விஜயகாந்த்-பிரபு படங்களை இயக்கியவர் ஏவிஎம் எதிரே அனாதையாக இறந்து கிடந்தார்

விஜயகாந்த்-பிரபு படங்களை இயக்கியவர் ஏவிஎம் எதிரே அனாதையாக இறந்து கிடந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். நிறுவனத்தின் 150வது படமான விஜயகாந்த் நடித்த ‛மாநகர காவல்’ படத்தை இயக்கியவர் எம்.தியாகராஜன்.

இவர் இளையதிலகம் பிரபு நடித்த ‛வெற்றி மேல் வெற்றி’, ‛பொண்ணு பார்க்க போறேன்’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் சினிமா வாய்ப்பின்றி சென்னை மாநகர தெருக்களில் அநாதையாக அலைந்து திரிந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 8ஆம் தேதி அதிகாலை சென்னையில் ஏ.விஎம்.எம். ஸ்டுடியோ எதிரில் உள்ள தெருவில் அனாதையாக இறந்து கிடந்தார்.

அவரது உடலை கைப்பற்றிய போலீசார், கே.எம்.சி.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாநகர காவல் என்ற பெயரில் படம் எடுத்த இயக்குனரின் நிலையறிந்து திரையுலகினரும் ரசிகர்களும் செய்வதறியாது உள்ளனர்.

இவரது மறைவுக்கு விஜயகாந்த், அவர் குடும்பத்தினர் சார்பில், மறைந்த எம்.தியாகராஜன் தம்பியும், முன்னாள் எம்எல்ஏவுமான விஜயகுமாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை அருப்புகோட்டையில் நடக்கும் எம்.தியாகராஜன் இறுதி சடங்கில் தேமுதிக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director M Thyagarajan passed away

ஆப் கொடுக்கும் ஆச்சரியம்..; அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ சவாரி..

ஆப் கொடுக்கும் ஆச்சரியம்..; அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ சவாரி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய Sudesi App தற்போது சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த செயலி மூலம் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள முடியும்.

Sudesi App-ஐ அறிமுகம் செய்வதற்காக சென்னையில் நடைபெற்ற அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு Sudesi App பற்றி பேசினார்கள். Sudesi App- ன் CEO கோபி பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதன் பிறகு சிறப்பு விருந்தினர்கள் ஒன்றினைந்து Sudesi App-ஐ அறிமுகம் செய்தனர். திருச்சியில் 800 ஓட்டுநர்கள் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுடன் இயங்கி கொண்டிருக்கும் Sudesi App சென்னையில் 10.12.2021 முதல் ஆட்டோ டிரைவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். அதன்பின் அடுத்த 5 நாட்களில் முதல் சேவையை தொடங்க இருக்கிறது.

கால் டாக்சி மற்றும் வாடகை ஆட்டோ சேவைகளை வழங்குவதில் ஓலா, உபெர் போன்ற செயலிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதுபோன்ற செயலிகள் வெளியானது முதல் ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் பாதிக்கபட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக Sudesi App-ஐ உருவாக்கும் முன், சுதந்திரம் என்ற பெயரில் டெலிகிராம் அக்கவுண்ட் மற்றும் இலவச தொலைபேசி எண் மூலமாக இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சரியான கட்டணத்தில் சேவை வழங்க துவங்கினர். பின் சுதந்திர மீட்டர் ஆட்டோ என்ற பெயரை மாற்றி சுதேசி என்ற பெயரில் செயலியை உருவாக்கி் ஆட்டோ மற்றும் டாக்சி இரண்டு சேவையும் தருகின்றனர்.

Sudesi App, A specified app for Auto ride from the auto drivers Launched in chennai

அஸ்வினை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..; டிவி சீரியல் நடிகரும் கண்டிப்பு

அஸ்வினை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..; டிவி சீரியல் நடிகரும் கண்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவுக்கு பல பிரபல நட்சத்திரங்களை தந்த டிவி விஜய் டிவி என்று சொன்னால் அது மிகையல்ல.

அண்மையில் குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மூலம் அஸ்வின், புகழ், சிவாங்கி உள்ளிட்ட பிரபலங்களையும் தற்போது சினிமாவுக்கு தந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வினுக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

எனவே தான் இவர் தன் சமூக வலைத்தளப்பக்கங்களில் அடிக்கடி PEOPLES LOVE என்பார்.

