பொங்கல் ரேஸில் சூர்யா விலகல் : ‘வலிமை’க்கு வழிவிட்டாரா ‘எதற்கும் துணிந்தவன்’.?

பொங்கல் ரேஸில் சூர்யா விலகல் : ‘வலிமை’க்கு வழிவிட்டாரா ‘எதற்கும் துணிந்தவன்’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

இமான் இசையைமத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட புகழ் பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை 2022 பொங்கல் தினத்தில் தியேட்டர்களில் வெளியிட எண்ணியிருந்தனர்.

ஆனால் ஏற்கெனவே பொங்கல் சமயத்தில் சில படங்களின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அஜித் நடித்துள்ள வலிமை, (ஜனவரி 14 ரிலீஸ்) ராஜமௌலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் (ஜனவரி 7 ரிலீஸ்), பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் போன்ற படங்கள் ரெடியாகிவிட்டது.

இந்த நிலையில் 2022 பிப்ரவரி 4ல் எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.

Etharkkum Thunindhavan locks release date in February

நீதியரசர் சந்துரு உடன் இணைந்து தன்னையே கௌரவப்படுத்திய பார்த்திபன்

நீதியரசர் சந்துரு உடன் இணைந்து தன்னையே கௌரவப்படுத்திய பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வணக்கம் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு…

சமீபத்தில் என் பிறந்த நாள், பொதுவாக நான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை, காரணம் உருவமாக நான் வெளி வந்த நாளை விட, ஒரு கலைஞனாக பார்த்திபன் என்ற பெயரிட்டு என்னை இந்த திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய திரு பாக்யராஜ் அவர்கள் மூலமாக, நான் பிறந்த பிறகு தான் என் வாழ்க்கையில் சுபிட்சம் தொடங்கியது.

89,90 களில் என் பிறந்த நாளின் போது, மிகப்பெரிய விழாவாக நான் கொண்டாட, அன்றைய செய்திதாள்களில், தினத்தாள்களில் என்னை வாழ்த்தி வந்த விளம்பரங்கள் ஏராளம்.

நடிகர் சிவகுமார் அவர்கள் என்னிடம் சொன்னார் ‘சில வருடங்களில் இது கொஞ்சம் குறையலாம், குறையும்போது உன் மனம் வருத்தப்டும் வேண்டாமே’ என்றார். அன்றிலிருந்து நிறுத்தி விட்டேன் என் பிறந்த நாள் கொண்டாட்டங்களை.

நாம் தினந்தோறும் இறந்து, மறுநாளில் பிறக்கிறோம் அது தான் உண்மை . ஒவ்வொரு உறக்கமும் ஒரு சிறிய மரணம். விடிந்த பின் தான் தெரிகிறது இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கிறதென்று,அப்படி பல முறை நாம் மடிந்தும் பிறக்கிறோம்.

மரணம் என்பது கொஞ்சம் மானம் போகும்போது கூட நிகழ்கிறது. அப்படி எல்லோர் வாழ்விலும் சில மரணங்கள், எனக்கும் சில மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஒரு மரணத்திலிருந்து நான் மீண்டும் உயிர்த்தெழுந்தது குழந்தைகளின் அன்பால். அபி , கீர்த்தி, ராக்கி மூவரும் மீண்டும் ஒரு முறை எனக்கு உயிர்பிச்சை தந்தார்கள்.

அன்றிலிருந்து துவங்கியது மீண்டும் ஒரு நம்பிக்கையான வாழ்க்கை. இவ்வருடம் அக்குழந்தைகள் என் பிறந்த நாளை கொண்டாட விரும்பினார்கள். அந்த கொண்டாட்டம் என்பது எல்லோரும் கூடி மகிழ்ந்து உண்டு, சிரித்து, மகிழ்வாக கழிக்கும் தருணம்.

அப்படி அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் போது எனக்கு என்ன தோன்றியதென்றால் அதை மறுக்கவுமில்லாமல் அதில் வேறொரு பயனுள்ள காரியத்தை செய்யலாம் எனத் தோன்றியது.

பிறந்த நாளை பயனுள்ள நாளாக மாற்றலாம் என என்னுடைய நீண்டநாளைய நண்பர் நீதியரசர் சந்துரு அவர்கள், ஜெய்பீம் படம் மூலமாக இந்த உலகம் அறிய, இந்த உலகம் புகழ காரணமாயிருக்கிறார்.

