JUST IN ‘அவன் இவன்’ சிங்கம்பட்டி ஜமீன் வழக்கு.; பொய் வழக்கில் விடுதலை கிடைத்தது என பாலா பரவசம்

JUST IN ‘அவன் இவன்’ சிங்கம்பட்டி ஜமீன் வழக்கு.; பொய் வழக்கில் விடுதலை கிடைத்தது என பாலா பரவசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடித்த படம் ‘அவன் இவன்’.

கடந்த 2011ல் இந்த படம் ரிலீசானது.

இப்படத்தில் நெல்லை மாவட்ட சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும், சிங்கம்பட்டி ஜமீன்தார் பற்றியும் அவதூறாக சித்தரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதனால் சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்த சங்கராத்மஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த மார்ச் மாதம் நடிகர் ஆர்யா தரப்பில் மன்னிப்பு தெரிவித்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக இருந்த நிலையிலும் இயக்குனர் பாலா ஆஜராகவில்லை.

எனவே இன்று பாலா கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார் நீதிபதி.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் குற்றத்தை முறையாக நிரூபணம் செய்யாததால், இயக்குனர் பாலா வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக பாலா பேசும்போது…” பொய் வழக்கில் இருந்து விடுதலை செய்ததற்கு நன்றி” என்றார்

ஆனால், சிங்கம்பட்டி இளைய ஜமீன் சங்கராத் மஜனிடம் ஆலோசனை பெற்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக இயக்குனர் பாலா மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.

Director Bala released in Avan Ivan movie case

கருணாஸ் மகன் கென்னின் அடுத்த அவதாரம்..; கைகொடுக்கும் தனுஷ் – வெற்றி மாறன்

கருணாஸ் மகன் கென்னின் அடுத்த அவதாரம்..; கைகொடுக்கும் தனுஷ் – வெற்றி மாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கருணாஸின் குடும்பம் ஒரு கலைக்குடும்பம். இவரது மனைவி & மகன் ஆகியோரும் கலைத்துறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவரது மகன் கென், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘அசுரன்’ படத்தில் தனுஷின் இளைய மகனாக நடித்தார்.

இப்படத்தில் கென் நடிப்பிற்கு நல்ல பெயர் கிடைத்தது.

இந்நிலையில் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து ‘வாடா ராசா….’ என்ற பாடலுக்கு இசையமைத்துள்ளனர்.

இப்பாடலை வெங்கி என்பவர் இயக்க சாண்டி இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இப்பாடலை கருணாஸ் மனைவி கிரேஸ் பாடியும் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் பாடலில் சித்தி 2 புகழ் ப்ரீத்தி சர்மாவும் நடித்துள்ளார்.

இந்தப் பாடல் இன்று 19 ஆகஸ்ட் மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்தப் பாடலை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்திலும், வெற்றிமாறன் தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட உள்ளனர்.

Ken Karunaas in Vaada Raasa out today at 5PM!

ரஜினியை ஹிந்தியில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மீண்டும் தமிழுக்கு வருகிறார்

ரஜினியை ஹிந்தியில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மீண்டும் தமிழுக்கு வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தி பிரபல டைரக்டர் , தயாரிப்பாளர் K.C. பொக்காடியா ( K.C.Pokadia ) மீண்டும் தமிழுக்கு வருகிறார். BMB புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இவர் பல பிரமாண்ட படங்களை இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்தார்.

சென்னையில் வளர்ந்த இவர், இந்தியில்
மட்டும் 59 படங்களை தயாரித்துள்ளார்.

அதில் 11 படங்களில் அமிதாப்பச்சனும், 5 படங்களில் ரஜினிகாந்தும்,18 படங்களில் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் இந்த மூன்று கான்களும் நடித்தார்கள்.

மேலும் 5 படங்களில் அட்சயகுமாரும் மற்ற படங்களில் பிரபல நடிகர்கள் நடிகைகள் பலரும் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்தை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

இவர் இந்தியில் மட்டும் 38 படங்களை இயக்கியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாகதென்னிந்திய மொழி இயக்குனர்கள் பலரை இந்தியில் அறிமுகப்பபடுத்தியுள்ளார்.

இவர் இப்பொழுது தமிழிலும் தெலுங்கிலும் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த B.M.B. புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் 25 வருடங்களாக ஒரு அங்கமாக இருக்கும் தமிழ் தயாரிப்பாளர், நடிகர் தமிழ்மணியின் வீட்டுக்கு இன்று திடீரென்று சென்றார் கே.சி.பொக்காடியா.

அவரிடம், தமிழில் பல படங்களை தயாரிப்பதாக உறுதியளித்துள்ளார்.

