விஜய்சேதுபதியுடன் இணையும் கபாலி ரஞ்சித், கலையரசன்..!

Director Ranjith Actor Kalaiarasn Raise Voiceவருகிற ஜூன் 11ஆம் தேதி பேரறிவாளவன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் பேரணி நடைபெற்றவுள்ளது.

இப்பேரணி வேலூர் சிறையில் இருந்து சென்னை கோட்டை வரை நடைபெறவுள்ளது.

இதில் அரசியல் பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இதில் நடிகர் விஜய்சேதுபதியும் இணையவுள்ளார்.

இவரைத் தொடர்ந்து தற்போது கபாலி இயக்குனர் பா. ரஞ்சித், நடிகர் கலையரசன் மற்றும் மூடர் கூடம் நவீன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இதுதொடர்பாக இவர்கள் தெரிவித்துள்ளதாவது…

“பேரறிவாளனின் 25 ஆண்டு கால சிறை தண்டனை என்பது மிகக் கொடுமையானது.

அவரது தாய் அற்புதம் அம்மாள் இதற்காக கடுமையாக போராடி வருகிறார்.

எனவே பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்தி நடைபெறவுள்ள மோட்டார் வாகனப் பேரணியில் கலந்துக் கொள்கிறோம்.

இதை அரசியலாக பார்க்காமல் மனிதநேயமாக பார்க்க வேண்டும்.” என்றனர்.

Overall Rating : Not available

Latest Post