இந்த புகழ் தேடி அவர் வாழ்க்கை இல்லை. இப்படியெல்லாம் தன்னை பற்றி ஒரு நாள் படமெடுப்பார்கள், மதிப்பு வரும், மரியாதை கூடும் என்றெல்லாம் அவர் கருதியதில்லை. அப்படி கருதியிருந்தால் இதை செய்திருக்கவே முடியாது. பிரதிபலன் பாராமல் தான் அவர் இந்த காரியங்களெல்லாம் செய்திருக்கிறார்.

அவரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும் எனது எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர் தலைமை கண்டிருக்கிறார். ஆனால் இன்று அவரை பாராட்டுவது, கௌரவப்படுத்துவது என்னை நானே பாராட்டிக்கொள்வதை போல ஒரு சுயநல விசயாமாக எனக்கு தோன்றியது. எனவே அவரை அழைத்து கௌரவப்படுத்தலாம் என்று கருதி என்னை நானே கௌரவப்படுத்தி கொண்டேன்.

நண்பர் ஓவியர் ஶ்ரீதர் வரைந்த ஓவியம் ஒன்றை அவரிடம் கொடுத்து, அவரின் துணைவியாரையும் வரச்சொல்லி, திரு பாரதிராஜா, திரு பாக்யராஜ், பிரபு தேவா, விஜய்சேதுபதி, ரவிவர்மன், இசையமைப்பாளர் சத்யா, இயக்குநர் ரஞ்சித் இப்படி சிலருடன் அந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது. திரு சந்துரு அவர்கள் ஒரு இன்ஷ்பிரசேனாக இளைஞர்களுக்கு ‘ஒரு யோக்கியனா வாழ்ந்தா, இப்படிபட்ட பெருமையெல்லாம் கிடைக்கும்,

இந்த வாழ்கையில பணத்த மீறி, புகழ மீறி உள்ளுக்குள் ஒரு நல்ல மனிதனாக, நாம் எடுத்து கொண்ட தொழிலை, சீராக சிறப்பாக செய்வதற்கு வெளியிலிருந்து யாரும் பாராட்ட தேவையில்லை, அகம் மகிழ்ந்து போகுமதில், அப்படிபட்ட அகமகிழ்ச்சியை, அதன் விளைவை அதன் மதிப்பை, இன்றைய இளைஞர்களும் தெரிந்து கொள்ள திரு சந்துரு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்’.

அதே போல் நானும் இந்த பிறந்த நாள் ஏதாவது ஒரு வகையில், யாருக்கேனும் உதவும் வகையில் அமையவேண்டுமென்று ஆசைப்பட்டு, இப்படியான ஒரு நிகழ்ச்சியை நடத்தி மகிழ்ச்சியை தேடிக்கொண்டேன். அதை உங்களோடு நான் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி…

Actor Parthiban celebrated his birthday with former Judge Chandru

குருகுலம் செட் விபத்தில் உயிர்பிழைத்த 5 பேர்.; 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த சொல்லப்படாத கதை.!

குருகுலம் செட் விபத்தில் உயிர்பிழைத்த 5 பேர்.; 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த சொல்லப்படாத கதை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மரகத நாணயம்’ , ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’
படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஜி.வி.பெருமாள் வரதன், 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

வரலாற்று சம்பவத்தை மையப்படுத்திய சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் நகைச்சுவையை சேர்த்து, இப்படத்தை இயக்கி வரும் ஜி.வி.பெருமாள் வரதன், சில வரலாற்று காட்சிகளை படமாக்குவதற்காக செங்கல்பட்டு பகுதியில் பிரமாண்டமான அரங்குகள் சிலவற்றை அமைத்துள்ளார்.

அதில் முக்கியமாக, அக்காலத்து குருகுலம் ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான முறையில் உருவாக்கியுள்ளனர்.

படத்தின் மிக முக்கியமான காட்சியை படமாக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த குருகுலம் செட், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் முழுவதும் சேதமடைந்து படக்குழுவினருக்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்து நிகழும் போது அந்த இடத்தில் படக்குழுவை சேர்ந்த ஐந்து பேர் இருந்துள்ளனர். விபத்து நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த ஐந்து பேரும் அங்கிருந்து வெளியேறியதால், நூலிழையில் உயிர் தப்பினார்கள்.

