விக்ரம்-தனுஷ் ரூட்டில் ஜிவி.பிரகாஷ்-விஜய்ஆண்டனி

விக்ரம்-தனுஷ் ரூட்டில் ஜிவி.பிரகாஷ்-விஜய்ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash vijay antonyசண்டே – லீவு நாள்ன்னா… மண்டே – ஒர்க்கிங் டே…
அப்போ ப்ரைடே – மார்னிங் கோயிலுக்கு போகனும். ஈவினிங் புதுப்படத்துக்கு போகனும்… அப்படி ஒரு பழக்கம்தான் இப்போ பாப்புலராக இருந்துட்டு இருக்கு.

ஆனா நடந்துட்டு வர்ற விஷயங்களால பார்த்தா இந்த பழக்கம் கொஞ்சம் மாற கூடிய வாய்ப்பு இருக்கும்னு தெரியுது.

என்னப்பா… ஒரே கன்ப்யூஸா இருக்கா…? சரி. சரி விஷயத்துக்கு வர்றோம்.

பொதுவாக புதுப்படம்னா வெள்ளிக்கிழமை ரிலீஸ் பன்னுவாங்க. ஆனா விக்ரம் நடித்த இருமுகன் (செப் 8), தனுஷ் நடித்த தொடரி (செப் 22) ஆகிய படங்கள் வியாழக்கிழமைதான் ரிலீஸ் ஆச்சு.

இத்தனைக்கும் அந்த நாட்கள்ல எந்த விசேஷமும் இல்லை.

இப்போ அதே ரூட்ல வியாழக்கிழமைகளில் ஜி.வி.பிரகாஷ் படமும், விஜய் ஆண்டனி படமும் ரிலீஸ் ஆகுது.

ராஜேஷ் இயக்கியுள்ள கடவுள் இருக்கான் குமாரு படத்தை நவம்பர் 10ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

அதுபோல், பிரதீப் கிருஷ்ணமுர்த்தி இயக்கியுள்ள சைத்தான் படத்தை நவம்பர் 17ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

ஆக மொத்தம் சைத்தானும், கடவுளும் வியாழக்கிழமையே வர்றாங்க.. தியேட்டர்ல பாத்து என்ஜாய் பன்னுங்க மக்களே…

விஜய்யின் ‘பைரவா’ பாடல்கள் அவுட்; இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய்யின் ‘பைரவா’ பாடல்கள் அவுட்; இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa stillsபரதன் இயக்கும் பைரவா படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார் விஜய்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

இப்பாடல்கள் டிசம்பர் மாதம் வெளியாகும் என கூறப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பாடலாக அறிமுகப் பாடல் அமைந்துள்ளது.

எனவே, நேற்று

பட்டையக் கெளப்பு
குட்டையக் குழப்பு
பட்டையக் கெளப்பு
பட்டி தொட்டி எல்லாம்
பட்டையக் கெளப்பு

என்ற பாடல் வரிகளை வெளியிட்டார் வைரமுத்து.

இதனால் இன்ப அதிர்ச்சியில் திளைத்தனர் விஜய் ரசிகர்கள்.

இன்று மற்றொரு பாடலான மஞ்சள் மேகம் என்ற பாடல் வரிகளையும் வெளியிட்டுள்ளார்.

இசையோடு கேட்க, இன்னும் சில நாட்கள் காத்திருங்கள் ரசிகர்களே எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த பாடல் வரிகளை படமாக (இமேஜ்) ஆக பதிவிடாமல் உங்களுக்காக (காப்பி செய்து கொள்ள) இங்கே கொடுத்திருக்கிறோம்.

பட்டையக் கெளப்பு பாடல்…

பட்டையக் கெளப்பு
குட்டையக் குழப்பு
பட்டையக் கெளப்பு
பட்டி தொட்டி எல்லாம்
பட்டையக் கெளப்பு

குரவ மீனப் புடிக்கக்
குட்டையக் குழப்பு

கட்டுக் கட்டா – சேத்த
நோட்டுக் கட்டு – பெரும்
பூட்டுப் போட்டுக் கெடக்கு

பறவைக் கெல்லாம்
ஒரு வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?

**
காசை எடு
காத்தும் திசையை மாத்தும்
காசை எடு

ஓ… கடலில் ரயிலும் போகும்
காசை எடு

இமயம்
கொஞ்சம் குனியும்
காசை எடு

பூட்டி வச்சு என்ன பண்ணப் போற? … ஓ
அள்ளிக் கொடு – இல்ல
ஆட்டம் போடு

சிங்கம் எல்லாம்
சேமிக்காது
ஜில்லென்று கொண்டாடு

கட்டு கட்டாச் – சேத்த
நோட்டுக் கட்டு – பெரும்
பூட்டு போட்டுக் கெடக்கு

பறவைக் கெல்லாம் – ஒரு
வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?
**
வாழணுமே
ஏழை பாளை நம்மை
வாழ்த்தணுமே

எதிரி வந்தால்
மோதிப் பாக்கணுமே

ஏய்க்கும் கூட்டம் என்றால்
சாய்க்கணுமே

நீதி கேட்டு – தம்பி
நீயே நில்லு

தப்பாதப்பா
விஜயன் வில்லு

ரெண்டாயிரம் – ஆண்டா
வாழப்போற? – சும்மா
பூட்டிவச்சு எதுக்கு?

பறவைக் கெல்லாம் – ஒரு
வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?

