மக்கள் விரும்பும் சஸ்பென்ஸ் த்ரில்லர்.; ‘கிரிமினல்’ பட விழாவில் தனஞ்செயன் பேச்சு

மக்கள் விரும்பும் சஸ்பென்ஸ் த்ரில்லர்.; ‘கிரிமினல்’ பட விழாவில் தனஞ்செயன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிரிமினல்’.

அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பி.ஆர்.ஓ அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஆறுமுகம் இயக்கும் இப்படத்திற்கு கிரன் டொர்னாலா ஒளிப்பத்திவு செய்ய, ஆப்பிள் அண்ட் பைனாப்பிள் இசையமைத்துள்ளனர்.

பவன் கவுடா படத்தொகுப்பு செய்ய, சசி துரை நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

அஷ்வத் மற்றும் சரவணன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன்,….

“படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிக்கும்படி இருந்ததோடு, படத்தை பார்க்கும் ஆவலையும் தூண்டுகிறது. இது ஓடிடி-க்களின் காலம். ஓடிடிகளில் படம் பார்ப்பது அதிகரித்துள்ளது.

அதனால் தான் புது புது ஒடிடி நிறுவனங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. அப்படி வரும் ஒடிடி நிறுவனங்கள் ‘கிரிமினல்’ போன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படங்களை தான் அதிகம் விரும்புகிறார்கள்.

காரணம், மக்களும் இதுபோன்ற படங்களை விரும்பி பார்ப்பது தான். அந்த வகையில், ‘கிரிமினல்’ படத்தை வாங்க பல ஒடிடி நிறுவனங்கள் முன் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த அளவுக்கு படம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதை படத்தின் டிரைலர் நிரூபித்துள்ளது.

பொதுவாக ஒடிடி நிறுவனங்கள் பெரிய படங்களை தான் வாங்குகிறார்கள், சிறிய படங்களை வாங்குவதில்லை, என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

உண்மையில் ஒடிடி நிறுவனங்கள் அதிகம் வாங்குவது சிறிய படங்களை தான். நல்ல கதையாக இருந்தால், நடிகர்கள் யார்? என்பதை ஒடிடி நிறுவனங்கள் பார்ப்பதில்லை. ரசிகர்களுக்கு ஏற்ற படமா? என்பதை மட்டும் தான் பார்க்கிறார்கள்.

அதனால், இளைஞர்கள் நிறைய பேர் சினிமாத்துறைக்கு வர வேண்டும், படங்கள் நிறைய தயாரிக்க வேண்டும். நல்ல படமாக இருந்தால் அதை வாங்க ஒடிடி நிறுவனங்கள் தயாராக இருக்கிறது.

‘கிரிமினல்’ படத்தின் இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. அறிமுக இசையமைப்பாளரின் பணி போல் இல்லை. பல படங்களுக்கு இசையமைத்த அனுபவம் உள்ள இசையமைப்பாளரின் பணிபோல் இருக்கிறது.

ஓடிடிக்கான மிக சிறந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இது இருக்கும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான மகேஷ்.CP பேசுகையில்,…

“எங்கள் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டுக்கு வந்த அனைத்து பெரியவர்களுக்கும் நன்றி. தனஞ்செயன் சாருக்கு ஸ்பெஷல் நன்றி. இது ஒரே நாளில் நடக்கும் கதை. ரசிகர்கள் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில் பரபரப்பான திரைக்கதையோடு படம் பயணிக்கும்.

நாயகனின் அப்பா கொலை செய்யப்பட, அந்த கொலை பழி நாயகன் மீது விழுகிறது. ஒரு பக்கம் போலீஸ் துரத்த, மறுபக்கம் தனது தந்தையை கொலை செய்த உண்மையான கொலையாளியை பிடித்து, தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் முயற்சியில் நாயகன் இறங்குகிறார்.

அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சஸ்பென்ஸாகவும், திரில்லராகவும் சொல்லியிருக்கிறோம். நிச்சயம் இந்த படம் நூறு சதவீதம் ரசிகர்களை திருப்திப்படுத்தும்.” என்றார்.

இயக்குநர் ஆறுமுகம் பேசுகையில்…

“இது எனக்கு முதல் படம். அதனால், என்னுடைய முழு உழைப்பையும் இந்த படத்தில் போட்டிருக்கிறேன். பல கட்டங்களில் படத்தை மெருகேற்றினோம். படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான மகேஷ், நல்ல உத்துழைப்பு கொடுத்ததோடு படம் சிறப்பாக வருவதற்கு மிக கடுமையாக உழைத்தார், அவருக்கு நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் ஆப்பிள் அண்ட் பைனாப்பிள் பேசுகையில்…

“இது எனக்கு முதல் படம். இந்த வாய்ப்பளித்த மகேஷ் சாருக்கு நன்றி. என் பணியை பாராட்டிய தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. இந்த படம் இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம். எனவே வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்று கடுமையாக உழைத்தேன், அதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது.