இது குறித்து கூறிய இயக்குநர்…

“இந்த விபத்தால் எங்களுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், விபத்தில் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாமல் இருந்தது பெரும் ஆறுதலாக இருக்கிறது.

குறிப்பாக விபத்து நடக்கும் போது அங்கிருந்த படக்குழுவினர் நுலிழையில் உயிர் தப்பினார்கள். கடவுளுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

உற்சாகத்தோடு படப்பிடிப்பை தொடங்கிய எங்களுக்கு எதிர்பாராத இந்த விபத்து சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், இதில் இருந்து மீண்டு மீண்டும் படப்பிடிப்பை விரைவில் துவங்குவோம்.” என்றார்.

‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் காவல்துறையினரின் அத்துமீறல்களையும், அடாவடித்தனத்தை வெளிக்காட்டும்
கதாப்பாத்திரத்தில் நடித்த சுரேஷ் ரவி, இப்படத்தில் காவல்துறையின் பெருமையையும், அவர்களுடைய நேர்மையையும்
வெளிக்காட்டும் கதாப்பாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷா கவுடா நடிக்கிறார்.

நிழல்கல் ரவி, போஸ் வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை – கோதண்டம், மீசை
ராஜேந்திரன், அசுரன் அப்பு, பொம்மி ராஜன், ஜே.எஸ்.கே கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார். மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார்.

ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, முனிராஜ் கலையை
நிர்மாணிக்கிறார். நடன காட்சிகளை சந்தோஷ் வடிவமைக்கிறார்.

பல்லவ மன்னர்களில் முக்கியமானவரான நந்தி வர்மனைப் பற்றி இதுவரை சொல்லப்படாத ஒரு உண்மை தகவலை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Gurukulam movie set damaged in recent flood

ஒரே படத்தில் ரஜினியின் 2 பாலிவுட் ஹீரோயின்களுடன் இணையும் சிம்பு ரசிகர்

ஒரே படத்தில் ரஜினியின் 2 பாலிவுட் ஹீரோயின்களுடன் இணையும் சிம்பு ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைத்துறையில் வெகு சில நடிகர்களே மொழி எல்லைகளை கடந்து, இந்தியா முழுதும் மிளிரும் நட்சத்திரமாக, மின்னும் திறமை பெற்றிருக்கிறார்கள்.

அந்த வகை நடிகர்களை தனித்துவமாக்குவது, அவர்களிம் அடுத்த வீட்டு பையன் போன்ற லுக்கும், அவர்களின் இயல்பு மிகு, நேர்த்தியான நடிப்புமே ஆகும். இந்த வரிசையில், பாலிவுட்டில் பெரும் நட்சத்திரங்களும், திறமையான தொழில்நுட்ப கலைஞர்களும் இணையும், பிரம்மாண்ட படத்தில் இணைந்து, புதிதாக பாலிவுட்டில் தனது பயணத்தை துவங்கியுள்ளார் நடிகர் மஹத் ராகவேந்திரா.

இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகரும் ஆவார்.

ஆம் இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில், முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும், புதிய திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகனாக அறிமுகமாகிறார் மஹத் ராகவேந்திரா.

மங்காத்தா புகழ் நடிகர் மஹத் ராகவேந்திரா, இப்படத்தில் நடிகர் ஜாஹிர் இக்பாலுடன் இணைந்து மற்றொரு நாயகனாக நடிக்கின்றார்.

பாலிவுட்டின் பெரும் நட்சத்திரங்களான சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

(ரஜினியின் ‘லிங்கா’ பட நாயகி சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ரஜினியின் ‘காலா’ பட நாயகி ஹூமா குரேஷி)

இப்டத்திற்காக 30 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பை முடித்து, படப்பிடிப்பின் அற்புதமான தருணங்களால் பெரும் உற்சாகத்திலிருக்கும் நடிகர் மஹத் ராகவேந்திரா படம் குறித்து கூறியதாவது…

‘முதலில் பாலிவுட்டின் பெரும் திறமையாளரான முதாஸ்ஸர் அஜிஸ் போன்றவருடன் இணைந்ததற்கு கடவுளுக்கு நன்றி.

மொத்த படக்குழுவும் ஒரு குடும்பத்தில் இருப்பது போலான உணர்வையே எனக்கு தந்தார்கள். எந்த ஒரு கதாப்பாத்திரத்திலும் தனித்துவமாக மின்னும், பாலிவுட்டின் பெரும் நட்சத்திரங்களான சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோருடன் நடிக்க முதலில் எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது.