சில டிவி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். அண்மையில் வெளியான

‘ஓ மணப் பெண்ணே’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இவர் முதன் முறையாக நாயகனாக நடித்துள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’.

இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்பதை நம் தளத்தில் செய்தியாக பார்த்தோம்.

இந்த விழாவில் அஸ்வின் பேசிய பேச்சுக்கள் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் கதையை கேட்பதற்கு முன் 40 கதைகளை கேட்டதாகவும், அந்த கதைகளை கேட்கும்போதே அஸ்வின் தூங்கி விட்டதாகவும் அவர் பேசினார்.

நான் நடிச்ச படம் நல்லா வரேலன்னா நானே அந்த படத்தை வெளியிட முடியாத அளவுக்கு நானே ஏதாச்சும் செய்வேன்” எனவும் பேசினார்.

மேலும் இப்பட இயக்குனர் பேசும்போது… நான் ஒரு புதுமுக நடிகரை இயக்குவது போல இல்லை. ஒரு சூப்பர் ஸ்டார் படத்தை இயக்குவது போல உணர்ந்தேன்” என ஹீரோவுக்கு ஐஸ் வைத்த மாதிரி பேசினார்.

இதனால் அஸ்வினை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் நடிகரும் ‘திட்டம் இரண்டு’ பட இயக்குருமான விக்னேஷ் கார்த்திக் என்பவரும் அஸ்வினின் பேச்சை மறைமுகமாக விமர்சித்து உள்ளார்.

இதுகுறித்து அவரின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

‘ஒரு ஹீரோ தன்னுடைய முதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதை கேட்டேன். நான் இயக்குனர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பேன் படம் நல்லா வரலன்னா நான் எப்படியாவது ரிலீஸ் பண்ண விடமாட்டேன்னு பேசியுள்ளார்.

இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல அதுக்குள்ளயா ? அப்போ

இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடைய அவல நிலையை யோசித்துப் பாருங்கள். ஒருவேளை இவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஹீரோவாக மாறி விட்டால் என்ன நடக்கும்.

இவர் கதை கேட்கும்போது லைட்டா கண் சிமிட்டினாள் கூட ஒருவேளை சார் தூங்குறாருன்னுல்ல தோணும்.’ என்று பதிவிட்டுள்ளார்.

Ashwin speech at Enna Solla Pogirai audio launch creates controversy

ஜீவி திரைக்கதையாசிரியர் இயக்கத்தில் உளவியல் ஃபேண்டஸி படம் ‘க்’

ஜீவி திரைக்கதையாசிரியர் இயக்கத்தில் உளவியல் ஃபேண்டஸி படம் ‘க்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dharmraj Films சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் & பிரபு இணைந்து வழங்கும், ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபு தமிழ் இயக்கத்தில் புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கும் திரைப்படம் “க்”.

தமிழ் சினிமாவில் புதுவகை உளவியல் ஃபேண்டஸி ஜானரில், ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரும் இத்திரைப்படம் வரும் டிசம்பர் 10 முதல் உலகமெங்கும் திரையரங்குளில் வெளியாகிறது.

ஜீவி திரைப்படத்தில் முக்கோண தொடர்பியல் விதி எனும் கருவை வைத்து, கதை திரைக்கதை அமைத்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை குவித்த, இயக்குநர் பாபுதமிழ் “க்” படத்தில் மீண்டும் ஒரு புது வகை ஜானரில் ரசிகர்களை அசத்தியுள்ளார்.

ஒரு கால்பந்து விளையாட்டு வீரனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களும் அதனையொட்டி நடக்கும் ஃபேண்டஸி தருணங்களையும் மையமாக வைத்து, இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

உலகளவில் உளவியல் த்ரில்லர் திரைப்படங்கள் ஏராளமாக வந்திருந்தாலும், உளவியல் ஃபேண்டஸி என்பது ரசிகர்களுக்கு மிகப் புதுமையானது. அந்த வகையில் புது அனுபவத்தை தரும் படமாக, ஜீவி படத்தை விடவும் பல திருப்பங்களும், ஆச்சர்யங்களும் கொண்ட த்ரில் அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

புதுமுகங்கள் யோகேஷ் மற்றும் அனிகா முதன்மை பாத்திரங்களில் நடிக்க, நடிகர்கள் குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், YG மகேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதுமுக ஒளிப்பதிவாளர் ராதாகிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முழுக்க முழுக்க சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் மலேஷியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.

இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் மனதை மயக்கும் இசையை தந்துள்ளார். பியார் பிரேமா காதல் பட புகழ் எடிட்டர் மணிக்குமரன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். ‘

ரசிகர்களை ஒரு புதிய உலகிற்கு அழைத்து செல்லும் விதமாக, “க்” திரைப்படம் 2021 டிசம்பர் 10 முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Jiivi screen play writer’s next is titled Ikk

தைரியமான நடிகர்கள்.. 13 கேமராக்கள்.. 2 ஆண்டு பயிற்சி.. மண்சாலை பந்தயம்.. ‘மட்டி’ டிரைலரில் மயங்கிய பிரபலங்கள்

தைரியமான நடிகர்கள்.. 13 கேமராக்கள்.. 2 ஆண்டு பயிற்சி.. மண்சாலை பந்தயம்.. ‘மட்டி’ டிரைலரில் மயங்கிய பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவிலேயே முதன்முறையாக மண் சாலை கார் பந்தயத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘மட்டி’ படத்திற்குச் சர்வதேச அளவில் பல விருதுகள் கிடைக்கும் என தயாரிப்பாளரும், நடிகருமான கே .ராஜன் கூறினார்.

பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மட்டி’ . இப்படத்தை டாக்டர் பிரகபல் இயக்கியுள்ளார்.

இதில் அறிமுக நடிகர் யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ஜி. ரதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ‘கே. ஜி. எஃப்’ புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். ‘ராட்சசன்’ புகழ் ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

தமிழ் , மலையாளம்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்குத் தமிழில் ஆர். பி. பாலா வசனம் எழுதியிருக்கிறார். ‘மட்டி’ டிசம்பர் 10ஆம் தேதியன்று வெளியாகிறது.

மட்டி படத்தின் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் மூத்த தயாரிப்பாளரும், நடிகருமான கே ராஜன், இயக்குநர் பேரரசு, நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார், இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், தமிழ்ப் பதிப்பிற்கு வசனம் எழுதியுள்ள ஆர். பி. பாலா, படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் டாக்டர் பிரகபல் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

வசனகர்த்தா ஆர். பி. பாலா பேசுகையில்,

” கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழிக்கு ஏற்ப இப்படத்தின் இயக்குநர் டாக்டர் பிரகபல் படப்பிடிப்பு இடங்களில் உயிரைப் பணயம் வைத்து பல காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்.

இந்தப்படத்தில் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி இருந்தாலும், அனைவரும் இயக்குநர் பிரகபலின் வழிகாட்டலுடன் பணியாற்றினர். இயக்குநராக இவர் அறிமுகமாகும் முதல் படத்திலேயே காட்சி அமைப்பு, அதன் படமாக்குவதற்கான ஒருங்கிணைப்பு எனத் தெளிவாக திட்டமிட்டுப் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார். படத்திற்கு ஆர்வமுடன் உழைக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்ந்தெடுத்துப் பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்திருக்கிறார். ‘கே ஜி எஃப்’ என்ற பிரமாண்ட வெற்றிப் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘மட்டி’ படத்திற்கும் தன்னுடைய உழைப்பை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்.

இந்தப் படத்திற்கான பின்னணி இசை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உருவாக்கப்பட்டு சென்னையில் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தரமான படைப்பை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் நான்கு ஆண்டுகாலம் கடினமாக உழைத்து, ‘மட்டி’யை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தின் வெற்றி, படத்தை இயக்கிய இயக்குநர் டாக்டர் பிரகபல் அவர்களை மட்டுமே சேரும். ” என்றார்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசுகையில்,

” முதன்முதலாக தமிழ் படத்திற்கு இசை அமைத்திருக்கிறேன். தொழில்நுட்பக் கலைஞர்கள், ரசிகர்கள் விரும்பும் தரமான படப்பை வழங்க வேண்டும் என்றுதான் பணியாற்றுவார்கள். டீசர் மற்றும் ட்ரெய்லருக்கு மில்லியன் கணக்கான ரசிகர்கள் வழங்கிய பாராட்டு எங்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் என மூன்று மாநிலத்தில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.

இந்தப்படத்தின் பின்னணி இசைக்காக மட்டும் ஒன்றரை ஆண்டுகாலம் உழைத்திருக்கிறோம். பத்துக்கும் மேற்பட்ட வடிவங்களில் பணியாற்றிய பிறகு தான் இசையின் இறுதி வடிவத்தை உறுதிப்படுத்தி இருக்கிறோம். ” என்றார்.

