சென்சாரில் 27 வெட்டு வாங்கினாலும் கெத்து காட்டும் ‘தாதா 87’

சென்சாரில் 27 வெட்டு வாங்கினாலும் கெத்து காட்டும் ‘தாதா 87’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Even Though DhaDha87 movie got 27 cuts in Censor its running successfullyகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான “தாதா 87” திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது.

பல ருசிகரமான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீ பல்லவி ஒரு திருநங்கை வேடத்தில் நடித்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும் அதுவே இப்படத்தின் பலமாகவும் அமைந்துள்ளது.

இந்திய சினிமா வரலாற்றில் ஆண் பெண் வேடத்திலும், பெண் ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை.

ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

“தாதா 87” படத்தில் காதலை புதிய கோணத்தில் சொல்லபட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பலரின் கைதட்டல்களையும் பெற்றது.

“சென்சாரில் 27 கட்டுகள் வைத்தும் படத்தின் தணித்தன்மையை மக்கள் புரிந்து கொண்டு கொண்டாடுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் இப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

Even Though DhaDha87 movie got 27 cuts in Censor its running successfully

புலிகளை தத்தெடுத்து ரூ 5 லட்சம் வழங்கிய விஜய்சேதுபதி

புலிகளை தத்தெடுத்து ரூ 5 லட்சம் வழங்கிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi adopts 2 tigers from Vandalur Zoo Chennaiசென்னையை அடுத்த வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம் உள்ளது. இதன் மூலம் பூங்காவில் உள்ள ஆர்த்தி மற்றும் ஆதித்யா ஆகிய 2 வங்க புலிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்தெடுத்தார்.

புலிகளின் 6 மாத பராமரிப்பு செலவிற்கு ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை பூங்கா அதிகாரிகளிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஷாப்பிங் மால்களை சுற்றாமல் இதுபோன்ற இடங்களை பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம்” என்று கூறினார்.

Vijay Sethupathi adopts 2 tigers from Vandalur Zoo Chennai

மர்ம கொலைகளை கண்டறிய மீண்டும் போலீஸாக அருண்விஜய்

மர்ம கொலைகளை கண்டறிய மீண்டும் போலீஸாக அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijay returns as cop for a Crime Thrillerதமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அருண் விஜய்யின் மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ‘குற்றம் 23’.

இப்படம் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளிலும் (கத்தர்நாக் போலிஸ்வாலா) நல்ல வரபேற்பை பெற்றதன் மூலம் இது தெளிவாகிறது.

இயக்குநர்கள் கண்ணன் மற்றும் மிலன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கோபிநாத்.

நாராயணமூர்த்தி இயக்கும் புதிய படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

அவரது கட்டுக்கோப்பான உடலமைப்பு மற்றும் இரவிலும் கூட அர்ப்பணிப்புடன் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது தான் இயக்குனர்கள் அவரை அணுக தூண்டுகிறதா? என்று கேட்டால், புன்னகையுடன் அருண் விஜய் கூறுகிறார்…

“நான் அப்படி நினைக்கவில்லை. ஏனென்றால், ‘குற்றம் 23’ படத்தில் கூட நான் உடலை காட்டுவதோ, அல்லது அதிரடியான சண்டைக் காட்சிகளிலோ அதிகம் நடிக்கவில்லை.

அது முழுக்க முழுக்க புத்திசாலித்தனம் சம்பந்தப்பட்ட ஒரு படம். அந்த படத்தை எனக்கு வழங்கிய இயக்குனர் அறிவழகனுக்கு நன்றி.

இந்த கதையை இயக்குனர் கோபிநாத் என்னிடம் சொன்னபோது, அது பல அற்புதமான திருப்பங்களை கொண்டிருந்தது. மேலும் கதையே மிகவும் சிறப்பாக இருந்தது” என்றார்.

குற்றம் 23க்கும் மற்றும் இந்த படத்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், குற்றம் 23 மருத்துவத்துறையை மையமாக கொண்ட ஒரு திரில்லர்.