படப்பிடிப்பில் ஒரு எந்த ஒரு காட்சியாக இருந்தாலும், ஒரு டேக்கில் நடித்து விடும் அவர்களின் மாயாஜாலத்தை நேரில் அனுபவித்தேன். இருவருமே தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்கள்.

இருவரும் மிகப்பெரிய நட்சத்திரங்களானாலும், என்னிடம் இயல்பாக பழகி, படப்பிடிப்பில் என்னை மிக இலகுவாக உணரவைத்து, நான் நன்றாக நடிக்க நம்பிக்கை தந்தார்கள்.

நான் நடிகர் ஜாஹிர் இக்பால் உடன் மற்றொரு நாயகனாக இணைந்து நடிக்கிறேன். ஆனால் இப்போது அவரை சக நடிகர் என்பதை விட, ஒரு சகோதரர் என்றே கூற முடியும். அந்தளவு படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இன்னும் அவருடன் படப்பிடிப்பில் இணைந்து நடித்து கொண்டிருக்கிறேன்.

படப்பிடிப்பு தளம் எப்போதும் மிக உற்சாகமாகவே இருக்கும். இவர்களுடன் இணைந்து, இன்னும் பல சிறந்த அனுபவங்களை பெற ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மேலும் இந்த பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்தது குறித்து, நடிகர் மஹத் ராகவேந்திரா கூறும்போது…

சில மாதங்களுக்கு முன்னர், பாலிவுட் படத்தயாரிப்பில் உள்ள, நண்பர் சுதீஷ் சென் நான் பாலிவுட் படங்களிலும் முயற்சிக்க வேண்டும் என அறிவுரை தந்தார். அவரது அறிவுரையின் பேரில், நானும் சில பாலிவுட் படங்களின் ஆடிசனில் பங்கேற்றேன்.

பிறகு தமிழ் திரைத்துறையில் எனது கவனத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டேன். ஒரு நாள் முதாஸ்ஸர் அஜிஸ் அவரது படத்தில் நடிக்க புதிய நாயகனை தேடுவதாகவும், அவருக்கு எனது விவரங்களை அனுப்பும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டேன்.

எதிர்பாரா ஆச்சர்யமாக படக்குழு முழு திரைக்கதையையும் எனக்கு அனுப்பினர், பின் முதாஸ்ஸர் அஜிஸ் ஜூம் மீட்டிங்கில் முழுக்கதையையும் எனக்கு விவரித்தார். இந்த தருணத்தில் நண்பர் சுதீஷ் சென், ஆஷிஷ் சிங் மற்றும் தயாரிப்பாளர்களான Vipul shahs optimystyx Ashwin varde மற்றும் rajesh Bahl wakhaoo film ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவர்கள் நான் இப்படத்தில் நடிப்பதற்கு பெரும் துணையாய் இருந்தனர்.

லண்டனில் 30 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டு, தற்போது டெல்லியில் தனது கதாபாத்திரத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்குகொண்டுள்ளார் மஹத் ராகவேந்திரா.

இந்த மொத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுபவமும், கனவில் மிதப்பது போன்ற அழகிய தருணமாக, அவர் கொண்டாடும் நேரத்தில், இந்தி மொழியை அவர் கையாண்டது குறித்து கேட்டபோது… அதற்கு அவர்

“மனைவி பிராச்சி மிஸ்ராவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றும், அவர் தான் இந்தி மொழி வழக்கில் தனக்கு டிரெய்னிங் தந்ததாகவும். அதன் பிறகு பிரத்யேகமாக இதற்கென நிறைய பயிற்சிகள் மேற்கொண்டதாகவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில்.. இப்படம் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது.

ஆனால் இது பெண்களுக்காக ஒரு செய்தியை அழுத்தமாக கூறும் படம். இறுதியாக… இது நான் நினைத்தே பார்த்திராத, ஒரு கனவு குழுவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இந்த அற்புதமான அனுபவத்திற்காக கடவுளுக்கு நன்றி” என்றார்.

Actor Mahat is making his Bollywood debut

அத நான் பாத்துகுறேன்.. என்னைய நீங்க பாத்துகுங்க..; கதறி அழுத சிம்பு ரசிகர்களுக்கு கோரிக்கை

அத நான் பாத்துகுறேன்.. என்னைய நீங்க பாத்துகுங்க..; கதறி அழுத சிம்பு ரசிகர்களுக்கு கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மாநாடு’.

