கமல்ஹாசன் & லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ அந்த மாதிரியான படமா.?

vikram movieமாநகரம் & கைதி படங்களை தொடர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.

விஜய் & விஜய்சேதுபதி இருவரும் இணைந்த இந்த படம் தியேட்டர்களில் வெளியாகி 10 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் லோகேஷ் தனது அடுத்த படத்தின் பணிகளை இன்னும் கவனத்துடன் மேற்கொண்டு வருகிறார்.

கமல்ஹாசனின் 232வது படமான ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ்.

இப்படத்தின் டைட்டில் லுக் வித்தியாசமான முறையில் உருவாகி வெளியானது.

இந்த நிலையில் இப்படம் தொடர்பாக ஒரு பேட்டியளித்துள்ளார் லோகேஷ்.

அதில்…

#விக்ரம் துப்பாக்கி GUN சம்மந்தமான படம். சொல்லப் போனா கைதி போல எக்ஸ்பிரிமெண்ட் சென்டிமென்ட் ஆக்சன் படம். கமல் சாரோட ஆக்சன் ரொம்ப பிடிக்கும். அவரை முழுக்க முழுக்க ஆக்சன்ல பாத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.

அதனால நான் இந்த வாய்ப்ப தவறவிடமாட்டேன்.. “விக்ரம்’ படம் ஆக்சன் ஆக்சன் ஆக்சன் தான்”

என தெரிவித்துள்ளார் இந்த மாஸ்டர் டைரக்டர்.

Director Lokesh Kanagaraj talks about his next film VIKRAM

Overall Rating : Not available

Related News

Latest Post