நீண்ட டயலாக்கை ஒரே டேக்கில் பேசி அசத்திய தல அஜித்

நீண்ட டயலாக்கை ஒரே டேக்கில் பேசி அசத்திய தல அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith‘விஸ்வாசத்தைத் தொடர்ந்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இது, இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும்.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இதில் அஜித்துடன் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் நடிக்கின்றனர்.

சென்னையில் அஜித் ரசிகர்களின் அன்பு தொல்லையால் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமாஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கி வருகின்றனர்.

கோர்ட் சம்பந்தப்பட்டக் காட்சிகளை படமாக்கப்பட்டு வருகின்றனர்.

அங்கு நீண்ண்ட டயலாக் ஒன்றை ஒரே டேக்கில் பேசி அசத்திவிட்டாராம் அஜித்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணையும் நயன்தாரா & கீர்த்தி சுரேஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணையும் நயன்தாரா & கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalaivar 166பேட்ட படத்தை முடித்த ரஜினிகாந்தும் சர்கார் படத்தை முடித்த டைரக்டர் முருகதாசும் முதன் முறையாக புதிய படத்திற்காக இணைகின்றனர்.

இது ரஜினிகாந்த் நடிப்பில் 166வது படமாக உருவாகவுள்ளது.

அடுத்த மார்ச் மாதம் இறுதியில் சூட்டிங் தொடங்கவுள்ளது.

இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகிகளாக நயன்தாரா & கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் ரஜினிக்கு இரண்டு வேடமா? என்ற முழு விவரங்கள் தெரியவில்லை.

ரஜினியுடன் நயன்தாரா சில படங்களில் நடித்திருந்தாலும் கீர்த்தி சுரேஷ் இணைவது இதுதான் முதன் முறையாகும்.

பாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தன்; மீட்க வலியுறுத்தும் சூர்யா-கார்த்தி & சித்தார்த் – பார்த்திபன்

பாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தன்; மீட்க வலியுறுத்தும் சூர்யா-கார்த்தி & சித்தார்த் – பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

abhinandhanகடந்த பிப்ரவரி 14ஆம் தேதி பாக். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் இந்திய ராணுவ 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அதற்கு பதிலடியாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

பாக். எல்லைப்பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இதில் இரு இந்திய விமானிகளைக் கைது செய்துள்ளதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கிறது.

இதில் ஒருவர் விமானி காமாண்டர் அபிநந்தன். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிநந்தனை பத்திரமாக இந்திய அரசு மீட்டுக் கொண்டு வர வேண்டும் என பலரும் தங்கள் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு…

நடிகர் சூர்யா..

“விங்க் கமாண்டர், எனது சகோதரர் அபினந்தன் வர்தமானுக்கு என் வணக்கங்கள். மிகவும் பெருமையாக உள்ளது. உறுதியுடன் இருங்கள்.

மொத்த தேசமும் உங்களுடன் உள்ளது. நீங்கள் பத்திரமாக திரும்ப எங்கள் பிரார்த்தனைகள்”

நடிகர் கார்த்தி…

“இந்திய விமானப் படையைச் சேர்ந்த சில விமான படை ஃபைட்டர் பைலட்டுகளை என் வாழ்வில் சந்தித்தது எனது அதிர்ஷ்டம். அவர்களைத் தெரிந்து கொண்டது உண்மையில் ஒரு பெருமை.

அவர்கள் முற்றிலும் வித்தியாசமான களத்தில் இயங்கும் மனிதர்கள். நமது வீரர்கள் பாதுகாப்பாக திரும்ப பிரார்த்திக்கிறேன்.

நமது ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நமது ஒட்டு மொத்த தேசமும் நிற்கிறது. அவர்களின் துணிந்த இதயமும், தியாகமும் தான் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

நடிகர் & இயக்குனர் பார்த்திபன்..

“கணவனின் கடமையும் தந்தையின் வீரமும், மனைவியின் மனதையும் மகனின் கண்களையும், ஈரப்படுத்தாமல் சேதப்படுத்தாமல் எத்தனை நிமிடங்கள் காக்கும்? அதற்குள் காக்குமா இந்தியா அந்த வீரத்திருமகனை?”