யுவன் இசையமைத்துள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இந்த படம் நவம்பர் 25ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

‘மாநாடு’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்தது.

இந் நிகழ்ச்சியில் மாநாடு ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

இதில் பேசிய பிரபலங்கள் சிம்புவை வெகுவாக புகழ்ந்தனர்.

இறுதியாக சிம்பு பேசினார்.

சிம்பு என்ன பேசுவார் என்று ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு சிம்பு கொடுத்தது அதிர்ச்சி தான்.

முதலில் 3 நிமிடம் ரசிகர்களின் கோஷத்தால் பேச முடியாமல் தவித்தார். இறுதியாக எமோஷனல் ஆகி கண்ணீர் விட்டு பேச முடியாமல் தவித்தார்.

“எனக்கு கடந்த சில வருடங்களில் நிறைய பிரச்சினைகள் வந்தன.. பிரச்சினைகளை நான் பாத்துகுறேன்.. என்னைய நீங்க பாத்துகுங்க..” என ரசிகர்களிடம் கண்ணீரூடன் கோரிக்கை வைத்தார் சிம்பு.

STR request his fans at Maanaadu pre release event

அவர் நட்சத்திரத்தில பொண்ணு பாருங்க.. கல்யாணம் பண்ணிக்கிறேன்.. – சிம்பு

அவர் நட்சத்திரத்தில பொண்ணு பாருங்க.. கல்யாணம் பண்ணிக்கிறேன்.. – சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘மாநாடு’.

கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

வரும் நவ-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி இன்று காலை சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் டி.சிவா, சத்யஜோதி தியாகராஜன், சித்ரா லட்சுமணன், எஸ்.ஆர்.பிரபு, கே.ராஜன், தனஞ்செயன், விநியோகஸ்தர் சுப்பையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, …

“இந்தப்படம் பண்ணலாம் என சிம்புவிடம் இருந்து அழைப்பு வந்தபோது இவ்வளவு பெரிய படத்தை நம்மால் பண்ண முடியுமா என ஆரம்பத்தில் பயமாக இருந்தது. ஆனால் படம் முடிந்து பார்த்தபோது சிம்பு என்னிடம் ஒப்படைத்த வேலையை நூறு சதவீதம் சரியாக செய்திருக்கிறேன் என்கிற திருப்தி கிடைத்தது. உக்கம்சந்த், திருப்பூர் சுப்பிரமணியன் போன்றவர்கள் ஆதரவுடன் எந்தவித தடங்கலும் இல்லாமல் படத்தை முடித்து விட்டோம்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்..நாதன் இந்திப்படம் போல காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியுள்ளார். இசைஞானி இளையராஜாவுக்கு எப்படி காதலுக்கு மரியாதை படம் ஒரு கம்பேக் படமாக இருந்ததோ, அதேபோல யுவன் சங்கர் ராஜாவுக்கு இந்த மாநாடு படம் இருக்கும். எஸ்ஜே.சூர்யா கூட, இது இன்டர்நேஷனல் சப்ஜெக்ட்.. ஹிந்தி ரீமேக் நல்லா போகும் என்றார். தெலுங்கிலும் கூட அவரே டப்பிங் பேசியுள்ளார்” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது,…

“சிம்புவை பற்றி எல்லோரும் பலவிதமாக சொல்வார்கள்.. ஆனால் அவரை பற்றி சொல்லப்பட்டது, கேள்விப்பட்டது எல்லாமே பொய். அவரிடம் சில சேஷ்டைகள் உண்டு.. ஆனால் அவை எல்லாமே எனக்கு பிடிக்கும்.. இந்த வயதில் அப்படி சேஷ்டைகளுடன் இருந்தால் தான் அவர் சிம்பு. நான் படமெடுத்த காலத்தையும் இப்போது வெங்கட் பிரபு படமெடுக்கும் விதத்தையும் பார்த்து பிரமித்து போய் நிற்கிறேன். அதேசமயம், வெங்கட்பிரபு நீதான் பெரியவனா..? உனக்கு போட்டியாக நானும் மீண்டும் படமெடுப்பேன்” என ஜாலியாக சவால் விடுத்தார்.

