ஜிவிபி-சிவகார்த்திகேயனை தொடர்ந்து தனுஷும் களத்தில் குதித்தார்

ஜிவிபி-சிவகார்த்திகேயனை தொடர்ந்து தனுஷும் களத்தில் குதித்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளதால், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கமல், விஜயகாந்த், சூர்யா, ஜிவி. பிரகாஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் சற்றுமுன் தனுஷும் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் ஆதரவை தெரிவித்து கருத்தை பதிவிட்டுள்ளார்.

Dhanush ‏@dhanushkraja
#Jallikattu is an integral element of the voice and identity of Tamilians. #ISupportJallikattu #WeNeedJallikattu #TamilCulture

‘பைரவா’வுக்கு எதிராக பாய்ந்தது வழக்கு

‘பைரவா’வுக்கு எதிராக பாய்ந்தது வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Keerthy sureshபரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் வருகிற ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் வழக்கம்போல் இப்படத்திற்கு சில தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனை எதிர்த்து, கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து, சினிமாகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகார் தருவது என்பது பற்றிய விவரம் தேவை என கோர்ட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இக்கட்டணம் குறித்து தமிழக அரசு, படத்தயாரிப்பாளர், வெளியீட்டாளர், திரையரங்கு அதிபர்கள் ஆகியோர் ஜனவரி 12ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

A case against Bairavaa ticket prices

சூர்யா-தனுஷ்-விஷால் வழியில் கார்த்தியின் அடுத்த அவதாரம்

சூர்யா-தனுஷ்-விஷால் வழியில் கார்த்தியின் அடுத்த அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor Karthiஅண்மைகாலமாக நடிகர்களே தயாரிப்பாளர்களாக உருவெடுத்து வருகின்றனர்.

சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்டோர் தாங்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வருகின்றனர்.

தற்போது இவர்களின் வரிசையில் கார்த்தியும் இணையவுள்ளார்.

இவரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கே எண்டர்டெயின்மெண்ட் என்று பெயரிடவிருக்கிறாராம்.

இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா-கார்த்தியின் உறவினர்கள் ஞானவேல்ராஜா மற்றும் எஸ்ஆர். பிரபு உள்ளிட்டவர்களும் தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Karthi to produce movie by his own production house

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விஜய்காந்த்-சூர்யா-சிவகார்த்திகேயன்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விஜய்காந்த்-சூர்யா-சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijayakanth Suriya Sivakarthikeyanதமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், இதை எதிர்க்கும் வகையில் தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த வேண்டும் என லட்சக்கணக்கான இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் ஒன்று கூடியிருந்தனர்.

மேலும் கமல், சிம்பு, ஜிவி. பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவில் யானை, குஜராத்தில் ஒட்டகம் ஆகிய விலங்குகளுக்கு தடையில்லாத போது, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏன்? என விஜயகாந்த் கேட்டுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரியம் ஜல்லிக்கட்டு என தன் ஆதரவை பதிவு செய்துள்ளார் சூர்யா.

இவர்களைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனும் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Sivakarthikeyan ‏@Siva_Kartikeyan

ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம்,பண்பாடு. அதை மீட்க விரும்பும் பல கோடிபேரில் ஒரு தமிழனாய் நானும் #WeNeedJallikattu

இளைய தளபதி விஜய்யை வீழ்த்த சதியா?

இளைய தளபதி விஜய்யை வீழ்த்த சதியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Bairavaa release in Kerala updatesதமிழ் சினிமாவுக்கு கேரளாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இதில் இளையதளபதி விஜய்க்கு சிலை வைக்கும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர்களும் அங்கு இருப்பது தாங்கள் அறிந்ததே.

தெறி படம் கேரளாவில் கிட்டதட்ட 200 தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூலை பெற்றது.

தற்போது பைரவா நல்ல எதிர்பார்ப்பு இருந்தாலும், குறைவான தியேட்டர்களே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது விஜய்க்கு எதிராக சிலர் அங்கு செயல்பட்டுவருவதால் தியேட்டர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இருந்தபோதிலும் மேலும் பல தியேட்டர்களில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

கார் வாங்கியதிலும் தனுஷ்தான் முதல் இடம்

கார் வாங்கியதிலும் தனுஷ்தான் முதல் இடம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush carட்விட்டர் பயன்பாட்டில் தமிழக நடிகர்களில் நடிகர் தனுஷ் முதல் இடத்தில் இருக்கிறார்.

40 லட்சம் பாலோயர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.

தற்போது ஒரு புதிய கார் மாடலை வாங்கியதிலும் தனுஷ் முதலிடத்தை பெறுகிறார்.

சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் காரான ஃபோர்டு மஸ்டாங் காரை இவர் வாங்கியிருக்கிறாராம்.

இந்தி சினிமாவில் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷீட்டி இந்த காரை வாங்கியிருக்கிறார்.

அவருக்கு பிறகு தமிழ் நடிகர் தனுஷ்தான் இந்த காரை வாங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பே ரோல்ஸ் ராய்ஸ் காரை தனுஷ் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush recently took the delivery of a spanking new black Mustang GT

More Articles
Follows