ஆனால் இந்த படம் நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் மர்மமான கொலைகளை பற்றியும், அவற்றின் பின்னணியில் உள்ள மர்மத்தை போலீஸ் அதிகாரி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதையும் பற்றியது.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்து வருகிறார் இயக்குனர். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.

தற்போது, அருண் விஜய் கொல்கத்தாவில் அக்னி சிறகுகள் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி இன்னொரு கதாநாயகனாக நடிக்க, ஷாலினி பாண்டேவும் உடன் நடித்து வருகிறார்.

மேலும், குத்துச்சண்டை விளையாட்டை அடிப்படையாக கொண்ட ‘பாக்ஸர்’ திரைப்படத்தையும் மிக விரைவில் தொடங்க இருக்கிறார் அருண் விஜய்.

Arun Vijay returns as cop for a Crime Thriller

கதிர்-ஸ்ருட்டி டாங்கே இணைந்துள்ள சஸ்பென்ஸ் திரில்லர் ‘சத்ரு’

கதிர்-ஸ்ருட்டி டாங்கே இணைந்துள்ள சஸ்பென்ஸ் திரில்லர் ‘சத்ரு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kathir and Srusti Dange team up in Sathru releasing on 8th March 2019மார்ச் 8 ம் தேதி உலகமுழுவதும் வெளியாகிறது. ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “சத்ரு“.

கதிர் மற்றும் சிருஷ்டி டாங்கே ஜோயாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார்.

இந்த படம் பற்றி இயக்குனர் நவீன் நஞ்சுண்டன் கூறியதாவது…

இந்த படத்தில் கதிர் கேரக்டர்தான் போலீஸ் ஆனால் இது போலீஸ் கதை கிடையாது. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த ஒரு பரபரப்பான சம்பவங்கள் தான் படம்.

தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டுவரும் முகமே தெரியாத ஐந்து குற்றவாளிகளை கதிர் 24 மணி நேரத்தில் எப்படி தேடி பிடித்தார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

படம் முதலில் முதலிலிருந்து இறுதிவரை விறுவிறுவென இருக்கும்.
மைல்ஸ்டோன் மூவிஸ் G.டில்லிபாபு மார்ச் 8 ம் தேதி படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
இசை – அம்ரிஷ்
பாடல்கள் – கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ
எடிட்டிங் – பிரசன்னா.ஜி.கே
கலை – ராஜா மோகன்
ஸ்டன்ட் – விக்கி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நஞ்சுண்டன்

Kathir and Srusti Dange team up in Sathru releasing on 8th March 2019

sathru movie press meet

விஜய்-அஜித்-சூர்யா… அவெஞ்சர்ஸ்-க்கு யார் பெஸ்ட்? நாலு ஹீரோயின்ஸ் நச் பதில்கள்..

விஜய்-அஜித்-சூர்யா… அவெஞ்சர்ஸ்-க்கு யார் பெஸ்ட்? நாலு ஹீரோயின்ஸ் நச் பதில்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Ajith Suriya Who will be Best in Avengers Captain Marvel Tamil Press meetமார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முதல் சோலோ பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம் கேப்டன் மார்வெல். ப்ரீ லார்சன், சாமுவேல் எல் ஜாக்சன் ஆகியோர் நடிக்க, அன்னா போடென், ரையான் ஃப்ளெக் இயக்கியிருக்கிறார்கள்.

மார்வெல் ஸ்டுடியோஸ் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இத்திரைப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமன்னா பாட்டியா, சமந்தா அக்கினேனி, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் டிஸ்னி இந்தியா தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுவரை 20 மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களை கொடுத்திருக்கிறோம். ஒவ்வொரு படத்திலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள். இது பெண் சூப்பர் ஹீரோவை பற்றிய ஒரு படம் என்பதால் தான் பெண்கள் தினமான மார்ச் 8ஆம் தேதி வெளியிட திட்டமிட்டோம்.

படம் முடிந்த பிறகு வரும் காட்சிகளை காணத்தவறாதீர்கள் என்றார் டிஸ்னி இந்தியா தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல்.

இந்த நிகழ்ச்சியில் காஜல் அகர்வால் தான் மார்வெல் காமிக்ஸ் மற்றும் படங்களின் மிகத் தீவிரமான ரசிகை என்று மற்ற நாயகிகள் மூவரும் ஒரே குரலில் ஒப்புக் கொண்டனர்.

காஜல் அகர்வாலும் மார்வெல் படங்களை பற்றிய மிக நுட்பமான விஷயங்களை அவ்வப்போது அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். தோர் தான் தனக்கு மிகவும் பிடித்த மார்வெல் கதாபாத்திரம் என்றும் கூறினார்.

அப்போது கேப்டன் மார்வெல் படத்தை பற்றிய தங்களுடைய எண்ணங்களையும், ட்ரைலர் பார்த்தவுடம் மனதில் தோன்றிய விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர். சமந்தா அது பற்றி கூறும்போது,

“ஒரு சக்தி வாய்ந்த பெண்ணை திரையில் பார்க்கும் போது நம்மாலும் எல்லாம் முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு தந்திருக்கிறது இந்த கேப்டன் மார்வெல்” என்றார். ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்வில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அதை தாண்டி அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். சூப்பர் ஹீரோ படங்கள் அனைத்தும் கூட தற்போது யதார்த்தமாக மாறி வருகிறது என்றார் தமன்னா.

நம் நாட்டில் பெண்களை மையப்படுத்திய படங்கள் பெரிய பட்ஜெட்டில் தயாராவதில்லையே என்று கேட்டதற்கு, “பெண்களை வைத்தும் பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கப்படுகின்றன.

நிறைய பெண்களை மையப்படுத்திய படங்கள் இந்தியாவிலும் வந்து கொண்டிருக்கின்றன. கேப்டன் மார்வெல் சூப்பர் ஹீரோ படம் உலக அளவில் மிகப்பெரிய கதவுகளை திறந்து விட்டிருக்கிறது. நம் இந்திய சினிமாவில் கூட அருந்ததி போன்ற படங்களும் வந்திருக்கின்றன. இன்னும் நிறைய படங்கள் வந்து கொண்டிருக்கின்றன” என்றனர்.

கேப்டன் மார்வெல் மாதிரி உங்களுக்கு ஒரு நாள் சக்தி கிடைத்து ஏதாவது விஷயங்களை மாற்ற விரும்பினால் எதை மாற்றுவீர்கள் என கேட்டதற்கு, “தூய்மையை மேம்படுத்துவேன், பெண் சிசுக் கொலை, ஊழல் ஆகியவற்றை ஒழிப்பேன். உலக அமைதிக்காக தீவிரவாத நடவடிக்கைகளை ஒழிக்க வேண்டும்.

மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க, அதை நல்ல வழியில் உபயோகிக்க வேண்டும்” என்றார். மேலும், சினிமா பொழுதுபோக்குக்காக மட்டும் தான். யாரையும் திருத்தவோ, நாட்டை திருத்தவோ சினிமாக்கள் இல்லை. யாரையும் மாற்றவும் முடியாது” என்றார். ரகுல் ப்ரீத் சிங்கும் தீவிரவாதத்தை ஒழிப்பதை பற்றிய தன் விருப்பத்தை கூறினார்.

அவெஞ்சர்ஸ் தமிழில் எடுக்கப்பட்டால் யாரை எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என கேட்டதற்கு, “விஜயை அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என சமந்தா மற்றும் காஜலும், அதில் சூர்யாவை நடிக்க வைக்கலாம் என ரகுல் பிரித் சிங்கும் கூறினர்.