நடிகர் ஒய்.’ஜி.மகேந்திரன் பேசும்போது,….

“இன்று திரையுலகில் இருக்கும் நடிகர்களில் இரண்டே இரண்டு பேர் தான் சினிமாவுக்காகவே பிறந்தவர்கள். ஒருவர் கமல்.. இன்னொருவர் சிம்பு… அந்த அளவு சினிமா பற்றியே நினைக்க கூடிய ஒருவர் தான் சிம்பு.. இந்தப்படத்துல சிம்பு ஏதாவது பிரச்சனை பண்ணுறாரான்னு என்கிட்டே கேட்டாங்க.. ஆமா பிரச்சனை பண்றார்.. சொன்ன டைமுக்கு சரியா வந்து கோ-ஆபரேட் பண்றாரு.. அதான் பிரச்சனைன்னு சொன்னேன்..

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு சுமைதாங்கி அப்படின்னா, வெங்கட் பிரபு இயக்குனர்களில் எம்.எஸ்.தோனின்னு சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லா பிரச்சனைகளையும் கூலாக கையாளுவார். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ரெக்கார்டு பிரேக் செய்யும் அளவுக்கு இருக்கிறது. எனக்கு இன்றைக்கே ரிலீஸ் தேதியாக இருக்க கூடாதா என ஏக்கமாக இருக்கிறது” என்றார்.

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசும்போது,…

“நாங்கள் பணக்காரன் படம் எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் பக்கத்து செட்டில் ஒரு சின்னபையன் பிரமாதமாக டான்ஸ் ஆடுறான் என சொன்னார்கள்.. எல்லோரும் அங்கே போய் பார்த்துவிட்டு வந்து இப்படி பாராட்டுவதை பார்த்து உடனே ரஜினி சார் ரொம்பவே ஆர்வமாகி, வாங்க நாமளும் பார்த்துட்டு வரலாம் என கூறினார்.

அங்கே குழந்தை நட்சத்திரமான சிம்புவின் நடனத்தை பார்த்து வியந்து என்ன மாதிரி திறமையா இருக்கான் பாருங்க.. பின்னாடி பெரிய ஆளா வருவான் என அப்போதே கணித்து பாராட்டினார்.

நானும் அப்போது இருந்து சிம்புவின் வளர்ச்சியை கவனித்து வருகிறேன்.. அவர் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார்” என கூறினார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,…

“இந்தப்படத்தின் தயாரிப்பு பணிகளை கவனிக்கும் மேற்பார்வை பொறுப்பை சுரேஷ் காமாட்சி சில நாட்கள் என்னிடம் கொடுத்திருந்தார். படப்பிடிப்பு தளத்தில் ஒய்வு எடுக்கும்போது நான் சாதாரண நாற்காலியில் அமர்ந்து தூங்குவதை பார்த்து, சிம்பு தனது நாற்காலியை கொடுத்து என்னை வசதியாக தூங்க வழி செய்து கொடுத்தார். பெரியவர்களை மதிக்கும் குணம் அவரிடம் நிறையவே இருக்கிறது” என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது…

, “எல்லோருக்கும் பிடித்த நடிகர் சிம்பு.. பிடிக்காது என்று சொல்வதெல்லாம் சும்மா கட்டுக்கதை. ஒரு ரசிகனாக நான் சொல்வதெல்லாம், நீங்க எப்ப வேணா வாங்க, எப்படி வேணா வாங்க,.. ஆனா அடிக்கடி வாங்க.. அதேமாதிரி இந்தப்படத்தில் வில்லனாக நடித்துள்ள எஸ்ஜே சூர்யாவை நவீன நம்பியார் என இனிமேல் சொல்லலாம்.

எப்படி நம்பியார் இல்லாமல் படங்களே இல்லை என முன்பு ஒரு நிலை இருந்ததோ அதேபோன்ற ஒரு காலகட்டத்தை எஸ்ஜே.சூர்யா இப்போது கொண்டுவந்து விட்டார்” என்றார்.

நடிகர் எஸ்.ஜே/சூர்யா பேசும்போது,…

“நான் அன்பே ஆருயிரே படத்தில் நடிச்சப்ப சில நேரம் சிம்புவை டைரக்ட் பண்ண சொல்லி நடிச்சிட்டு இருப்பேன்.. அந்த அளவு நாங்க திக் பிரண்ட்ஸ்.. எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும் ஒரு கனெக்சன் என்னன்னா அவர் நல்லா இருந்தா நானும் நல்லா இருப்பேன்..

