கெளதம் கார்த்திக் & சரத்குமார் இணைந்த ‘கிரிமினல்’ பட டப்பிங் தொடங்கியது

கெளதம் கார்த்திக் & சரத்குமார் இணைந்த ‘கிரிமினல்’ பட டப்பிங் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் கார்த்திக் & சரத் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ’கிரிமினல்’.

இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில், படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்தது. இதனையடுத்து, பூஜையுடன் டப்பிங் பணிகள் துவங்கியது.

‘கிரிமினல்’ படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயனுடன் இணைந்து பர்சா பிக்சர்ஸின் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

சாம் சிஎஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை மணிகண்ட பாலாஜி கவனிக்கிறார்.

இப்படத்தின் டீசர், டிரைலர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Gautham Karthik & Sarathkumar’s ‘Criminal’ movie dubbing has started

BHAI Sleeper Cells பட போஸ்டரை வெளியிட்ட 3 மதத் தலைவர்கள்

BHAI Sleeper Cells பட போஸ்டரை வெளியிட்ட 3 மதத் தலைவர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வழக்கமாக திரையுலகப் பிரமுகர்களைக் கொண்டுதான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் , போஸ்டர், டிரைலர்கள் வெளியிடப்படுவது வழக்கம்.

ஆனால், ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் “பாய் (BHAI) ஸ்லீப்பர் செல்ஸ்”.

இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே ஆர் எஸ் ஃபிலிம்டாம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.

இவர் ஏற்கெனவே தொரட்டி, தீக்குளிக்கும் பச்சை மரம் போன்ற தமிழ்ப்படங்களுக்கும் சில மலையாள, தெலுங்குப் படங்களுக்கும் இசையமைத்தவர். எடிட்டிங் இத்ரிஸ். இந்த படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

படம் பற்றி இயக்குநர் கமலநாதன் புவன் குமார் பேசும்போது…

“நானும் ஆதவா ஈஸ்வராவும் நண்பர்கள். நாங்கள் இணைந்து வேறொரு படத்தினை உருவாக்கத் திட்டமிட்டோம். ஆனால் அதற்கு இரவு நேரத்தில் நிறைய படப்பிடிப்பு செய்ய வேண்டி இருந்தது.கொரோனா காலம் என்பதால் பெரிய சிக்கல்கள் வந்தது.எனவே மாற்றுத் திட்டம் ஒன்று யோசித்தோம்.

அப்படி உருவானது தான் இந்தக் கதை. இதற்கு ஆதவா தான் முன்னெடுப்பாக இந்த யோசனையைக் கூறினார். அதை விரிவு படுத்தி, திரைக்கதை உருவாக்கப்பட்டது.

இது ஒரு NON-LINEAR வகை திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

இந்த படத்தின் முதல் பாதியில் கேள்விகளாகவும் இரண்டாவது பாதியில் அதற்குரிய பதில்களாகவும் வரும்படி இந்த திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று அரசியலில் செல்வாக்கு செலுத்துகிற ஒரு சக்தி வாய்ந்த கருவியாக மதம் இருக்கிறது. மதம் என்கிற கருவியை வைத்து மனிதர்களின் ஏழ்மை மற்றும் அவர்களின் விரக்தி என்கிற பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை மூளைச்சலவை செய்து ஒரு சித்தாந்தத்திற்கு அடிமை ஆக்கி குண்டு வெடிப்புகளை நிகழ்த்தும் கொடூரத்தைச் சிலர் செய்து வருகிறார்கள் அதைப்பற்றி இந்தப் படம் பேசுகிறது .

இப்படத்தின் ஒற்றை நோக்கம் மனிதாபிமானம்தான் மேலானது என்பது தான்.

இந்தப் படத்தின் பிரதான பாத்திரங்களில் ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார்.

இவர் நெடுஞ்சாலை, கருப்பசாமி குத்தகைதாரர், கொக்கி போன்ற படங்களைத் தயாரித்தவர். பத்து தல படத்தில் முக்கியமான காதப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர்.