ஹல்க் கதாபாத்திரத்திற்கு சமந்தா ஆர்யாவை சொல்ல, விஷாலை காஜல் தன் சாய்ஸாக கூறினார். தோர் கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு அல்லது சூர்யாவை தன் தேர்வாக தமன்னா சொல்ல, காஜல் அகர்வால் அஜித் மிகப் பொருத்தமாக இருப்பார் என கூற அனைவரும் அதை ஒப்புக் கொண்டனர்.

மேலும் கேப்டன் அமெரிக்கா கதாப்பாத்திரத்திற்கும் அஜித் தான் தன் சாய்ஸ் என காஜல் சொல்ல அரங்கமே அதிர்ந்தது. பாகுபலியை அவெஞ்சர்ஸ் டீமுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பலாம் என தமன்னா கூற, அனைவரும் அதை ஆமோதித்தனர்.

ஃபிட்னஸ் நம் வாழ்வில் மிகவும் முக்கியமான அம்சம். நன்றாக சாப்பிடுவதற்காகவே நான் கூடுதல் நேரம் உடற்பயிற்சிகளை செய்வேன் என்றார் ரகுல் பிரீத் சிங். எனக்கு சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி இலக்குகளை அடைவது என்பது மிகவும் சந்தோஷத்தை கொடுக்கும், ஃபிட்னஸிலும் இலக்குகளை அடைந்து வருகிறேன் என்றார் சமந்தா.

யோகா எனக்கு மிகவும் பிடித்த விஷயம். எனக்கு உணவுகள் மிகவும் பிடிக்கும். அதனால் அதற்கேற்ற வகையில் உடற்பயிற்சிகள் மேற்கொள்வேன் என்றார் தமன்னா. மாரத்தான் ஓட்டம் என் சாய்ஸ். உடற்பயிற்சி கருவிகள் இல்லையென்றாலும் கூட பரவாயில்லை. தினமும் ரன்னிங் ஓடுங்கள், அது போதுமானது. என் அடுத்த படத்துக்கு களறி பயட்டு கற்று வருகிறேன் என்றார் காஜல் அகர்வால்.

நம்மை கொண்டாட தனியாக பெண்கள் தினம் என்பது தேவையில்லை. பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் செய்யக் கூடியவர்கள், அந்த திறமை பெண்களுக்கு உண்டு என்றார் ரகுல்.

நமக்குள் ஒரு சூப்பர் ஹீரோ இருக்காங்க என பெண்களான நாம் நம்பணும். எந்த ஒரு கடினமான சூழலிலும் கூட அதை தாங்கும், தகர்க்கும் ஒரு சக்தியை கடவுள் நமக்கு கொடுத்திருக்கிறார்” என்றார் சமந்தா.

Vijay Ajith Suriya Who will be Best in Avengers Captain Marvel Tamil Press meet

நதிநீர் இணைப்பு அரசியலை பேசும் அதர்வாவின் ‘பூமராங்’

நதிநீர் இணைப்பு அரசியலை பேசும் அதர்வாவின் ‘பூமராங்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Boomerang movie based on Tamilnadu Politics and water Issueமசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’.

அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

எல்லாமே இருந்தா தான் படம் எடுப்பேன் என சொல்லாமல் இருப்பதை வைத்து படத்தை மிகச்சிறப்பாக எடுப்பவர் இயக்குனர் கண்ணன். மோதலில் தான் காதல் உருவாகும் என்பது போல, எனக்கும் கண்ணன் சாருக்கும் உரசலில் தான் நட்பு ஆரம்பித்தது.

எனக்கு கதை எழுதுவதில் ஒரு நம்பிக்கை வர முக்கிய காரணம் இவன் தந்திரன் படம் தான். ஒரு ஹீரோவாக இருந்தாலும் எந்த பிரதிபலனும் பாராமல் உதவக் கூடியவர் அதர்வா. பல காட்சிகளில் எனக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுக்க சொன்னார்.

அவரின் அர்ப்பணிப்பு மிக அபாரமானது. நதிநீர் பிரச்சினையை, நதிநீர் இணைப்பை பற்றியும் பேசும் மிக முக்கியமான படம் என்றார் நடிகர் ஆர்ஜே பாலாஜி.