அவர் பிரச்சனைகள்ல சிக்கி கஷ்டப்பட்டா நானும் கஷ்டப்படுவேன். இப்ப அவர் நல்லா இருக்கார்.. நானும் நல்ல இருக்கேன்..

சில சில காரணங்களால இடையில கொஞ்சம் கேப் விட்டுட்டார். ராமனே பதினாலு வருஷம் காட்டுக்கு போய் வந்தாரு.. சிம்புவுக்கும் அந்த மாதிரி தான் இது.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்துக்கு எந்த கஷ்டமும் வந்துட கூடாதுன்னு எல்லா கஷ்டத்தையும் தானே தாங்கிக்கிட்டார்..

ஒரே நேரத்துல பத்து படம் பண்ணுனா எவ்வளவு கவனம் இருக்குமோ அதை இந்த ஒரே படத்துல வெங்கட் பிரபு செஞ்சிருக்கார். அந்த அளவுக்கு பவர்புல்லான ஸ்கிரிப்ட் இது. இனி அடுத்து அவர் படம் பண்ணுனா அது பான் இந்தியா படமா தான் டைரக்ட் பண்ணனும்.

இந்தப்படம் டப்பிங் பண்ணும்போது ஏகப்பட்ட மாடுலேஷன்ல பேசியே எனக்கு கழுத்து வலி, முதுகு வலி எல்லாம் வந்துச்சு. போதாக்குறைக்கு நானே தெலுங்குல டப்பிங் பேசுறேன்னு சொல்லி மாட்டிக்கிட்டேன்.. டப்பிங் முடிச்சுட்டு படத்தை பார்த்தப்ப தான் தோணுச்சு.. தீபாவளிக்கு படம் வரலைன்னா என்ன, படம் வர்ற அன்னைக்கு தான்டா தீபாவளி அப்படின்னு ட்வீட் போட்டேன்.

யுவனோட பின்னணி இசை பத்தி சொல்லனும்னா என்னோட பொம்மை படத்திற்கு அவர் மியூசிக் போட்டிருந்ததை பார்த்துட்டு கிங் ஆப் பேக்ரவுண்ட் ஸ்கோர்ன்னு அவருக்கு மெசேஜ் போட்டேன்.. வாசுகி பாஸ்கர் கூட ஒரு தடவ சொல்லும்போது, மங்காத்தா படத்துல யுவன் அற்புதமான தீம் மியூசிக் போட்டிருந்தாலும், அதையே பல இடங்கள்ல காபி பேஸ்ட் பண்ணிட்டார். ஆனா இந்த மாநாடு படத்துல ஒவ்வொரு இடத்துக்கும் தனித்தனி ரீ ரெக்கார்டிங் பண்ணிருக்கார் அப்படின்னு சொன்னாங்க.. அப்படி ஒரு கலைஞனா அவரை விதவிதமா பண்ற அளவுக்கு இந்தப்படம் ஈர்த்திருக்கு. ” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,….

“நானும் வெங்கட் பிரபுவும் சேர்ந்து பிரியாணி படம் பண்ணிய சமயத்துலே இந்த கதையை அவர் என்னிடம் சொல்லிருக்கார்.. சொல்லப்போனா இந்தப்படத்தோட கதையில இருந்து கிளைக்கதையா தான் பிரியாணி உருவானது.

சிம்பு சார் இந்தப்படத்துல நான் வந்துட்டேனு ஒரு வசனம் பேசுறார். அவர் இப்படி சொல்றது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்.. வெற்றி மட்டும் அவருக்கு ரிப்பீட் ஆகிட்டே இருக்கட்டும்” என்றார்.

யுவன் சங்கர் ராஜா பேசும்போது,…

“வெங்கட் பிரபு இந்தப்படத்தின் கதையை சொல்லும்போதே எதற்கு எப்படி இசையமைக்க போகிறோம் என்கிற ஆர்வத்துடன் கொஞ்சம் புதிராகவும் இருந்தது.. காரணம் டைம் லூப்பில் திரும்ப திரும்ப பல காட்சிகள் ரிப்பீட் ஆகும். ஆனால் முழுப்படத்தையும் பார்த்தபோது ஒரு பாசிடிவ் எனர்ஜி கிடைத்தது. இதில் நீங்க வழக்கமாக பார்க்கும் சிம்புவை பார்க்க முடியாது.” என்றார்.

இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்போது,….

“நான் சென்னை-28 படம் பண்ணின சமயத்துல மதுரை ரிலீஸ்ல சிக்கல் ஏற்பட்டபோது சிம்புதான் அதை ரிலீஸ் பண்ணி கொடுத்தார். நானும் அவரும் சேர்ந்து படம் பண்ணலாம்னு பல முறை பேசியும் மாநாடு படத்துல தான் அது நடந்துருக்கு. இந்தப்படத்தோட ஒன்லைன் மட்டும் தான் சிம்புகிட்ட சொன்னேன்..

ஆனால் அதுல வர்ற ஹீரோவோட அப்துல் காலிக் அப்படிங்கிற பேரு அவருக்கு ரொம்பவே புடிச்சு போச்சு. என் படத்துக்கு யுவன் ஸ்பெஷலா மியூசிக் பண்ணுவார்னு சொன்னாங்க.. ஆனா சிம்பு படத்துக்கு தான் யுவன் ரொம்ப ஸ்பெஷலா மியூசிக் பண்ணுவாரு” என்றார்.

நாயகன் சிம்பு பேசும்போது,….

“என் படம்னாலே பிரச்சனைகள் வர்றது வழக்கமா போயிடுச்சு. இந்த மாதிரி சூழல்ல தைரியமா எல்லாத்தையும் எதிர்கொள்கிள்ற ஒரு தயாரிப்பாளர் இருந்தா நல்லா இருக்கும்னு முடிவு பண்ணுனப்ப சுரேஷ் காமாட்சி தான் எனக்கு தெரிஞ்சார்.

இன்னைக்கு வரைக்கும் இந்தப்படத்தை எல்லா பிரச்சனைகளையும் தாண்டி இங்க கொண்டு வந்துருக்காரு. வெங்கட் பிரபுவும் நானும் சின்ன வயசுல இருந்தே பழகிட்டு வர்றோம்.. என்கிட்ட அவனது அவரோட கதைகளை எல்லாம் சொல்வாரு.. ஆனால் வேறொரு ஹீரோவை வச்சு படத்தை பண்ணிட்டு போயிடுவாரு,.. இப்ப மாநாடு படத்துல ஒன்னு சேர்ந்துட்டோம்.

இது டைம் லூப் கதைன்னாலும் பார்க்குற உங்களுக்கு புரியும்.. ஆனா அதை படமா எடுக்குறத்துக்குள்ளே நாங்க பட்ட கஷ்டங்கள் அதிகம்.

யுவன் எனக்கு நண்பனா, சகோதரனா, அப்பாவா எல்லாமாக இருக்கார். அவரோட நட்சத்திரம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த அம்சமுள்ள ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணனும்னு தான் முடிவு பண்ணிருக்கேன். அந்த அளவுக்கு எங்க ரெண்டு பேருக்கும் ஒரே அலைவரிசை தான் இருக்கு..

இந்தப்படம் வெளியானதுக்கு அப்புறம் எஸ்ஜே.சூர்யாவை பிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு மனுஷன் பிச்சு உதறி இருக்காரு. நான் விரல்ல வித்தை பண்ணுவேன்னு சொல்வாங்க..

ஆனால் என்னோட நடிச்ச ஒய்ஜி மகேந்திரன் சார் விரல்லயே நடிச்சிருக்கார்.. இந்தப்படம் முடியுற வரைக்கும் பிரேம்ஜிகிட்ட அப்பப்ப, பிரேம் ஓவரா நடிக்காதன்னு சொல்லகிட்டே இருந்தேன்..இந்தப்படத்துல சண்டைக்காட்சிகள்ல நடிக்கிற அடிபட்டுச்சு..

என்றவர் திடீரென கண் கலங்கினார்..

“என்னை சுற்றி பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்காங்க.. ஆனா அந்த பிரச்சனையெல்லாம் நான் பார்த்துக்குறேன்.. என்னை மட்டும் நீங்க பாத்துக்குங்க” என தன்னை தனது ரசிகர்களிடம் ஒப்படைப்பது போல நெகிழ்வாக பேசிய சிம்பு, அதற்கு மேல் பேச முடியாமல் தனது பேச்சை நிறைவு செய்தார்.

STR talks about his marriage at Maanaadu pre release event

More Articles
Follows