45 நாட்களில் படத்தை முடித்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு

45 நாட்களில் படத்தை முடித்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Thiru completed Mr Chandramouli shoot within 45 daysகிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.

தந்தை, மகனான நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்‌ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூலை 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்நிலையில் படத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் ஆப் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

முழுப்படமும் எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது, அதற்கு தயாரிப்பாளர், படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களும் முக்கிய காரணம். அப்பா மகன் பற்றி நிறைய நல்ல படங்கள் வந்திருக்கின்றன.

இது வேறு ஒரு பரிணாமத்தில் இருக்கும். கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடித்தது மாதிரி தமிழ் சினிமாவில் நடக்குமா என்று தெரியவில்லை.

சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய மாநகரங்களில் நடக்கும் ஒரு விஷயத்தை எடுத்து கதையாக்கி ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். விண்டேஜ் கார்த்திக் சாரை இந்த படத்தில் பார்ப்பீர்கள்.

கௌதம் கார்த்திக்கின் மெனக்கெடல் இந்த படத்தின் பெரிய பலம். கௌதம் படப்பிடிப்பில் நேரம் தவறாமை சிறப்பான குணம், அதை அவர் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

ரெஜினா மிகவும் இனிமையான ஒரு நடிகை. பைரவி என்ற கதாபாத்திரம் தான் சந்திரமௌலி படத்தின் முதுகெலும்பு. அந்த கதாபாத்திரத்தில் வரலக்‌ஷ்மி நடித்திருக்கிறார்.

மகேந்திரன் சார் வில்லனாக சிறப்பாக நடித்திருக்கிறார். அகத்தியன் சார் கார்த்திக்கின் நண்பராக நடித்துள்ளார்.

ரிச்சர்ட் எம் நாதன் இல்லையென்றால் 45 நாட்களில் படத்தை முடித்திருக்க வாய்ப்பே இல்லை. திரைப்படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தனஞ்செயன் மிகச்சிறந்த ஒரு தயாரிப்பாளர். தனஞ்செயன், கார்த்திக் சார் இல்லைனா இந்த படம் இல்லை.’ என்றார் இயக்குனர் திரு.

Director Thiru completed Mr Chandramouli shoot within 45 days

mr chandramouli press meet

தனுஷ் நடித்துள்ள மாரி-2 படப்பிடிப்பு நிறைவடைந்தது

தனுஷ் நடித்துள்ள மாரி-2 படப்பிடிப்பு நிறைவடைந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maari 2பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி, வரலெஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் படம் மாரி 2 .

படத்தின் படப்பிடிப்பு கடைசியாக ஒரு சண்டை காட்சியுடன் நிறைவடைந்தது. ஒரே ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது.

விரைவில் அந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டு முழுப்படமாக்கப்படும்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

சர்கார் விஜய்க்காக தீம் மியூசிக் போடும் ஏஆர். ரஹ்மான்

சர்கார் விஜய்க்காக தீம் மியூசிக் போடும் ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay AR Rahmanசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் சர்கார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இதற்கு முன்பே விஜய் நடித்த உதயா’, ‘அழகிய தமிழ்மகன்’, ‘மெர்சல்’ ஆகிய படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்திருந்தாலும் தீம் மியூஸிக் எதுவும் போட்டதில்லை.

ஆனால் முதன்முறையாக, ‘சர்கார்’ படத்தில் விஜய்க்காக ஸ்பெஷலாக தீம் மியூஸிக் போட்டு வருகிறாராம்.

ஏஆர். முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தில் அனிருத் போட்ட தீம் மியூசிக் படு பாப்புலர் ஆனது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் சர்க்காரை விலைக்கு வாங்க முயற்சிக்கும் மெர்சல் நிறுவனம்

விஜய்யின் சர்க்காரை விலைக்கு வாங்க முயற்சிக்கும் மெர்சல் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkar vijayசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.

அது வெளியானது முதலே படத்தின் மீதான எதிர்பாப்பு அதிகரித்துள்ளது.

மேலும் கத்தி, துப்பாக்கி ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு விஜய்யும் முருகதாசும் 3வது முறையாக இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில் சர்கார் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற மெர்சல் படத்தை தயாரித்து ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அஜித்-சூர்யாவை தொடர்ந்து சிம்புவை இயக்கும் பிரபல டைரக்டர்

அஜித்-சூர்யாவை தொடர்ந்து சிம்புவை இயக்கும் பிரபல டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu with venkat prabhuநடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும் சென்னை 28 படத்தின் மூலம் படு பாப்புலர் ஆனார் டைரக்டர் வெங்கட் பிரபு.

இதனையடுத்து அஜித் நடித்த மங்காத்தா, சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி, கார்த்தி நடித்த பிரியாணி உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

தற்போது ஆர். கே. நகர் என்ற படத்தை தயாரித்து வருகிறார். மேலும் பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சிம்பு நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பார் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மூவரும் சந்தித்து பேசியுள்ளதாகவும், விரைவில் அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரவிக்குமார்

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரவிக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan and ravikumarரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இன்று நேற்று நாளை படம் வசூல் வேட்டையாடியது.

இது வெளியாகி இன்றோடு மூன்றாண்டுகளை கடந்துள்ளது.

இதுகுறித்து பட இயக்குனர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…

மூன்றாண்டுகளில் தமிழ்நிலப்பரப்பு தாங்கிவரும் அதிர்வுகளுக்கு காலப்பயணமே சாலச்சிறந்தது என்று தோன்றுகிறது! நிஜத்தில் அதற்கு வாய்ப்பில்லை.

நிச்சயம் நாளையை நமதாக்குவோம்! எனது அடுத்த திரைப்படத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பை நாளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்கவுள்ளார் ரவிக்குமார்.

24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க, கருணாகரன் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளையும், முத்துராஜ் கலை பணிகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.

More Articles
Follows