சீமராஜா எடிட்டிங்கிலேயே ஒரு கொண்டாட்டமான அனுபவமாக இருந்தது – தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன்!

vivek harshanஆக்‌ஷன், காமெடி, காதல், ஹாரர் என எந்த வகை படமாக இருந்தாலும் படத்தொகுப்பாளர் அனுபவிக்கும் மன அழுத்தம், காலக்கெடு எதுவுமே தவிர்க்க முடியாதவை. எனினும், அப்படிப்பட்ட ஒரு படத்தொகுப்பாளரிடம் இருந்து, குறிப்பாக விவேக் ஹர்ஷன் போன்ற தேசிய விருது பெற்ற ஒருவரிடம் இருந்து, “சீமராஜா எடிட்டிங்கிலேயே எனக்கு ஒரு கொண்டாட்டமான அனுபவமாக இருந்தது” என்ற ஒரு வார்த்தைகளை கேட்பது அரிதினும் அரிது.

இயக்குனர் மனதில் நினைத்து எடுத்த காட்சிகள், படத்தொகுப்பாளரின் சரியான உணர்வை தூண்டிவிடுவது மிகவும் அரிது. சீமராஜா படத்தில் பணிபுரியும் போது, இறுதி வடிவம் கொடுக்கும் முன்பே நிறைய காமெடி, உணர்வுப்பூர்வமான காட்சிகள் என் உணர்வை சரியாக கணித்தன. திரையரங்குகளில் என் அனுபவத்தின் அளவை விட இரட்டிப்பு அளவுக்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடுவார்கள் என நான் நம்புகிறேன். முக்கியமாக, டிரெய்லரில் நீங்கள் சில நொடிகள் பார்த்த ஒரு பகுதி படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும்” என்றார் விவேக் ஹர்ஷன். பொன்ராம், சிவகார்த்திகேயன் ஆகியோரின் ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களிலும் ஏற்கனவே பணிபுரிந்திருந்தார் விவேக் ஹர்ஷன்.

சிவகார்த்திகேயன், சமந்தா ஜோடியாக நடித்திருக்கும் இந்த படத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. வித்தியாசமான அவதாரத்தில் சிம்ரன் மிரட்ட, சூரி வழக்கம் போல காமெடியில் பின்னி எடுக்கப் போகிறார். தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவின் 24AM ஸ்டுடியோஸ் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த சீமராஜா, செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் அதிர்ஷ்ட சின்னமாக விளங்கும் வெற்றிக் கூட்டணி, டி இமான் (இசை), பாலசுப்ரமணியம் (ஒளிப்பதிவு), விவேக் ஹர்ஷன் (படத்தொகுப்பு) யுகபாரதி (பாடல்கள்) மற்றும் பலர் இந்த படத்திலும் பணி புரிவது ஏற்கனவே எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது.

Overall Rating : Not available

Latest Post