“பாய் – Sleeper Cells” திரைக்கதை வடிவம் முற்றிலும் புதிது, பார்வையாளர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். நாயகன் ஆதவா ஈஸ்வரா இந்த படத்திற்காக கடினமான உடற்பயிற்சி எல்லாம் செய்து கதாப்பாத்திரத்த உணர்ந்து நல்லா பண்ணிருக்காரு.

இத்திரைப்படத்திற்கான Indoor Location 2 Set போட்ருக்கோம், Outdoor Location அனைத்தும் Live – ஆக படமாக்காப்பட்டது அது தான் படத்திற்கும் தேவைபட்டது, மிகவும் சவாலாக இருந்தது. 23 நாட்களில் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.

இப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.PVR பிக்சர்ஸ் இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிட வந்தது எங்களுக்குக் கிடைத்த பெரிய நம்பிக்கை. தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட முயற்சிகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன.

யாரை வைத்து இதன் போஸ்டர்களை வெளியிடுவது என்று யோசித்தோம். வழக்கமாகச் சினிமா சம்பந்தப்பட்டவர்களை வைத்து வெளியிட்டால் சாதாரணமாகவே தெரியும். பெரிய கவனம் பெறாது என்று நினைத்தோம்.

அதனால் படத்தில் சொல்லப்படும் கருத்தின் வாயிலாகவே வித்தியாசமான முறையில் வெளியிடலாம் என்று முடிவு செய்தோம். எனவே மூன்று வெவ்வேறு மதத் தலைவர்களை வைத்து இதை வெளியிட முயற்சி செய்தோம்.அதற்குப் பலனும் கிடைத்தது.

அப்படி இந்து மதத்தின் சார்பாக, இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள், இஸ்லாம் மதத்தின் சார்பாக இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ வுமான கே .ஏ.எம் .முகமது அபுபக்கர் அவர்கள், கிறிஸ்தவ மதத்தின் சார்பில் அப்போஸ்தல சர்ச் ஆப் இந்தியா, பிஷப் டாக்டர் எஸ். எம். ஜெயக்குமார் அவர்கள் என மூன்று மதத் தலைவர்களையும் வைத்து வெளியிட்டோம் .

பொதுவாக ஒருவர் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி .எஸ் .ஆர். சுபாஷ் அவர்களையும் இணைத்து நான்கு பேரை வைத்து இந்தப் படத்தின் போஸ்டரை ஒரு முதியோர் இல்லத்தில் வெளியிட்டோம்.

படத்தின் தலைப்பைப் பார்த்தபோது மூன்று பேருமே தயங்கினார்கள். இது என்ன தலைப்பு இப்படி இருக்கிறது? என்றார்கள்.

ஆனால் நாங்கள் படத்தின் கதையையும் படம் சொல்லும் நோக்கத்தையும் அவர்களிடம் விளக்கிக் கூறிய போது தாங்கள் படத்தைப் பார்க்கவில்லை என்றாலும் நம்பிக்கையில் சம்மதித்தார்கள்.
அவர்களுக்கு எங்கள் நன்றி.

இந்த மதத்தின் பெயரால் நடக்கும் இது மாதிரியான தவறான செயல்களைக் கண்டிக்க வேண்டும், தடுக்க வேண்டும் அதற்கு எங்களின் ஆதரவு என்றும் உண்டு என்று மூவருமே கூறினார்கள். இதுவே எங்கள் படத்திற்கான முதல் வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்.

“பாய்- ஸ்லீப்பர் செல்ஸ்” திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியாக உள்ளது.”

இவ்வாறு இயக்குநர் கமலநாதன் புவன் குமார் கூறினார்.

Bhai sleeper cells poster released by 3 religion leaders

குற்றவாளியை பிடிக்க இணைந்த அசோக் செல்வன் – சரத்குமார்

குற்றவாளியை பிடிக்க இணைந்த அசோக் செல்வன் – சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘போர் தொழில்’ எனும் படத்தினைத் தயாரித்திருப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக தடம் பதிக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் காவலர்களாக நடித்திருக்கும் அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் ஆகியோர்களின் வித்தியாசமான தோற்றம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் ‘போர் தொழில்’ எனும் படத்தில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொடர் கொலைகளை நிகழ்த்தும் குற்றவாளியை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு இளம் காவலரின் கதையாகும்.

