மூன்றாவது முறையாக பெண் இயக்குநர் படத்தில் தனுஷ்

மூன்றாவது முறையாக பெண் இயக்குநர் படத்தில் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush gayathri raghuramதனுஷ் நடிப்பில் 30க்கும் மேற்பட்ட படங்கள் வந்துவிட்டன. இதில் பெண் இயக்குனர் இயக்கிய படங்களிலும் நடித்துள்ளார்.

தன் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் 3 படத்தில் நடித்தார் தனுஷ்.

இதனையடுத்து விரைவில் சௌந்தர்யா ரஜினி இயக்கும் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் 3வதாக மற்றொரு பெண் இயக்குனர் படத்தில் இணைந்துள்ளார்.

இதில் அவர் நடிக்கவில்லை என்றாலும் அப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

பிரபல டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் இயக்கிவரும் யாதுமாகின்நின்றாய் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் ”எனது ஆல் டைம் ஃபேவரிட் சிங்கர் தனுஷ் என் படத்தில் பாடியுள்ளார். மிக்க மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

Gayathri Raguramm ‏@gayathriraguram
My all time Favorite talented loving @dhanushkraja sir sang a song in my movie #YaadhumaaginNindrai very happy thank you so much

Dhanush sung song in Gayathri Raguram’s Yaadhumaagin Nindrai

பைரவா ஆடியோ வெளியீட்டு தேதி தகவல்கள்

பைரவா ஆடியோ வெளியீட்டு தேதி தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa fan artபரதன் இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் சார்ப்பில் உருவாகியுள்ள படம் பைரவா.

இதில் விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஓரிரு தினங்களுக்கு இதன் சூட்டிங் பூசணிக்காய் உடைத்து நிறைவு பெற்றது.

இப்படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் இதன் ஆடியோவை டிசம்பர் 20ஆம் தேதி (அந்த வாரத்தில்) வெளியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சூர்யா செய்த காரியத்தால் குழப்பத்தில் ஜெயம் ரவி?

சூர்யா செய்த காரியத்தால் குழப்பத்தில் ஜெயம் ரவி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suirya jayamraviஹரி-சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள சி3 படத்திற்கு மாஸ் ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அந்தளவு வரவேற்பை பெற்றுள்ளதே காரணம் என சொல்லப்படுகிறது.

இது டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கபட்டது.

தற்போது கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த நாளில் வெளியாக இருந்த ஜெயம் ரவியின் போகன் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.

இவையில்லாமல் சசிகுமாரின் பலே வெள்ளையத் தேவா மற்றும் பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களும் இதே நாளில் ரீலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதால் சில படங்கள் முந்திக் கொள்ளவோ, தள்ளிப் போகவோ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாலிவுட் செல்லும் ‘ரெமோ’… குஷியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

பாலிவுட் செல்லும் ‘ரெமோ’… குஷியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan keerthy sureshசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

இரு மொழிகளிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று ரெமோ படத்தின் தெலுங்கு பதிப்பின் சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட இப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பேசும்போது…

விரைவில் ஹிந்தியில் இப்படம் ரீமேக் ஆக உள்ளது என தெரிவித்தார்.

ஹிந்தியிலும் சிவகார்த்திகேயன் நடிப்பாரா? என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Sivakarthikeyans remo movie hindi remake updates

தமிழகத்தை முந்தும் கேரளா விஜய் ரசிகர்கள்

தமிழகத்தை முந்தும் கேரளா விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

24 years of vijay in cinemaஇளையதளபதி விஜய் சினிமாவில் நடிக்க வந்து 24 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

#24YearsOfVIJAYism என்ற ஹேஷ்டேக் கிரியேட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் கேரளா ரசிகர்கள் இன்னும் அதிரயடியாக விஜய் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய சொல்லி கொண்டாட உள்ளனர்.

இதன்படி நாளை டிசம்பர் 4ஆம் தேதி, திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீகுமார் தியேட்டரில் அதிகாலை 7 மணிக்கே காட்சி தொடங்குகிறது.

அதுபோல் இதற்கு அடுத்த வாரம் டிசம்பர் 11ஆம் தேதி காலை 10.00 மணிக்கு தாஜ் சினிமாஸில் சிறப்பு காட்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

kerala vijay fans

அஜித்-விஜய் பற்றி லட்சுமி ராய் என்ன சொன்னார்..?

அஜித்-விஜய் பற்றி லட்சுமி ராய் என்ன சொன்னார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vijay raai laxmiபெரும்பாலான நடிகர்கள் ட்விட்டரில் இணையத்தளத்தில் அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை லட்சுமி ராய் தன் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது வழக்கம்போல அடிக்கடி கேட்கப்படும் கேள்வியை ரசிகர்கள் கேட்டனர்.

அஜித், விஜய் பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன் என்று கேட்டனர்.

அஜித் ஒரு விலைமதிக்க முடியாத வைரம் என்றால் விஜய் ஒரு மிகச்சிறந்த மனிதர் என பதிலளித்துள்ளார்.

இவர் அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows