இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகிறது

இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jallikattu Protest movie will be director by Santhoshதமிழகம் எத்தனையோ போராட்டங்களை பார்த்து இருக்கிறது. ஆனால் தமிழகத்தையே மிரள வைத்த போராட்டம் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு.

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் மாணவர்கள் தொடங்கிய இந்த புரட்சி உலகையே திரும்பி பார்க்க வைத்தது.

இந்நிலையில் இந்த போராட்டம் தற்போது ஒரு படமாக உருவாகவுள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்த சந்தோஷ் என்பவர் இப்படத்தை இயக்க முன்வந்துள்ளார்.

இவர் ஹாலிவுட்டிலும் ஒளிப்பதிவாளராக பணி புரிந்திருக்கிறாராம்.

மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டிருக்கிறார் என்பதுதான் கூடுதல் தகவல்.

தற்போது ஜல்லிக்கட்டின் பர்ஸ்ட் லுக்கை நியூயார்க் வால்ஸ்ட்ரீட்டில் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் ஒரு காட்சியில் 10 லட்சம் பேர் திரண்டு நிற்பது போன்ற ஒரு காட்சிகளை வைக்க முடிவு செய்திருக்கிறாராம்.

இதற்கு முன் காந்தி படத்தில்தான் ஒரே பிரேமில் 3 லட்சம் பேர் இருப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருந்ததாம்.

Jallikattu Protest movie will be director by Santhosh

jallikattu movie

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேரக்டரில் அனுபம் கெர்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேரக்டரில் அனுபம் கெர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anupam Kherகடந்த 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தபோது, அவரது மீடியா ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு.

அப்போது மன்மோகன் சிங்குடன் பணியாற்றியது குறித்து, தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற புத்தகத்தை எழுதினார்.

இந்த புத்தகம் வெளியானபோது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து, திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது.

சுனில் போரா இப்படத்தை தயாரிக்க, விஜய் ரத்னாகர் கத்தே இயக்குகிறார்.

மன்மோகன் சிங் கேரக்டரில் பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் நடிக்கிறார்.

விரைவில் இதன் போஸ்டர்கள் வெளியாகவுள்ள நிலையில் படத்தை அடுத்த 2018ஆம் ஆண்டில் வெளியிடவிருக்கிறார்களாம்.

‘மனைவி-மச்சினி யார் பெஸ்ட் டைரக்டர்…?’ தனுஷ் சுவாரஸ்ய பதில்

‘மனைவி-மச்சினி யார் பெஸ்ட் டைரக்டர்…?’ தனுஷ் சுவாரஸ்ய பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Dhanushகோலிவுட் முதல் ஹாலிவுட் படங்கள் வரை தனுஷ் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் கதை எழுதி, நடித்து, தயாரித்துள்ள வேலையில்லா பட்டதாரி2 படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தன் மனைவி ஐஸ்வர்யா மற்றும் மனைவி தங்கை (மச்சினி) சௌந்தர்யா ஆகியோரின் இயக்கத்தில் நடித்துவிட்ட அனுபவத்தை தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில் “ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவருமே திறமையானவர்கள்.

அவர்கள் சூப்பர் ஸ்டாரின் மகள்கள். நல்ல கலை நுணுக்கம் அறிந்தவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Adhagappattathu Magajanangalay stillsகுணசித்திரம், காமெடி, இயக்கம் என பன்முகம் கொண்டவர் தேசிய விருது பெற்ற தம்பி ராமையா.

இவரது மகன் உமாபதி நடிக்கும் படத்துக்கு ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இன்பசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் ரேஷ்மா ரத்தோர், கருணாகரன், பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், மனோபாலா, யோக்ஜேபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையமைக்க, பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திரைப்படத்தின் ட்ரைலரை நாளை ஜீன் 8ஆம் தேதி, மாலை 3.30 மணிக்கு சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட விருக்கிறாராம்.

இப்படத்தின் இசையும் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தை ஜீன் 16-ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்களாம்.

Adhagappattathu Magajanangalay trailer to be revealed by Sivakarthikeyan

siva AdhagappattathuMagajanangalay

‘சங்கமித்ரா’வில் நயன்தாரா.? மீண்டும் ஆர்யா-ஜெயம் ரவியுடன் கூட்டணி

‘சங்கமித்ரா’வில் நயன்தாரா.? மீண்டும் ஆர்யா-ஜெயம் ரவியுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayantharaசுந்தர்.சி அவர்கள் மிக பிரம்மாண்டமாக இயக்கவிருக்கும் சங்கமித்ரா படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கவிருந்தனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதனிடையில் ஸ்ருதிஹாசன் திடீரென இப்படத்திலிருந்து விலகினார்.

எனவே இப்படத்தில் நடிக்க முன்னணி நாயகியை தேடி வந்தனர்.

தற்போது இந்த கேரக்டரில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை நயன்தாரா ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் இவர் ஆர்யா மற்றும் ஜெயம்ரவியுடன் மீண்டும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara likely to Join with SundarC for Sangamithra

விஜய்சேதுபதியை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்

விஜய்சேதுபதியை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gethu-movie director thirukumaranசிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தை ஏஆர் முருகதாஸ் தயாரிக்க, திருக்குமரன் இயக்கியிருந்தார்.

இப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இதனையடுத்து உதயநிதி நடித்த கெத்து படத்தை இயக்கினார்.

இந்நிலையில் 3வதாக ஒரு கதையை எழுதிவிட்டாராம் திருக்குமரன்.

இதனை தன் குருநாதர் ஏஆர் முருகதாஸிடம் காண்பிக்க, அவரோ இதில் விஜய்சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என்றாராம்.

எனவே விரைவில் விஜய்சேதுபதியை சந்தித்து கதை சொல்லவிருக்கிறாராம் இந்த மான்கராத்தே இயக்குனர்.

Maan Karate director will teams up with Vijay Sethupathi soon

More Articles
Follows