நடிகர் சித்தார்த்…

“தீவிரவாதிகள் நமது வீரர்களைக் கொன்றார்கள். நாம் அவர்களின் முகாம்களை அழித்தோம் (யாரும் பலியாகவில்லை என அவர்கள் மறுத்தாலும் தீவிரவாத முகாம்கள் இருப்பதை அவர்கள் மறுக்கவில்லை).

நமது பைலைட்டை சிறைபிடித்திருக்கிறார்கள். இது ஒரே அடிப்படையில் நடைபெற்ற சம்பவமே அல்ல. பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது.

இந்தியா ஆதரிக்கவில்லை. போர் இதை மாற்றாது, மாற்றவும் முடியாது. பேச்சுவார்த்தையும் தான்”

ஆர்யாவுக்கு திருமணம்..; ஆச்சரியத்தில் வாழ்த்திய விஷால்

ஆர்யாவுக்கு திருமணம்..; ஆச்சரியத்தில் வாழ்த்திய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishals reactions after getting his friend Aryas Marriage invitationசந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கிய கஜினிகாந்த் படத்தில் ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்திருந்தனர்.

அப்போதே இருவருக்கும் நெருக்கம் ஏற்பட அது காதலாக மலர்ந்தது.

இதனையடுத்து இருவருக்கும் மார்ச் மாதத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தன் நெருங்கிய நண்பரான விஷாலுக்கு தனது திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார் ஆர்யா.

ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இது குறித்து விஷால் கூறியுள்ளதாவது…

“இந்தப் புகைப்படம் எனது மனதுக்கு மிகவும்நெருக்கமான ஒன்று. எனது நண்பனின் திருமண அழைப்பிதழ் என் கையில் இருப்பதை நம்பமுடியவில்லை. ஆர்யா – சாயிஷா ஜோடிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து விஷால் – அனிஷாவின் திருமணமும் விரைவில் நடைபெற உள்ளது.

Vishals reactions after getting his friend Aryas Marriage invitation

அரசியலில் ரஜினி-கமல் இணைந்து செயல்பட விஷால் வேண்டுகோள்

அரசியலில் ரஜினி-கமல் இணைந்து செயல்பட விஷால் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal wants Rajini and Kamal to come together for Lok Sabha electionவருகிற மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எவரும் எதிர்பாராத வகையில் அரசியல் கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணிகள் அமைத்து வருகின்றன.

தமிழக பொறுத்தவரை அதிமுக கட்சி பாஜக மற்றும் பாமக உடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் உடன் இணைந்து திமுக போட்டியிடுகிறது.

தேமுதிக கூட்டணி இதுவரை முழுமையடையவில்லை.

நடிகர் கமல் தனித்து போட்டியிடுகிறார். நடிகர் ரஜினி இதுவரை கட்சியை ஆரம்பிக்கவில்லை.

இந்நிலையில், ரஜினி, கமல் இணைந்து நிற்க வேண்டும் என விஷால் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

“எந்த நட்சத்திரத்தின் நிகழ்ச்சிக்கும் இல்லை, எந்த ஒரு திரைப்படத்துக்காகவும் இல்லை, நடிகர் சங்கத்துக்காகவும் இல்லை ரஜினி சார், கமல் சார் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புகிறேன். அது ஒரு நல்ல போட்டியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்

Vishal wants Rajini and Kamal to come together for Lok Sabha election

டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் இயக்குனர் சீனு ராமசாமி

டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் இயக்குனர் சீனு ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seenu ramasamyஎதார்த்த வாழ்வியலை அழகான திரைப்படமாக்கி “தென்மேற்கு பருவகாற்று”, “நீர்பறவை”, “தர்மதுரை”, “கண்ணே கலைமானே” என வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் சீனு ராமசாமி டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

டைம் லைன் சினிமாஸ் சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் சர்ஜூன் இயக்கிய எச்சரிக்கை படத்தை தயாரித்து வெளியிட்டனர். தங்களது இரண்டாவது படமான “ரெட் ரம்” திரைப்படத்தில் அஷோக் செல்வன் நடிப்பில் விக்ரம் ஸ்ரீதரன் இயக்குகிறார். ரெட் ரம் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

டைம் லைன் சினிமாஸின் முன்றாவது தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்குகிறார். இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

More Articles
Follows