எனவே விரைவில் புதுப்பட அறிவிப்புகளை எதிர்ப்பார்க்கலாம்.

Famous producer KC Pokadia to produce films in Tamil again

விஷாலுக்கு எதிராக லைகா வழக்கு.; ரூ 5 லட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்த கோர்ட்

விஷாலுக்கு எதிராக லைகா வழக்கு.; ரூ 5 லட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்த கோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016ல் நடிகர் விஷால் ‘மருது’ திரைப்பட தயாரிப்புக்காக கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனிடம் 21 கோடியே 29 லட்சம் கடன் பெற்று இருந்தாராம்.

அதனை திருப்பி செலுத்த முடியாததால் தயாரிப்பு நிறுவனமான லைகாவை அணுகி தன் கடனை அன்பு செழியனுக்கு செட்டில் செய்யுமாறு கோரியுள்ளார்.

அதன்படி, லைகா நிறுவனமும் விஷாலின் கடனை அடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனவே கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லைகா உடன் நடிகர் விஷால் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, லைகா நிறுவனம் தன்னுடைய கடனை செலுத்திய தொகைக்கு 30% வட்டியுடன் தவணை முறையில் செலுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, துப்பறிவாளன் 2 திரைப்படம் வெளியான பின் 2020 மார்ச் மாதத்தில் 7 கோடியும், மீதத் தொகையை 2020 டிசம்பருக்குள் செலுத்தி விடுவதென அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது

இந்த நிலையில், பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விஷால் தரப்பில் பதில் அளிக்கவில்லை எனவும், மொத்தமாக 30,05,68,137 ரூபாயை வழங்க விஷாலுக்கு உத்தரவிட கோரியும் லைகா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் என்பவர் ‘துப்பறிவாளன் 2’ படம் வெளியாகும் சமயத்தில் விஷால் வாங்கிய கடன் தொகையை திருப்பி வாங்குவதாக லைகா ஒப்பு கொண்டுவிட்டு, தற்போது முழு தொகையையும் கோரி படத்தின் வெளியீட்டிற்கு முன்பே வழக்கு தொடர்ந்துள்ளது பொருந்தாது என தெரிவித்து, லைகாவின் மனுவை 5 லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

High Court fines Lyca Productions for filing case against Vishal

உடையும் ‘வலிமை’ கூட்டணி..; வினோத் இயக்கும் அஜித் 61 படத்திற்கு யுவனுக்கு பதிலாக இவரா.?

உடையும் ‘வலிமை’ கூட்டணி..; வினோத் இயக்கும் அஜித் 61 படத்திற்கு யுவனுக்கு பதிலாக இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’.

ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’வாக நடித்த ஹூமா குரேஷி நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இப்பட முதல் சிங்கிள் ‘நாங்க வேற மாறி’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று யூடிப்பில் சாதனை படைத்து வருகிறது.

‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் இணைந்த இந்த கூட்டணி தற்போது ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளதை அடுத்து மீண்டும் தல 61 படத்திற்காக இணையவுள்ளது.

அஜித்தின் 61-வது படத்தையும் ‘வலிமை’ இயக்குநர் வினோத்தே இயக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கு யுவன் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்துக்கான ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதம் ஆரம்பிக்க உள்ளனர்.

Ghibran to compose music for Ajith’s next ?

சிவகார்த்திகேயனின் ‘சிங்க பாதை’-க்கு இசை தடம் போடுவது இவரா?

சிவகார்த்திகேயனின் ‘சிங்க பாதை’-க்கு இசை தடம் போடுவது இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் இவரது படங்கள் ரிலீசுக்கு வரிசைக் கட்டி நிற்கின்றன.

சூர்யா தனுஷ் விஜய்சேதுபதி ஆகிய முன்னணி் நடிகர்கள் தங்கள் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்தாலும் தான் நடித்த படத்தை ஓடிடியில் விற்காமல் நிற்கிறார் சிவகார்த்திகேயன்.

அண்மையில் சிவகார்த்திகேயன் தயாரித்த ‘வாழ்’ திரைப்படம் ஓடிடி-யில் ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அயலான்’ மற்றும் ‘டான்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி வருகின்றன.

மற்றொரு படமான ‘டாக்டர்’ படம் ரிலீஸுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகிவிட்டது.

இந்த படங்களை அடுத்து அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அசோக் என்பவரின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்
சிவகார்த்திகேயன்.

இப்படத்துக்கு ரஜினியின் பன்ச் டயலாக்கான ‘சிங்கப்பாதை’ என்பதை டைட்டிலாக வைக்கவுள்ளனர் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

தற்போது ‘சிங்கப்பாதை’ படத்துக்கு இமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Imman to score music for Sivakarthikeyan’s next

More Articles
Follows