நான் இந்த இடத்துக்கு வரக் காரணம் என் அம்மா தான். அவர் என் மீது வைத்த நம்பிக்கை தான் நான் இங்கு இருக்கிறேன். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு பாராட்ட என்னை அழைத்தார் கண்ணன் சார். அங்கு போன பிறகு நாம படம் பண்ணலாமா என சொன்னதோடு, அடுத்த நாளே என் பெயரை படத்தின் விளம்பரத்தில் சேர்த்தார்.

தமிழில் ஒரு நல்ல படத்தில் இங்கு வந்து சேர்ந்தது மகிழ்ச்சி. சமீபத்தில் மறைந்த என் தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன். நல்ல ஒரு கருத்தை சொல்லும் ஒரு முக்கியமான படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் இசையமைப்பாளர் ரதன்.

அதர்வா, ஆர்ஜே பாலாஜியுடன் தான் அதிகம் எனக்கு காட்சிகள் இருந்தது. எனக்கு நடிக்க மிகவும் எளிதாக இருக்குமாறு முழு சுதந்திரம் கொடுத்தார் கண்ணன் சார். ஆர்ஜே பாலாஜியின் மார்க்கெட் இப்போது இன்னும் ஏறியிருக்கிறது, எல்லோரும் தியேட்டரில் போய் படத்தை பார்ப்பீங்க என நம்புகிறேன் என்றார் நடிகை இந்துஜா.

ஒரு படம் நினைத்த மாதிரி வரணும்னா அதற்கு நாயகனின் ஆதரவு நிச்சயம் தேவை. அதர்வா அந்த வகையில் படத்தின் மிகப்பெரிய தூணாக இருந்தார். அடுத்த படத்திலும் நாங்கள் இணைகிறோம்.

ஏப்ரல் மாதம் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம். இந்த படம் இந்த அளவுக்கு வர முக்கிய காரணமாக இருந்த பங்கஜ் மேத்தா, அன்புச்செழியன், ராம் பிரசாத் ஆகியோருக்கு நன்றி. படத்தை நல்ல தேதியில் வெளியிட எனக்கு ஆதரவாக இருக்கும் ட்ரைடெண்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சாருக்கு நன்றி. இவன் தந்திரன் படத்துக்கு பிறகு இது எனக்கு முக்கியமான படம்.

அந்த படம் நன்றாக ஓடினாலும், ஒரு சில காரணங்களால் நாங்கள் எதிர்பார்த்த வரவு இல்லை. ஒரு நல்ல திரைப்படத்தை ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை. இந்த படத்தையும் ரசிகர்கள் வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன் என்றார் இயக்குனர் ஆர்.கண்ணன்.

படம் எப்போது ஆரம்பித்து எப்போது முடித்தோம் என தெரியவே இல்லை. மிக வேகமாக முடித்து விட்டோம். பூமராங் என்றால் கர்மா. நாம் என்ன செய்தோமோ அது தான் நமக்கு திரும்ப வரும். இந்த படத்தில் பிரச்சார தொனி எதுவும் இருக்காது, எங்கள் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக படத்தை எடுத்திருக்கிறோம்.

ரதன் ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் தமிழில் நிறைய படங்கள் இசையமைக்க வேண்டும். இந்துஜா, மேகா ஆகாஷ் இரண்டு பேருக்குமே நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு.

தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை. நல்ல கருத்தை தாங்கி இந்த பூமராங் வந்திருக்கிறது, அனைவரையும் சென்று சேரும் என நம்புகிறேன் என்றார் நடிகர் அதர்வா.

இந்த சந்திப்பில் நடிகை மேகா ஆகாஷ், படத்தொகுப்பாளர் ஆர்கே செல்வா, எம்கேஆர்பி ப்ரொடக்‌ஷன்ஸ் எம்கே ராம் பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Boomerang movie based on Tamilnadu Politics and water Issue

More Articles
Follows