இயக்குநர் பிரகபல் பேசுகையில்,

” மட்டி என்னுடைய முதல் படம். முதல் படத்தில் வித்தியாசமான கதையும், களமும் இடம் பெற வேண்டும் என விரும்பினேன். இதுவரை மட் ரேஸ் எனப்படும் மண் சாலை கார் பந்தயம் தொடர்பாகத் திரைப்படம் வெளியாகவில்லை என்பதை அறிந்தேன். அதன் பிறகு தான் மட்டியின் திரைக்கதையை எழுதத் தொடங்கினேன். படப்பிடிப்புக்கான இடங்களைத் தேடுவதற்கு ஓராண்டு காலம் செலவழித்தேன்.

நான் புதுமுக இயக்குநர் என்பதாலும், படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதாலும் என்னுடன் இணக்கமான தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பதற்குச் சிறிது காலம் ஆனது. அதன் பிறகு படத்தில் நடிக்கும் நடிகர்களைத் தேடினேன். தேர்வு செய்து அவர்களுக்கு இரண்டு ஆண்டு காலம் பயிற்சி கொடுத்த பிறகுதான் படப்பிடிப்புத் தளத்திற்கு அழைத்துச் சென்றேன்.

‘மட்டி’ என்பது துணிச்சலும் சாகசமும் கலந்த கார் பந்தயம் என்பதால் இதற்கான மன வலிமை கொண்ட நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினேன். தேசிய அளவில் மண் சாலை கார் பந்தயம் ஆண்டுதோறும் நடைபெறும். அங்கு படப்பிடிப்பு குழுவினருடன் சென்று காட்சிகளைப் படமாக்குவது குறித்து விவாதித்தோம்.

அதனால் ‘மட்டி’ தனிப்பட்ட கலைஞர் ஒருவரால் உருவானதல்ல. ஒட்டு மொத்த படக்குழுவினரின் திரைப்படம். மட் ரேஸ் எனப்படும் கார் பந்தய காட்சிகளை மட்டும் விதவிதமான கோணங்களில் 32 மணிநேரம் படமாக்கி இருந்தோம். அனைத்தையும் பொறுமையாகப் பார்வையிட்டு, படத்திற்குத் தேவையான காட்சிகளை மட்டும் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் எடுத்துக்கொண்டு படத்தொகுப்பு செய்துள்ளார்.

படத்தின் பின்னணி இசை சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக பல்வேறு பணி நெருக்கடிகள் இருந்தாலும், இசையமைப்பாளர் ரவியை, படப்பிடிப்புத் தளத்திற்கு வரவழைத்து, படப்பிடிப்பைப் பார்வையிடச் செய்தோம். அவரும் விருப்பத்துடன் வந்து காட்சிகள் படமாக்குவதை வியந்து பார்த்தார்.

ஒளிப்பதிவாளர், நடிகர்கள் இசை அமைப்பாளர், படத்தொகுப்பாளர், வசனகர்த்தா என ஒவ்வொருவரும் இப்படத்திற்காகத் தங்களது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினார்கள். ரசிகர்களைத் திரையரங்கில் வரவழைத்து வியப்பான அனுபவத்தை வழங்கும் படமாக மட்டி உருவாகி இருக்கிறது. ” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில்,

” மட்டி படத்தின் டீசர், டிரைலர், படமாக்கல் காட்சிகளை பார்த்தவுடன் மனது நிறைந்தது. தயாரிப்பாளர் கே ராஜன், சின்ன பட்ஜெட் படங்களுக்கு அரணாக இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் சினிமா சீர்திருத்தவாதி. சில நேரங்களில் சினிமாவின் தீவிரவாதி. இங்கு நேர்மையாகப் பேசினால், அவர் பிரச்சினைக்குரியவர் என்ற முத்திரையை குத்தி விடுவார்கள். இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் வனிதா விஜயகுமாருக்கும் இது பொருந்தும்.

