என் ஹீரோ படத்தை ஓடிடி-யில் வெளியிட்டால்……..; தற்கொலைக்கு முயற்சித்து மிரட்டிய ரசிகை

என் ஹீரோ படத்தை ஓடிடி-யில் வெளியிட்டால்……..; தற்கொலைக்கு முயற்சித்து மிரட்டிய ரசிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய படம் ‘அசுரன்’.

இதில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, அம்மு, நிதீஷ் வீரா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

பெயருக்கு ஏற்றார் போல படமும் அசுர வெற்றிப் பெற்றது. தனுஷுக்கு 2வது முறையாக தேசிய விருதினை பெற்றுக் கொடுத்தது.

தற்போது தாணு தயாரிப்பில் இப்படம் ‘நாரப்பா’ என்ற பெயரில் தெலுங்கில் வெங்கடேஷ், பிரியாமணி நடிப்பில் ரீமேக் ஆகியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்க இன்னும் தாமதமாகும் என்பதால் ‘நாரப்பா’ படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கு வெங்கடேஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திராவிலுள்ள ஒரு ரசிகை நாரப்பாவை ஓடிடியில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துஉள்ளூர்

இத்துடன் அவர் தன் கையை அறுத்து கொண்டு தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார்.

இச்சம்பவம் தெலுங்கு சினிமா திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Fan Attempts Suicide Opposing Narappa OTT Release

narappa-poster

நாலு படம் என்னாச்சுனே தெரியல..; லோகேஷுடன் 1.. வெற்றிமாறனுடன் 1.. அடுத்த ப்ளானில் கமல்ஹாசன்

நாலு படம் என்னாச்சுனே தெரியல..; லோகேஷுடன் 1.. வெற்றிமாறனுடன் 1.. அடுத்த ப்ளானில் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanகடந்த சில மாதங்களாக அரசியல் பணிகளில் ஆர்வமாக இருந்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு அவ்வப்போது ட்விட்டரில் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார் கமல்.

எனவே மீண்டும் சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ளார் நடிப்பு உலக நாயகன்.

தற்போது கமல் கைவசம் ‘இந்தியன் 2, விக்ரம், தலைவன் இருக்கின்றான்’ ஆகிய படங்கள் உள்ளன.

இதற்கு முன்பே சபாஷ் நாயுடு என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்தார். அது என்ன நிலைமையில் இருக்கிறது என்பது கமலுக்கே வெளிச்சம்.

‘தலைவன் இருக்கின்றான்’ படமும் நிலுவையில் உள்ளது.

கமலின் கனவுப் படமான ‘மருதநாயகம்’ படம் மர்மமாகவே உள்ளது.

இந்த நிலையில் இன்று ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க முடியாது என கோர்ட் உத்தரவிட்டது.

எனவே இந்தியன் 2 படம் மீண்டும் தொடங்குவது கேள்விக்குறி தான்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.

இதனையடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் கமல் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

இதை கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்க உள்ளாராம்.

இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

கூடுதல் தகவல்..: சூரியை வைத்து விடுதலை & சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன்.

இந்த இரு படங்களை முடித்ததும் கமல் படத்தை இயக்கலாம் வெற்றிமாறன்.

Ulaga Nayagan Kamal haasan movie updates

சுதந்திரத்தைக் காக்கவே சட்டம்.. அதன் குரல்வளையை நெறிக்க அல்ல.. – சூர்யா

சுதந்திரத்தைக் காக்கவே சட்டம்.. அதன் குரல்வளையை நெறிக்க அல்ல.. – சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாஒளிப்பதிவு திருத்த மசோதா 2019, பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலங்களவை அறிமுகப்படுத்தப்பட்டு பின்னா் அது நிலைக் குழுவிற்கு அனுப்ப பட்டது.

இந்த ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் சூர்யா கூறியதாவது:

சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக… அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல… இன்றுதான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபணையைத் தெரிவியுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதோ அவரின் அறிக்கை…

Actor Suriya against cinematograph act 2021

டைரக்டர் ஷங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

டைரக்டர் ஷங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

indian-2-2லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த படம் ‘இந்தியன் 2’.

கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு முன்பே இந்தியன் 2 பட செட்டில் கிரேன் அறுந்து விழுந்ததில் 4 பேர் மரணம் அடைந்தனர்.

இதன் பின்னர் ஊரடங்கு, கமல்ஹாசனின் அரசியல் பணிகள், கமலுக்கு மேக்அப் அலர்ஜி, நடிகர் விவேக் மரணம் போன்ற காரணங்களால் பல மாதங்களாக சூட்டிங் தொடங்கப்படாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து கொரோனா 2வது அலை ஊரடங்கும் வந்தது.

இதனிடையில் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு படம், ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டானார் ஷங்கர்.

எனவே இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை ஷங்கர் இயக்க தடை கோர்ட்டில் தடை கோரியது லைகா நிறுவனம்.

ஆனால் நீதிமன்றமோ, இந்த பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தியது.

இரு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

எனவே மீண்டும் இந்த பிரச்சனை கோர்ட்டுக்கு வந்தது.

அதன்படி பிரச்சினைக்கு தீர்வு காண, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி எடுக்கும் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல், பிற படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க இன்று கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் லைகா நிறுவனத்தின் இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Madras High Court dismisses injunction filed by Lyca Productions against director Shankar

தயாரிப்பாளர்களுக்கு குட் நியூஸ் : புதிய படங்களை ரிலீஸ் செய்ய அரசு சார்பில் ஓடிடி தளம்

தயாரிப்பாளர்களுக்கு குட் நியூஸ் : புதிய படங்களை ரிலீஸ் செய்ய அரசு சார்பில் ஓடிடி தளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ott indiaகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் நாடெங்கிலும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

தற்போது மற்ற வணிகங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதியில்லை.

தமிழகம் & புதுச்சேரியில் சினிமா & டிவி சீரியல் சூட்டிங்குக்கு 100 பேர் கலந்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தியேட்டர்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் ரிலீசுக்கு தயாராகவுள்ள படங்களை அமேசான், நெட் ப்ளிக்ஸ் உள்ளிட்ட பல ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

இந்த நிலையில், மலையாள படங்களை ரிலீஸ் செய்ய பிரத்யேக ஓடிடி தளத்தை உருவாக்கிட கேரள அரசு முயற்சிப்பதாக கேரள சினிமா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் சஜி செரியன் தெரிவித்துள்ளார்.

“கொரோனா ஊரடங்கில் மட்டும் (18 மாதங்களில்) மலையாள திரையுலகம் ரூ.950 கோடிக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளது.

எனவே மலையாள திரைப்படங்களை வெளியிடுவதற்காக பிரத்யேக ஒரு புதிய ஓடிடி தளத்தை அரசு உருவாக்கும்.

சிறிய பட்ஜெட் & சாதாரண படங்களுக்கு இந்த புதிய ஓடிடி தளம் நிச்சயம் தேவைப்படும்.

கேரள அரசு நடத்தும் சித்ராஞ்சலி ஸ்டூடியோ தென்னிந்திய படங்களின் படப்பிடிப்புக்காக அனுமதிக்கப்படும்.”

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Govt to start OTT platform for small budget films

மிடில் கிளாஸ் தந்தையின் கஷ்டங்களை சொல்ல வருகிறாள் ‘ராஜா மகள்’

மிடில் கிளாஸ் தந்தையின் கஷ்டங்களை சொல்ல வருகிறாள் ‘ராஜா மகள்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

க்ரித்விக் சினி புரொடக்சன்ஸ் அனுமந்தங்குடி பி.முருகேசன் தயாரிப்பில், ஹென்றி இயக்கும் புதிய படம் ‘ராஜா மகள்’.

இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கன்னிமாடம் புகழ் வெலினா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் பக்ஸ், ஜீ தமிழ் புகழ் பேபி பிரிதிக்சா, குக்கூ புகழ் ஈஸ்வர், 100% காதல் புகழ் மாஸ்டர் ஜோஸ்வா, பிரமேலதா, பெராரே, திரைப்பட்டறை ராம், விஜய்பாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

நிக்கிகண்ணன் ஒளிப்பதிவில், சி.எஸ்.பிரேம்குமார், பி.அஜித்குமார் படத்தொகுப்பில், மணி அமுதவன் பாடல் வரிகளில், சங்கர் ரங்கராஜன் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

பிள்ளைங்க ஆசைப்பட்டு கேட்குறப்ப நம்மளோட இயலாமையை காரணம் காட்டி முடியாதுன்னு சொல்லி வளர்த்தா, அதுக்கு பிறகு அவுங்க எதுக்கும் ஆசைப்படவே தயங்குகிற ஒரு நிலை உருவாகிறது என்ற மிடில் கிளாஸ் தந்தையின் கருத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

அதே நேரம் தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தையும் ஒருங்கே இணைத்து, அழகான கலகலப்பான படமாக உருவாகியிருக்கிறார் இயக்குனர் ஹென்றி.

முழுக்க முழுக்க சென்னை சுற்றுவட்டாரங்களிலும், மகாபலிபுரம், திருத்தணி, போன்ற பகுதிகளிலும், இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது.

தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், பாடல்கள் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

Aadukalam Murugadoss turns hero for Raja Magal

378_001

More Articles
Follows