இதில் அந்தக் காவலர், மூத்த காவலர் ஒருவருடன் கூட்டணி அமைத்து புலனாய்வு செய்து குற்றவாளியை நெருங்குகிறார். ஆக்சன், சஸ்பென்ஸ் என சுவராசியத்திற்கு குறைவில்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், தமிழ் திரையுலக ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று தனி முத்திரையைப் பதிக்கும்.

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் என்பது இணைய தொடர்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் அனிமேஷன் எனப்படும் சித்திர படங்களைக் கொண்ட உள்ளடக்கத்தை உருவாக்குவதில் ஒரு முன்னணி நிறுவனம் மற்றும் படைப்புத்திறன் மிகு அரங்கத்தையும் கொண்டது.

ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு முயற்சியாக தொடங்கப்பட்டிருக்கும் இந்நிறுவனத்திற்கு, பொழுதுபோக்கு துறையில் அனுபவசாலியான சமீர் நாயர் தலைமை ஏற்றிருக்கிறார்.

‘ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ்’ , ‘மித்யா’, கிரிமினல் ஜஸ்டிஸ் , ஸ்கேம் 1992 : தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி’ போன்ற நிகழ்ச்சிகளை அனைத்து மொழிகளிலும் தயாரித்து வெளியிட்டது.

‘உண்டேகி’, ‘பௌக்கால்’ என பலரின் பாராட்டுகளையும் பெற்ற படைப்புகளையும் வழங்கி இருக்கிறார்கள். நடிகை நந்திதா தாஸ் இயக்கத்தில் கபில் சர்மா நடித்த திரைப்படமான ‘ஸ்விகாடோ’ சமீபத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது.

அபர்ணா சென் இயக்கிய ‘தி ரேப்பிஸ்ட்’, சமீபத்தில் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, மதிப்புமிகு கிம் ஜிஜோக் விருதை வென்றது.

தற்போது ‘சர்மாஜி கி பேட்டி’ மற்றும் ‘ ஜப் குலீ கிதாப்’ என பல படைப்புகளை திரையரங்கம் மற்றும் டிஜிட்டல் தளங்களில் நேரடியாக வெளியிட கூடிய வகையில் தயாரித்து வருகிறது.

மேலும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- ‘நெட்ப்ளிக்ஸ்’, ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’, ‘அமேசான் பிரைம் வீடியோ’, ‘சோனி லைவ்’, ‘எம் எக்ஸ் பிளேயர்’, ‘ஜீ 5 ‘மற்றும் ‘வூத் செலக்ட்’ போன்ற முன்னணி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களுடன் ஆக்கபூர்வமான கூட்டணியை அமைத்துள்ளது.

எப்ரியஸ் ஸ்டுடியோ எல் எல் பி

எப்ரியஸ் ஸ்டுடியோ எல் எல் பி ஒரு ஸ்டார்ட் அப் புரொடக்ஷன் ஸ்டூடியோ. ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஒரு முதலீட்டு வங்கியாளருடன் கடந்த ஆண்டுகளில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், நம்ப முடியாத அளவிற்கு ஆக்கபூர்வமான தொழில் முனைவோராக இதன் தலைவரான சந்தீப் மெஹ்ரா உயர்ந்திருக்கிறார்.

அவரது தலைமையின் கீழ் இந்நிறுவனம் சிண்டிகேஷன் மற்றும் உள்ளடக்கத் தயாரிப்புக்கான மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. மேலும் பல மொழிகளிலான உள்ளடக்கத்துடன் கூடிய தயாரிப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

இந்நிறுவனம் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் போன்ற ஸ்டுடியோக்களுடன் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் பரிபூரணமான ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் எல்எல்பி

தென்னிந்திய திரை உலகில் 45 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் பயணித்து வரும் முகேஷ் மேத்தா, அனில் ராதாகிருஷ்ணன் இயக்கிய ‘நார்த் 24’, ‘காதம்’ போன்ற படங்களின் உள்ளடக்க விசயங்களில் சாதனை படைத்த சி. வி. சாரதியுடன் இணைந்து செயல்படும் தயாரிப்பு நிறுவனம்.

இந்நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்கள் தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்றிருக்கிறது.