மட்டி படத்தின் டீசரை பார்த்த மிரட்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. இது போன்ற பிரம்மாண்டமான ,மிரட்டலான ஒரு படத்தின் டீசரைப் பார்த்து நீண்ட நாளாகிவிட்டன. நான் சிறிய வயதில் 70 எம்எம் திரையில் ‘ஷோலே’ படத்தின் ட்ரைலரைப் பார்த்துப் பிரமித்தேன். அதேபோல் தமிழில் ‘ஊமை விழிகள்’ படத்தின் டிரைலரைப் பார்த்து வியந்திருக்கிறேன். அதன்பிறகு‘ மட்டி’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து மிரண்டேன்.

மட்டி என்றால் மண் என்றார்கள். இது மண் அல்ல வைரம், வைடூரியம், பிளாட்டினம்.. என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இது போன்ற படங்கள்தான் அதிகம் வர வேண்டும். ஏனெனில் இது போன்ற பிரம்மாண்டமான படங்களை யாரும் ஓ டி டி தளத்தில் பார்க்க விரும்ப மாட்டார்கள். இதனைத் திரையரங்கில் பார்த்தால் தான் மன திருப்தி கிடைக்கும். இதுபோன்ற படங்கள் அதிகமாக வெளியாகும்போது ஓ டி டி தளத்தை மக்கள் விரும்ப மாட்டார்கள்.

மட்டி படத்தில் தமிழ் மண், கேரள மண், கர்நாடக மண், ஆந்திர மண், என எல்லாம் மண்ணும் கலந்து இருக்கிறது. ஆனால் இந்த படம் எந்த மண்ணையும் நம்பி எடுக்கவில்லை. சினிமா மண் என்ற ஒன்றை மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார்கள். சினிமா மண் இந்தப் படத்திற்குப் பிரமாண்டமான வரவேற்பைத் தரும்.

மட்டி ஐந்து அல்லது ஆறு மாதங்களில் எடுக்கப்பட்ட படம் அல்ல. ஐந்து வருடங்களுக்கு மேல் திட்டமிட்டு எடுக்கப்பட்ட திரைப்படம். கிட்டத்தட்ட ஒரு மாநிலத்தின் ஆட்சிக் காலம் போல் எடுக்கப்பட்டிருக்கிறது. ‌ அதாவது ஒரு ஆட்சிக்காலத்தை ஒரு படமாக தயாரித்திருக்கிறார்கள். கண்டிப்பாக இந்த ஆட்சி ஆளுங்கட்சியாக மக்களிடத்தில் வெற்றி பெறும்.

இயக்குநர் பிரகபலின் உருவத்திற்கும், இந்த படத்திற்கும் தொடர்பே இல்லை. பார்ப்பதற்கு பால்வடியும் முகம் போல் இருக்கிறது. ஆனால் திரையில் பிரமிப்பான மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார். இது ஒரு ட்ரெண்ட் செட் படம். இதனை ஒரு சாதாரண படமாகக் கடந்து சென்றுவிட முடியாது. இது போன்ற படங்கள் மிகப்பெரிய பிரம்மாண்டமான வெற்றியைப் பெறவேண்டும். எல்லா மொழிகளிலும் பெரிய வெற்றியைப் பெறும். ” என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில்,

” மட்டி படத்தின் டீசர் மற்றும் டிரைலரைப் பார்த்தேன். பிரமித்துப் போனேன். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு அசாதாரணமாக இருந்தது. ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் குறைவு. திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. ‘மட்டி’ படம் வெளியான பிறகு இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், அவர்களின் கடுமையான உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். லகான், தங்கல் போன்ற இந்திப் படங்களுக்கு இணையாக தென்னிந்திய கலைஞர்களால் இந்த ‘மட்டி’ படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் இடம்பெறும் மண் சாலை கார் பந்தயம் தொடர்பான காட்சிகளை இயக்குநர் வடிவமைத்திருந்தார் எனக் கேள்விப்பட்டவுடன் ஆச்சரியப்பட்டேன். அவர் எங்கு? எப்போது? இதனை கற்றார் என எனக்குத் தெரியாது. இருந்தாலும் காட்சிகளில் ஒரு சர்வதேச தரம் இருந்தது. ஓ டி டி தளங்களைக் கடந்து மக்கள் மீண்டும் திரையரங்கத்திற்கு வருகை தரவேண்டும். இதற்கு மட்டி திரைப்படம் சிறந்த சான்றாக இருக்கும்.” என்றார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில்,