முழு படத்தையும் பார்த்த பிறகு என்னை இன்னும் அதிகமாக பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் டிரைலர் குறுந்தகடை வெளியிட ‘கிரிமினல்’ படக்குழுவினர் பெற்றுக்கொண்டார்கள்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கிரிமினல்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Trailer Link:: https://www.youtube.com/watch?v=tnQ8uRtDcFs

Producer Dhananjayan speech at Criminal trailer launch

என்கிட்ட பணமில்லை.. கலைஞர் பிறந்தநாளில் விக்ரம் ரிலீஸ் ஏன்.? காக்க வைத்தமைக்கு மன்னிப்பு கேட்ட கமல்

என்கிட்ட பணமில்லை.. கலைஞர் பிறந்தநாளில் விக்ரம் ரிலீஸ் ஏன்.? காக்க வைத்தமைக்கு மன்னிப்பு கேட்ட கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் ‘விக்ரம்’.

இந்த திரைப்படம், ஜூன் 3ம் தேதி ரிலீசாகிறது.

இந்த நிலையில், சென்னையில் பிரபலமான ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல் மற்றும் இயக்குனர் லோகேஷ் கலந்து கொண்டு பேசினர்.

கமல் பேசியதாவது…

நான்கு வருடம் என் ரசிகர்களை காக்க வைத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்.

நான் லோகேஷுக்கு நன்றி சொன்னால் அவர் அந்நியப்பட்டுவிடுவார்.

நாங்கள் இணைந்து நல்ல படம் எடுத்துள்ளோம். ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். அது வெற்றி பெறும் என நம்புகிறோம்.

என்னிடம் நிறைய பணம் இல்லை. என்னுடைய வருமானத்தை மக்களுக்காக பயன்படுத்துவேன்.

கலைஞர் கருணாநிதி பிறந்தநாளில் படம் ரிலீசாவது எதிர்பாராமல் நடந்தது.

என் திறமையை வளர்த்து கொள்ள முன்னோடியாக இருந்தவர் கருணாநிதி முக்கியமானவர்.

‘விக்ரம் 3’க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்

‘இந்தியன் 2’ விரைவில் நடைபெறும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்

Why Vikram release on Kalaignar’s birthday?

‘முத்துநகர் படுகொலை’-ஐ தமிழகத்தில் திரையிடனும்.; வட இந்திய மக்களுக்கு திரையிட மேதா பட்கர் முடிவு

‘முத்துநகர் படுகொலை’-ஐ தமிழகத்தில் திரையிடனும்.; வட இந்திய மக்களுக்கு திரையிட மேதா பட்கர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கும் ஆவணப்படம் “முத்துநகர் படுகொலை’. M.S.ராஜ் இயக்கியிருக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான இந்த ஆவணப் படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், SDPI கட்சியின் மாநில தலைவர் முபாரக் உள்ளிட்ட தலைவர்கள் பார்த்து பாராட்டியுள்ளனர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த மக்களுக்கு 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள வந்த சுற்றுச்சூழல் போராளி மேதா பட்கர் அவர்களுக்கு முத்துநகர் படுகொலை படம் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது.

இந்த்படத்தின் இயக்குனரை வெகுவாக பாராட்டிய மேதாபட்கர்…

” போலீஸ் அடக்குமுறையும் அரசு எந்திரங்களின் மோசமான தோல்வியும் பார்ப்பவர்களை பதற வைக்கும் அளவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு துணிச்சலான முயற்சி.

இந்த படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, திருமாவளவன் உதவி செய்ய வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் மகாராஷ்டிரா & மத்திய பிரதேசத்தில் போராடும் மக்களுக்கு முத்துநகர் படுகொலை ஆவணப்படத்தை திரையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.

உடனிருந்த கூடங்குளம் அணு உலைப் போராளி சுப.உதயகுமாரும் படத்தை வெகுவாக பாராட்டினார்.

Mehta Bhatkar decides to screen Muthunagar Padukolai for North Indian people

நெஞ்சுக்கு நீதி… வயித்துக்கு பிரியாணி..; உதயநிதியும் உடன்பிறப்புகளும்..; சீமான் கிண்டல்

நெஞ்சுக்கு நீதி… வயித்துக்கு பிரியாணி..; உதயநிதியும் உடன்பிறப்புகளும்..; சீமான் கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ஆர்ட்டிகிள் 15 பட தமிழ் ரீமேக் உரிமையை போனி கபூர் பெற்று தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் உருவாகியுள்ளார்.