துல்கர் சல்மான் நடிப்பில் சமீர் தய்யார் இயக்கிய ‘NAPKCB’, பாசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்த ‘கோதா’, மலையாளத்தில் ஜெய் கிரிஷ் இயக்கத்தில் பிருதிவிராஜ் சுகுமாரன் நடித்த ‘எஸ்ரா’ மற்றும் தமிழில் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமான ‘ஆதித்யா வர்மா’ உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறது.

Ashok Selvan and Sarath Kumar joins for Por Thozhil

ஊட்டியில் 25 நாட்கள் தங்கிய தம்பதிக்கு நடந்தது என்ன.?

ஊட்டியில் 25 நாட்கள் தங்கிய தம்பதிக்கு நடந்தது என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்க, விஜய் டீவி புகழ் KPY நவீன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம், காட்டேஜ்.

ஃபர்ஸ்ட் லுக் மூலம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

ஒரு காட்டேஜ், ஒரு தம்பதி, அவர்களை அமானுஷ்யமாக பின் தொடரும் ஒரு மனிதன் அப்போது நடக்கும் கொலை, அதை யார் செய்தது என்பதை இருக்கை நுனியில் பரபரப்பாகச் சொல்லும் மர்டர் மிஸ்டரி திரில்லர் தான் காட்டேஜ்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முழுக்க முழுக்க ஊட்டிப் பின்னணியில், நடக்கும் இப்படத்தின் மொத்தப்படப்பிடிப்பும் ஊட்டியில் 25 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக்குழு.

இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் டிவி புகழ் KPY நவீன் முரளிதர் நாயகனாக அறிமுகமாகிறார்.

ஆரியா செல்வராஜ் நடிக்கிறார். கஜராஜ், தர்மா, விக்னேஷ் ராமமூர்த்தி, ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப குழு

தயாரிப்பு நிறுவனம் : Evolution entertainment
இணை தயாரிப்பு : Blueberry studios

எழுத்து & இயக்கம் : சதீஷ் கீதா குமார் & நந்தினி விஸ்வநாதன்
ஒளிப்பதிவு , படத்தொகுப்பு : சதீஷ் கீதா குமார்
இசை : செந்தமிழ்
பாடல்கள் : கு.கார்த்திக்
ஸ்டன்ட் : டேன்ஜர் மணி
கலை : தினேஷ் மோகன்
உடைகள் : அக்‌ஷியா & விஷ்மியா
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

What happened to the couple who stayed in Ooty for 25 days?

SK 21 படப்பிடிப்பு நிறுத்தம் … இதுதான் காரணமா ?

SK 21 படப்பிடிப்பு நிறுத்தம் … இதுதான் காரணமா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘எஸ்கே 21’ படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் 55 நாட்கள் ஷூட்டிங் ஷெட்யூலுக்காக காஷ்மீர் சென்றிருந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக படப்பிடிப்பை அரசு அதிகாரிகள் நிறுத்தியதால் துரதிர்ஷ்டவசமாக படக்குழு பத்து நாட்களுக்குள் வீடு திரும்பியுள்ளது.

G20 உச்சி மாநாடு புதுதில்லியில் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது, இதில் பல உலகத் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். காஷ்மீரில் சில நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால், திரைப்பட படப்பிடிப்புகள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கான அனைத்து முன் அனுமதிகளையும் ரத்து செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Reason behind SK 21 movie shoot stopped

ரஜினிக்கு வில்லனாகும் விக்ரம்.. வெளிவந்த சூப்பர் தகவல் இதோ !

ரஜினிக்கு வில்லனாகும் விக்ரம்.. வெளிவந்த சூப்பர் தகவல் இதோ !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்ததாக லைக்கா தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதனை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சீயான் விக்ரமை படக்குழு அணுகியதாக தெரிகிறது.

முதலில் மறுத்த விக்ரம் படக்கதையை கேட்ட பின் ஒப்பு கொண்டதாக தெரிகிறது . விக்ரமுக்கு லைக்கா தரப்பில் அதிக சம்பளம் கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது விக்ரம் படத்தில் சூரியா நடித்த ரோலெக்ஸ் போன்ற மாஸ் கேரக்டர் என தகவல் வெளியாகி உள்ளது.

Vikram to play negative role in rajinikanths film

More Articles
Follows