தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ படத்தை வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்து உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இதில் நாயகியாக மஞ்சுவாரியர் நடிக்க முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.
விரைவில் ‘துணிவு’ படம் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் குறித்து பேசி வருகிறார் இயக்குனர் வினோத்.
அவரின் பேட்டியில்… “துணிவு படத்தில் நாயகியாக நடிக்க மஞ்சு வாரியாரை அணுகினோம். அப்போது அவர் வழக்கமான வேடங்களை செய்து விட்டேன்.
கொஞ்சம் வில்லத்தனம் கலந்த கேரக்டர் என்றால் நான் பணிபுரிய தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார். எனவே மஞ்சுவுகாக சில மாற்றங்களை படத்தில் செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கவில்லை. அவர் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.