ஜிவி பிரகாஷ் இசையில் வயதான கெட்டப்பில் (டபுள்) கார்த்தி மிரட்டும் ‘சர்தார்’

ஜிவி பிரகாஷ் இசையில் வயதான கெட்டப்பில் (டபுள்) கார்த்தி மிரட்டும் ‘சர்தார்’

sardar (2)நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம், “சிறுத்தை”.

மீண்டும் அவர் வெவ்வேறு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சர்தார்’ என்று பெயரிட்டுள்ளார்கள்.

சர்தார் என்ற பாரசீக சொல் “தலைவன் ” அல்லது ‘படைத்தளபதி’ என்று பொருள் தரும்.

இதில் ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் P.S.மித்ரனுடன் நடிகர் கார்த்தி முதன்முறையாக இணைந்திருக்கிறார்.

இப்படத்தில் 2 கதாநாயகிகள். ராஷி கண்ணா மற்றும் ‘கர்ணன்’ ரஜிஷா விஜயன் .

மேலும், சிம்ரன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பிரபல இந்தி நடிகர் சுயாஸ் பாண்டே (Chunky Panday) முதல் முறையாக தமிழ் படத்தில் வில்லன் வேடத்தில் தோன்றுகிறார்.

கனமான கதைகளையும் கடினமான கதாபாத்திரங்களையும் தேர்ந்து எடுத்து நடிப்பவர் கார்த்தி.

இயக்குனர் PS மித்ரன் சமூக சிந்தனைகளும் நவீனத்துவம் பறைசாற்றும் விதமாக அவரது முந்தைய படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து இப்படத்தில் அழுத்தமான ஒரு கதைக்களத்தில் பயனிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

படத்தின் கதை வெவ்வேறு விதமான இடங்களில் பிரம்மாண்டமான சண்டை காட்சிகளுடன் நடப்பதால், தென்காசி தொடங்கி சென்னை மற்றும் வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பினை நடத்தத் திட்டமிட்டு இருக்கின்றனர்.

‘சூரரை போற்று’, ‘அசுரன்’ போன்ற வெற்றி படங்களில் பிரம்மாண்ட இசை அமைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ்குமார் ‘சர்தார்’ படத்திற்கு இசை அமைப்பது மேலும் பலம் சேர்க்கிறது

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்‌ஷ்மன்குமார் இப்படத்தை மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவு ஜார்ஜ் C வில்லியம்ஸ், எடிட்டிங் – ரூபன், கலை இயக்கம் – கதிர், எழுத்து – எம்.ஆர்.பொன்பார்த்திபன், ரோஜூ மற்றும் பிபின்ரகு, ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா D, பாடல்கள் – யுகபாரதி, VFX – ஹரிஹர சுதன், தயாரிப்பு மேலாளர் J.கிரிநாதன், தயாரிப்பு மேற்பார்வை-AP.பால்பாண்டி, ஸ்டில்ஸ் – ஜி.ஆனந்த்குமார், புரோமோ ஸ்டில்ஸ் ஜோசஃப் M டேனியல், விளம்பர வடிவமைப்பு – சிவகுமார் S, நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, PRO- ஜான்சன்.

GV Prakash to compose music for Karthik’s Sardar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *