மனிதர். அவருக்கு அரசியல் செட் ஆகாது” என தெரிவித்துள்ளார்.

மு.களஞ்சியத்தின் முந்திரிக்காடு படத்தில் முக்கிய வேடத்தில் சீமான்

மு.களஞ்சியத்தின் முந்திரிக்காடு படத்தில் முக்கிய வேடத்தில் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanதமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு

இப்படத்திற்கு முந்திரிக்காடு“ என பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – G.A. சிவசுந்தர்

இசை – A.K. பிரியன். ( இவர் A.R.ரகுமானின் இசைப்பள்ளி மாணவர் 17 வயது கொண்ட இளைஞர் )

பாடல்கள் – கவிபாஸ்கர் / எடிட்டிங் – எல்.வி.கே.தாஸ்

கலை – மயில்கிருஷ்ணன் / ஸ்டன்ட் – லீ.முருகன்

தயாரிப்பு மேற்பார்வை – டி.ஜி. ராமகிருஷ்ணன்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – மு.களஞ்சியம்.

படம் பற்றி இயக்குனர் பேசியதாவது…

முந்திரிக்காட்டு மக்களின் வாழ்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை இதில் பதிவு செய்கிறோம்.

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார். படத்தின் இயக்குனர் மு.களஞ்சியம், படத்தின் நாயகன் புகழ், நாயகி சுபபிரியா, இசையமைப்பாளர் A.K. பிரியன், ஒளிப்பதிவாளர் G.A. சிவசுந்தர், நடிகர் கலைசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். படம் விரைவில் வெளியாக உள்ளது.

மிருகம் போல மன்சூரலிகான் நடிக்கும் கடமான்பாறை; அவரது மகனும் நடிக்கிறார்

மிருகம் போல மன்சூரலிகான் நடிக்கும் கடமான்பாறை; அவரது மகனும் நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mansoor ali khan in kadaman paraiதமிழ் சினிமாவில் அதிரடி வில்லனாக கலக்கியவர் மன்சூர் அலிகான்.

இதுவரை அனைத்து மொழிகளிலும் இவர் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

மேலும் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.

இந்நிலையில் அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மிளா, கனல்கண்ணன், முல்லை, கோதண்டம், கலக்க போவது யாரு பழனி, பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மகேஷ்.T / இசை = ரவிவர்மா

பாடல்கள் – சொற்கோ, ரவிவர்மா, மன்சூரலிகான்

கலை – ஜெயகுமார் / நடனம் – சந்துரு, சிவா, ஜெயா, சம்பத்ராஜ்

ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்

ஆக்கம் , இயக்கம் – மன்சூரலிகான்.

படம் பற்றி இயக்குனர் மன்சூரலிகானிடம் கேட்டோம்…

கலூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறி போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது.

செல்போன், மார்டன் டெக்னாலஜி அவர்களை தவறான வழிக்கு கொண்டு போகிறது. அப்படி தவறான வழியில் போகும் இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப் பட்டு எப்படி அமைகிறது என்பதே இந்த படத்தின் கரு. நகைச்சுவை கலைந்த திரில்லர் படமாக கடமான் பாறை உருவாகி வருகிறது.

படப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

இந்த படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களுக்கு நடனமாட நாயகன் அலிகான் துக்ளக்கிற்கு இணையான இன்னொரு நாயகியை தேடிக்கொண்டிருக்கிறோம். விரைவில் அந்த பாடல்களுக்கான படப்பிடிப்பு நடைபெறும் என்றார் மன்சூரலிகான் .

விக்ரம் பிரபு- நிக்கி கல்ராணி-பிந்து மாதவி இணையும் பக்கா

விக்ரம் பிரபு- நிக்கி கல்ராணி-பிந்து மாதவி இணையும் பக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pakka Movie imagesஅதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “
விக்ரம்பிரபு நாயகனாக நடிக்க. கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.

முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.

S.S.சூர்யா என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

முழு நீள காமெடி படமாக உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ திருவிழாவை பார்த்திருபோம்.

ஆனால் நாங்கள் ஒரு திருவிழாவையே படமாக எடுத்திருக்கிறோம்.

இன்டீரியல் காட்சிகள் ( சுவற்றிற்குள்) இல்லாமல் படம் முழுக்க எக்ஸ்டீரியல் என்று சொல்லப்படும் வெளிப் புறங்களிலேயே படமாக்கப் பட்ட முதல் படம் இந்த பக்கா.

கள்ளக்குறிச்சி அருகில் உள்ள செம்படாப் குறிச்சி என்ற ஊரில் ஒரிஜினல் திருவிழாவே நடத்தி இசையமைப்பாளர் சத்யாவை அழைத்துச் சென்று இரவு முழுக்க அவரை பார்க்க வைத்து ஒரு கரகாட்ட சாங்கை கம்போஸ் பண்ணினோம். அந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும் பாடலாக நிச்சயம் இருக்கும்.

குற்றாலம் பக்கத்தில் ஒரு ஆற்றில் 1000 பேரை வைத்து ஆற்று திருவிழாவில் ஒரு வித்தியாசமான காட்சிகளை தத்ரூபமாக படமாக்கினோம். படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா.

ஒளிப்பதிவு – எஸ்.சரவணன் / இசை – C.சத்யா / பாடல்கள் – யுகபாரதி, கபிலன்

More Articles
Follows