ஜல்லிக்கட்டு படத்தை தயாரிக்கும் அனுராக் காஷ்யப்..!

ஜல்லிக்கட்டு படத்தை தயாரிக்கும் அனுராக் காஷ்யப்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jalli kattuமாபெரும் மக்கள் எழுச்சியாக, அமைதி போராட்டமாக உருவெடுத்து வெற்றிவாகை சூடி வாடிவாசலில் வீரக்காளைகள் துள்ளிக்குதிக்க காரணமாக அமைந்த மெரினா புரட்சியை மையப்படுத்தி சந்தோஷ் இயக்கத்தில், அனுராக் காஷ்யப் இணைத்தயாரிப்பில், அகிம்சா புராடக்ஷ்ன் சார்பில் நிருபமா தயாரிக்கும் படம் ஜல்லிக்கட்டு.

தலைவன் இல்லாமல் தன்னெழுச்சியாக உருவான அந்த போராட்டம் உலகம் முழுமையும் தன் வசப்படுத்தியது அனைவரும் அறிந்தது. அந்த மெரினா புரட்சியை மையப்படுத்தி இயக்குனர் சந்தோஷ் புதிய கோணத்தில் ஒரு கதை களத்தை உருவாக்கி இயக்கி இருக்கிறார். உலகம் முழுவதுமான மக்கள் எப்படி ஒரு புள்ளியில் இணைந்தார்கள் என்பதை புதிய வடிவத்தில் உருவாக்கி இருப்பதாக கூறுகிறார் இயக்குனர்.

வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அவர்களின் நேரடி தொடர்பு இல்லாத ஒரு விஷயத்திற்காக ஒன்றிணைந்து போராடியது எப்படி என்பதை கூறும் படமாக இது அமையும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் நிருபமா.

அமெரிக்காவின் ஹாவேர்ட் பல்கலைக்கழகத்தில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் ஜல்லிக்கட்டு. கென்யாவின் மசாய்மாரா எனும் பகுதியிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த பகுதியில் வாழும் காளை இனமும் நமது ஜல்லிக்கட்டு காளை இனமும் ஒரே இனம் என்பதை டி.என்.ஏ பரிசோதனைகள் நிரூபித்துள்ளன எனும் ஆச்சர்ய தகவலை சொல்லி கென்யாவின் படப்பிடிப்பிற்காண காரணத்தை விளக்குகிறார் இயக்குனர்.

கென்யாவின் மசாய்மாரா பகுதியில் பழங்குடி மக்களின் வாழ்வியலோடு படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் ஜல்லிக்கட்டு. படத்தில் மசாய்மாரா படப்பிடிப்பு காட்சிகள் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர். உலகின் எல்லா பகுதிகளிலும் நடைபெற்ற போராட்ட நிகழ்வுகளோடு மெரினாவின் உண்மைக் சம்பவங்களும் படத்தில் உள்ளன. உண்மைச்ச்சம்பவங்களின் காட்சிகளை சேகரிக்கும் பணியில் தொடக்கி கதைக்கான புதிய காலத்தை அமைப்பது என இயக்குனர் கடினமாக உழைத்து வெற்றிக்காக காத்திருக்கிறார்.

முற்றிலும் புதிய முகங்களோடு இயக்குனர் சந்தோஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ரமேஷ் வினாயகம் இசையக்கிறார்.

முதல் பாடல் யு.என் தலைமையகம், ஜப்பான், சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடைசி கட்ட பணிகளில் மும்முரமாக உள்ளது படக்குழு.

விரைவில் திரைக்கு வரும் ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் பெற்ற மாபெரும் வெற்றியை வெள்ளித்திரையிலும் நிச்சயம் பெரும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குனர் சந்தோஷ்.

இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் படம் செப்டம்பர் 7ல் ரிலீஸாகிறது

இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் படம் செப்டம்பர் 7ல் ரிலீஸாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajavin-parvai-raniyin-pakkamவிகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் “ இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “

இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார் . இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். நாயகியாக அவந்திகா நடித்திருக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர் . மற்றும் மதுமிதா, கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சந்தான கிருஷ்ணன்

இசை – லியாண்டர் லீ மார்டின்

பாடல்கள் – விக்னேஷ் ஜெய்பால்

கலை – மகிரங்கி

எடிட்டிங் – இத்ரீஸ்

ஸ்டன்ட் – ஆக்ஷன் பிரகாஷ்

நடனம் – சுரேஷ்

தயாரிப்பு மேற்பார்வை – ஆத்தூர் ஆறுமுகம்

இணை தயாரிப்பு – M. செந்தில் பாலசுப்ரமணியம்

தயாரிப்பு – விகாஷ் ரவிச்சந்திரன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அழகுராஜ்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கி இருக்கிறோம். தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய டானின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அந்த டான் நாயகனை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்பது காமெடி கலவையாக உருவாக்கி இருக்கிறோம்.

டானுடன் நாயகியை தேடி நாயகன் செல்கிறார். நாயகிக்கு வேறொருவருடன் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இறுதில் நாயகியை கண்டுபிடித்தார்களா இல்லையா? நாயகிக்கு திருமணம் யாருடன் நடந்தது ? என்பதை படு காமெடியாக சொல்லுகிறோம். கிளைமாக்ஸ் காட்சி யாரும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கும். படம் வருகிற செப்டம்பர் 7 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படம் நிச்சயம் ஒரு மறக்க முடியாத காமெடி அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் இயக்குனர் அழகுராஜா.

*வாயாடி பெத்த புள்ள* பாடலால் பிரபலமான பாடலாசிரியர் ஜி.கே.பி

*வாயாடி பெத்த புள்ள* பாடலால் பிரபலமான பாடலாசிரியர் ஜி.கே.பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lyricist GKBசூதுகவ்வும் படத்தில் இடம் பெற்ற “கம் னா கம்” பாடல் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் ஜி.கே.பி. அதன் பின் எனக்குள் ஒருவன், உரியடி, மரகதநாணயம், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உருவான கனா படத்தில் ஜி.கே.பி எழுதிய “வாயாடி பெத்த புள்ள” பாடல் வெளியானது.

இப்பாடலை இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைகோம் விஜயலஷ்மி பாடியுள்ளனர்.

“வாயாடி பெத்த புள்ள” பாடல் வெளியான கனம் முதல் இப்பாடலின் வரிகளும் இசையும் அனைவரையும் கவர்ந்தது. சமுக வளைத்தலங்களில் பிரபலம் ஆனது.

தான் எழுதிய பாடலை அனைவரும் கொண்டாடுவதை அறிந்த ஜி.கே.பி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். “இப்படிபட்ட பாராட்டுகள் ஒரு கலைஞனை மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை படைக்க தூண்டும், எனவே இந்த பாராட்டுகள் என்னை நான் அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்ல தூண்டும் தூண்டுகோள்” என்றார் பாடலாசிரியர் ஜி.கே.பி.

பாடல் – https://youtu.be/00fWlZnZAo0

Super Star தலைப்பில் புதுப்படம்; *தாதா 87* பட நிறுவனத்தின் அடுத்த படம்!

Super Star தலைப்பில் புதுப்படம்; *தாதா 87* பட நிறுவனத்தின் அடுத்த படம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhadha 87 directorவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் “தாதா 87” படத்தை கலை சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

“தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

தற்போது கலை சினிமாஸ் நிறுவனம் தன்னுடைய அடுத்த படத்திற்க்கு Superstar – மீத்திரன் முக்கிளை என்ற தலைப்பை பதிவு செய்துள்ளது. நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

117 மணி நேரத்தில் 1 கோடி ; சிவகார்த்திகேயன் மகள் சாதனை!