‘கனா’ படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இதில் உதயநிதியுடன், தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன் , ஷிவானி ராஜசேகர், ரவி வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வசனங்களை தமிழரசன் எழுதியுள்ளார்.

‘நெஞ்சுக்கு நீதி’ ரிலீஸ்.: உதயநிதி ரசிகர்கள் மக்களுக்கு செய்யும் அநீதி

கனா படத்திற்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சென்சாரில் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மே 20ல் இப்படம் தியேட்டர்களில் ரிலீசானது.

இந்த சீமான் இப்படத்தை கிண்டலடித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்..

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள்…
படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள்.

சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்!

இவ்வாறு சீமான் பதிவிட்டுள்ளார்.

NTK leader Seeman takes on Udhayanidhi stalin

——- பாத்துக்கலாம்.; கமல் ரசிகர்கள் அடித்த ஆபாச போஸ்டர் மீது போலீஸில் கம்ப்ளைன்ட்

——- பாத்துக்கலாம்.; கமல் ரசிகர்கள் அடித்த ஆபாச போஸ்டர் மீது போலீஸில் கம்ப்ளைன்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தின் ‘பத்தல பத்தல…’ பாட்டில் மத்திய அரசை விமர்சித்து வரிகள் இருந்தன. இதனால் சர்ச்சைகளும் ஏற்பட்டன.

சர்ப்ரைஸ் விசிட் : கமல்ஹாசனை கட்டியணைத்து கண்ணீர் விட்ட ரசிகர்கள்

விக்ரம் பட ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

ட்ரைலரில் கமல் ஆபாச வார்த்தையை பேசுவது போன்றுள்ளது.

இந்த நிலையில், அந்த வார்த்தையை பயன்படுத்தி, “சில வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..! ——- பாத்துக்கலாம்..!” என்ற வசனம் அடங்கிய போஸ்டரை அடித்துள்ளனர்.

இதை மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளான மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தொகுதி செயலாளர் கதிரேசன் மற்றும் மதுரை மண்டல பொறுப்பாளர் வினோத் சேது ஆகிய இருவரும் மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் ஒட்டியுள்ளனர்.

நாலு வருஷமானாலும் நச்ன்னு டபுள் ரெக்கார்ட் செஞ்ச கமலஹாசன்

போஸ்டரில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்று இருப்பது குறித்து மதுரை திடீர் நகர் மற்றும் தெற்கு வாசல் காவல்துறையினர் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகி இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Complained to police over controversy poster by Kamal fans

3வது முறையாக இணையும் சத்யஜோதி & ஹிப் ஹாப் ஆதி.; இந்த முறையாவது வெற்றி கிட்டுமா.?

3வது முறையாக இணையும் சத்யஜோதி & ஹிப் ஹாப் ஆதி.; இந்த முறையாவது வெற்றி கிட்டுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான Sathya Jyothi Films மற்றும் நடிகர் ஹிப் ஹாப் தமிழா கூட்டணி எப்போதும் வெற்றிகரமான திரைப்படங்களையே தந்துள்ளது.

இவர்கள் கூட்டணியில் வெளியான ‘ சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு’ திரைப்படங்கள், தோல்வியை சந்தித்தது.

இப்போது இந்த கூட்டணி மீண்டும் ‘வீரன்’ திரைப்படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

ஓடிடி-க்கு ஓடிய ஹிப் ஹாப் ஆதி..; சிவகுமாரின் சபதம் (சாபம்) காரணமா.?

ARK சரவணன் இயக்கும் “வீரன்” படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 25, 2022) காலை பொள்ளாச்சியில் எளிமையான சடங்குகளுடன் இனிதே தொடங்கியது.

படக்குழுவினர் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்புவார்கள்.

இந்த திரைப்படம் ஒரு ஃபேன்டஸி காமெடி ஆக்‌ஷன் என்டர்டெய்னர், இதில் ஆதிரா ராஜ் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

வீரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது மட்டுமின்றி ஹிப் ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தொழில்நுட்பக் குழுவில் தீபக் D மேனன் (ஒளிப்பதிவு), G.K.பிரசன்னா (எடிட்டர்), NK ராகுல் (கலை), மகேஷ் மேத்யூ (ஸ்டண்ட்ஸ்), ட்யூனி ஜான் (பப்ளிசிட்டி டிசைனர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), அமீர் (ஸ்டில்ஸ்), மற்றும் கீர்த்தி வாசன் (ஆடை வடிவமைப்பாளர்).

வீரன் படத்தை Sathya Jyothi Films T.G.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

Satyajothi films & Hip Hop Aadhi joining for the 3rd time

More Articles
Follows