திண்டுக்கல் லியோனி மகன் அறிமுகம்; விஜய்சேதுபதியுடன் இணைகிறார்

leo sivakaumar with seenu ramasamy‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு மீண்டும் மாமனிதன் என்ற படத்திற்காக விஜய்சேதுபதி, சீனுராமசாமி, யுவன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இதில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்க, அவரது ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.

இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர்.

இப்படத்தை யுவன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் என்பவரை இப்படத்தில் நடிகராக அறிமுகம் செய்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.

Overall Rating : Not available

Related News

சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில்…
...Read More
விஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை…
...Read More
விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை படத்தை இயக்கியவர்…
...Read More

Latest Post