தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ படம் அண்மையில் வெளியானது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையின் நடைபெற்ற போது இந்த படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ மேடையில் பேசினார்.
அவர் பேசும்போது…
“வாரிசு படத்தில் காமெடி வேணுமா.. காமெடி இருக்கு.. ஆக்ஷன் வேணுமா ஆக்ஷன் இருக்கு… பாட்டு வேணுமா பாட்டு இருக்கு.. டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு… என தெலுங்கு கலந்த தமிழில் பேசினார்.
இதை பலர் மீம்ஸ் செய்தும் கிண்டல் செய்தும் ட்ரோல் செய்தும் வந்தனர்.
ஒரு சில சமூக ஆர்வலர்கள் இதனை கடுமையாக கண்டித்தனர்.
கொஞ்சமே தமிழ் தெரிந்த ஒரு நபர் தமிழை கற்றுக்கொண்டு பேசி வருகிறார். அவரை கிண்டல் செய்யக்கூடாது என தெரிவித்தனர்.
இந்த நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் தில்ராஜ் பேசிய வசனத்தை பிளக்ஸ் பேனரில் டிசைன் செய்துள்ளனர்.
“இனி பொண்டாட்டி கிட்ட.. அடி வேணுமா அடி இருக்கு../குத்து வேணுமா குத்து இருக்கு../மொத்தத்துல உனக்கு ஆப்பு இருக்கு.. ஹாஃப்பி மேரேஜ் லைஃப் நண்பா..” என கிண்டலாக நண்பனை வாழ்த்தி பேனர் அடித்துள்ளனர்.
Dil raju memes dialogue in Vijay fans flex banner