 

மஞ்சள் மேகம் பாடல்…

மஞ்சள் மேகம் – ஒரு
மஞ்சள் மேகம் – சிறு
பெண்ணாகி முன்னே போகும்

பதறும் உடலும் – என்
கதறும் உயிரும் – அவள்
பேர்கேட்டுப் பின்னே போகும்

செல்லப் பூவே – நான்
உன்னைக் கண்டேன்
சில்லுச் சில்லாய் – உயிர்
சிதறக் கண்டேன்

நில்லாயோ நில்லாயோ
உன்பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என்பேர் என்ன

*

கனவா கனவா – நான்
காண்பது கனவா – என்
கண்முன்னே கடவுள் துகளா

காற்றின் உடலா – கம்பன்
கவிதை மடலா – இவள்
தென்னாட்டின் நான்காம் கடலா

சிலிக்கான் சிலையோ
சிறுவாய் மலரோ
வெள்ளை நதியோ
வெளியூர் நிலவோ

நில்லாயோ நில்லாயோ
உன்பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என்பேர் என்ன

*

செம்பொன் சிலையோ – இவள்
ஐம்பொன் அழகோ
பிரம்மன் மகளோ – இவள்
பெண்பால் வெயிலோ

நான் உன்னைப் போன்ற
பெண்ணைக் கண்டதில்லை
என் உயிரில் பாதி
யாரும் கொன்றதில்லை

முன்னழகால் முட்டி
மோட்சம் கொடு – இல்லை
பின் முடியால்
என்னைத் தூக்கிலிடு

விக்ரமுடன் 3வது முறையாக இணையும் சூப்பர் ஹிட் டைரக்டர்?

விக்ரமுடன் 3வது முறையாக இணையும் சூப்பர் ஹிட் டைரக்டர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Director Dharani Stillsசேது படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றிக்காக காத்திருந்தார் நடிகர் விக்ரம்.

அப்போது அவருக்கு தில்லாக கை கொடுத்தவர்தான் இயக்குனர் தரணி.

இப்படம் வெற்றியடையவே மீண்டும் தூள் படத்திற்காக இணைந்தனர்.

இப்படம் மாபெரும் வெற்றியடைந்த பின்னர் இருவரும் வேறு வேறு திசைகளில் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் விரைவில் இவர்கள் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாட்ரிக் வெற்றி அடிக்க, விக்ரம்-தரணி கூட்டணியை வாழ்த்துவோம்.

‘என் ரசிகர்களுக்கு எது செஞ்சாலும் ஈடாகாது…’ விஜய் நெகிழ்ச்சி

‘என் ரசிகர்களுக்கு எது செஞ்சாலும் ஈடாகாது…’ விஜய் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay emotionalகத்தி படத்தை தொடர்ந்து பைரவா படத்தில் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார் காமெடி நடிகர் சதீஷ்.

இவர் தன் பேட்டியில் விஜய்யுடன் தன்னுடைய பயணம் குறித்து ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

“நமக்கு ஒரு பிரச்சனைன்னா ப்ரெண்ட்ஸ், பேரன்ஸ், ரிலேட்டிவ்ஸ் கூட வருவாங்க. அதுல ஆச்சர்யம் இல்லை.

ஆனா, நமக்கு ஏதாச்சும் ஒன்னுன்னா ரசிகர்கள் துடிச்சு போறாங்க.

அவுங்களுக்கு நமக்கும் எந்த ரத்த சம்மந்தமும் இல்லை.

ஆனா அவங்க என்ன வேணாலும் நமக்காக செய்வாங்க.

அவங்களுக்கு நான் என்ன செஞ்சாலும் அது ஈடாகாது’ என விஜய் கூறினாராம்.

சிம்புவுடன் மோதலை தவிர்க்க ஜிவி பிரகாஷ் முடிவு

சிம்புவுடன் மோதலை தவிர்க்க ஜிவி பிரகாஷ் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu gvprakashகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன், டான்ஸர் சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அச்சம் என்பது மடமையடா.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது.

வருகிற நவம்பர் 11ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இதே நாளில் ராஜேஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு படமும் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது.

இதனால் இரு படங்கள் இடையே மோதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சற்றுமுன் படத்திற்கு யு சர்ட்டிபிகேட் பெற்றுள்ள நிலையில் நவம்பர் 10ஆம் தேதி இந்த KIK படத்தை வெளியிட இருக்கிறார்களாம்.

‘சூர்யாவுக்காக மட்டும் அதை செய்வேன்…’ கார்த்தி

‘சூர்யாவுக்காக மட்டும் அதை செய்வேன்…’ கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi kaashmoraகாஷ்மோரா பெரும் வெற்றிப் பெற்றதால், கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாக வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர்.

இதில் ராஜ்நாயக் கேரக்டரில் வில்லனாகவும் மிரட்டியிருந்தார்.

இதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்து வருகிறார்.

இதற்காக மீசையில்லாமல் க்ளீன் ஷேவ் முகத்துடன் அண்மை காலமாக வலம் வருகிறார்.

இந்நிலையில், அவரது சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“வில்லனாக நடிக்கும் எண்ணமில்லை. ஒரு வேளை என் அண்ணன் (சூர்யா) ஹீரோவாக நடித்தால் அவருக்காக வில்லன் வேடம் ஏற்பேன்” என்றார்.

More Articles
Follows