” கேரளாவிலிருந்து வருகை தந்திருக்கும் இயக்குநர் , தயாரிப்பாளர் பிரகபலை தமிழ்த் திரையுலகம் சார்பில் வரவேற்கிறேன். மட்டி படத்தின் டீஸர் என்னை மிரட்டி விட்டது. என்னை அலற வைத்து விட்டது. மிரள வைத்து விட்டது. மட்டி படத்தின் டீசர், ட்ரெய்லரைப் பார்த்த அந்த பத்து நிமிடங்கள் நான் நானாக இல்லை. இது பிரம்மாண்டமான பட்ஜெட் படம். இது தமிழ்ப் படமோ…. மலையாளப் படமோ …அல்ல. ஆங்கிலப் படம். இந்த படத்திற்குப் பிறகு இயக்குநர் பிரகபலின் புகழ் உலக அளவில் பரவும்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை ‘கே ஜி எஃப்’ படத்தில் அவரது உழைப்பைப் பார்த்து வியந்தோம். இந்தப்படத்தில் அவர் அதை விட ஐந்து மடங்கு கூடுதலாக உழைத்து இருப்பதைப் பார்க்கிறோம். இசைக்காகச் சர்வதேச அளவில் இந்தப் படம் பேசப்படும். பல சர்வதேச விருதுகள் இந்தப் படத்திற்குக் கிடைக்கும்.

நடிகர்களுக்கு இரண்டாண்டு பயிற்சி, லொக்கேஷனுக்காக ஓராண்டு தேடல், படப்பிடிப்பின்போது 13 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டது, இதெல்லாம் ஆங்கிலப் படங்களில் தான் நடைபெறும். இதுவரை தமிழ்ப் படங்களில் இப்படிப்பட்ட திட்டமிடல், உருவாக்கம் நடைபெற்றதாக வரலாறு இல்லை. ‘மட்டி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பிரகபல் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சிக்கனமாகச் செலவு செய்ய ஒத்துழைத்துக் காப்பாற்ற வேண்டும். இதனால் தயாரிப்பாளர்கள் காப்பாற்றப்படுவார்கள். அவர்கள் தொடர்ந்து திரைத்துறையை ஆரோக்கியமாக வைத்துத் தொழிலாளிகளை வாழ வைப்பார்கள். தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு அளிப்பார்கள்.

தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். நீங்கள் படம் தயாரித்து ஓ டி டி தளத்திற்கு வழங்குகிறீர்கள். இதனால் தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் பயன்பெறுகிறார்கள். இது மகிழ்ச்சியை அளிக்கிறது. உண்மை தான். ஆனால் திரையரங்க உரிமையாளர்கள், திரையரங்கத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், இடைத்தரகர்கள்.. ஆகியோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடுகிறது. அதனால் படங்களை ஓடிடி தளங்களுக்குத் தருவதற்கு முன் திரையரங்கத்தில் வெளியிட முன்னுரிமை தர வேண்டும்.

இரண்டு அல்லது நான்கு வார காலம் அவகாசம் வழங்கினால்.., திரையரங்கும், அதனை நம்பி இருக்கும் தொழிலாளர் குடும்பங்களும் வாழும். டாக்டர், மாநாடு ஆகிய படங்கள் திரை அரங்குகளில் வெளியாகி வசூல் செய்தது. அத்துடன் ஓடிடி தளங்களிலும் நல்ல விலைக்கு விற்பனையாகி இருக்கிறது. எனவே இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.”என்று கூறி படக்குழுவினர் வாழ்த்தினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ‘மட்டி’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

Celebrities praises multilingual film Muddy trailer

போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் உடன் சசிகலா திடீர் சந்திப்பு.

போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் உடன் சசிகலா திடீர் சந்திப்பு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான விகே. சசிகலா, நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் சந்தித்து பேசினார்.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது ரஜினியின் மனைவி லதா உடன் இருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு முன்னதாக ரஜினி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அவரின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருந்ததால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, அடைப்பைச் சரிசெய்தனர். சில தினங்களில் டிஸ்சார்ஜ் ஆனார்.

எனவே தற்போது ரஜினியின் உடல் நலம் விசாரிக்க சசிகலா சென்றாராம்.

மேலும் சமீபத்தில் திரைப்படத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சகேப் பால்கே விருதை ரஜினிகாந்த் பெற்றிருந்தார். அதற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் சசிகலா என்பது குறிப்பிடத்தக்கது.

VKSasikala meets Tamil superstar Rajinikanth at his Poes Garden residence

More Articles
Follows