117 மணி நேரத்தில் 1 கோடி ; சிவகார்த்திகேயன் மகள் சாதனை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vayadi peth apulla songடெக்னோ பீட்ஸ் மற்றும் மேற்கத்திய இசை பாடல்களே தரவரிசை அட்டவணையில் முதல் இடத்தை பிடித்து வருகின்றன. இந்த நிலையில் வெளியாகியிருக்கும் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் ரசிகர்களை ஈர்த்துள்ளது பெரிய விஷயம். குறுகிய காலத்திலேயே அதாவது 117 மணி நேரத்தில் YouTubeல் 10 மில்லியன் (1 கோடி) பார்வையாளர்களை இந்த பாடல் கடந்துள்ளதால் பாடலாசிரியர் ஜி.கே.பி மகிழ்ச்சி கடலில் மிதந்து வருகிறார்.

தந்தை-மகள் உறவு அடிப்படையிலான இந்த பாட்டை எழுத எது உத்வேகம் அளித்தது என அவர் கூறும்போது, “வாயாடி பெத்த புள்ள” கதையோடு ஒன்றி வரும் ஒரு பாடல். அதில் குறும்பு, வேடிக்கை மற்றும் மகிழ்ச்சி போன்றவை இருக்க வேண்டும். இறுதியில், சில பேச்சு வழக்குகளை வார்த்தைகளை நாங்கள் முயற்சித்தோம். பின்னர் அது சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமி அவர்கள் பாட மேலும் மெறுகேறியது. மேலும், சிவகார்த்திகேயன், ஆராதனா செய்த அழகான விஷயங்கள் அனைவரையும் ஈர்த்தது. திபு நினன் தாமஸ் பாடல் வரிகளின் தெளிவு மற்றும் பாடகர்களின் குரல் முக்கியத்துவத்தை கண்டுபிடித்து சரியான கருவிகளை கொண்டு பாடலை சிறப்பாக உருவாக்கினார்” என்றார்.

இந்த பாடல் உருவாக்கம் பற்றி மேலும் ஜி.கே.பி. கூறும்போது, “எந்தவொரு வேலைக்கும் ஒரு உத்வேகம் தேவை என்றால், தந்தை-மகள் உறவுக்கு அது அவசியமே இல்லை. மனிதர்களின் அத்தனை உணர்வுகளிலும், தந்தை-மகள் பிணைப்பு என்பது எப்போதுமே மிகவும் தூய்மையானது. இது காரணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம். ஒரு மனிதன் தனது ஆத்ம துணையை கண்டுபிடித்தால் தான் அவனது வாழ்வு முழுமையடைகிறது என்ற ஒரு பழமொழி உண்டு. ஆனால் உண்மையில், ஒரு பெண் குழந்தையை பெற்று, அது வளர்வதை, அவளது கனவுகளை சாதிப்பதை பார்ப்பது தாம் மிகப்பெரிய சந்தோஷம். இதுவே ‘கனா’ படத்திம் கரு, இந்த படம் அனைவருக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

கனா கிரிக்கெட்டராகும் தனது கனவுகளை நிறைவேற்ற முயற்சி செய்யும் ஒரு பெண்ணின் கதையை அடிப்படையாக கொண்டது. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன், இளவரசு, முனீஷ்காந்த், ரமா, சவரி முத்து, ஆண்டனி பாக்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகிறார். திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

சீரியல் நடிகரை ஹீரோவாக்கி படம் தயாரிக்கும் சிவகார்த்திகேயன்.!

தீபாவளிக்கு என்ஜிகே ரிலீஸ் இல்லை; சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்!

தீபாவளிக்கு என்ஜிகே ரிலீஸ் இல்லை; சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NGK posterசூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘என்.ஜி.கே’.

அரசியல் திரில்லர் படமாக இது உருவாகி வருகிறது.

இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர்.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் இப் படத்தை தயாரித்து வருகிறது.

தற்போது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இப்படம் ஆரம்பிக்கும் போதே தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது தீபாவளி அன்று ரிலீஸ் இல்லை என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால், சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள் எனத் தெரிகிறது.

சூர்யாவை சுற்றி வளைத்து ராஜு பாய் என கோஷமிட்ட ரசிகர்கள்

More Articles
Follows