ஜல்லிக்கட்டு சக்ஸஸ் பார்ட்டி கேக்… லாரன்ஸ் உலக சாதனை

ஜல்லிக்கட்டு சக்ஸஸ் பார்ட்டி கேக்… லாரன்ஸ் உலக சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lawrance cakeஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களை தமிழக இளைஞர்கள் நடத்தி உலக சாதனை படைத்தனர்.

அதன்பின்னர் இந்த வெற்றியை கொண்டாடப்போவதாக லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.

அதன்படி பிப்ரவரி 18ஆம் தேதியான இன்று, இந்த வெற்றிக்கு காரணமான இளைஞர்களுடன் கேக் வெட்டி கொண்டாடவிருக்கிறார்.

இந்த கேக்கின் எடை மட்டும் 1100 கிலோ என தெரிய வந்துள்ளது.

இந்த கேக் 50 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்டுள்ளது. மேலும் இந்த கேக்கை 40 சமையற்கலைஞர்கள் 22 மணி நேரத்தில் செய்ததாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்குமுன் இத்தாலி நாட்டில் 1040 கிலோ எடையில் கேக் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அந்த சாதனையை லாரன்ஸ் முறியடித்துள்ளார்.

Raghava Lawrence ‏@offl_Lawrence
Breaking the #WorldRecord. Cake preparation headed by Chef #Vinod. Cake’s dimensions are 50 ft long and 5 ft wide and prepared by 40 chefs.

Lawrance celebrates Jallikattu success party with 1100kg Cake becames World Record

‘நம் மன உளைச்சலை கவர்னருக்கு மெயில் செய்வோம்…’ கமல்

‘நம் மன உளைச்சலை கவர்னருக்கு மெயில் செய்வோம்…’ கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassanஇன்று பிற்பகல் தமிழக சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொண்டார்.

இதற்கு சிலர் ஆதரவும் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவை எதிர்த்து, ஓ. பன்னீர் செல்வத்தை ஆதரித்த கமல்ஹாசன் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

Kamal Haasan ‏@ikamalhaasan 9m9 minutes ago
[email protected] ங்கற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலா அனுப்புங்க. மரியாதையா பேசணும் அது அசம்பளியில்ல Governor வீடு

We should mail our Floor test reactions to Tamilnadu Governor says Kamal

தனுஷ் படத்தில் ‘வாம்மா மின்னலே’ கேரக்டரில் பாகுபலி கலைஞர்

தனுஷ் படத்தில் ‘வாம்மா மின்னலே’ கேரக்டரில் பாகுபலி கலைஞர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இதில் ஒரு முக்கிய கேரக்டரில் பாகுபலி, காஸி படப்புகழ் ராணா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அவரது காட்சி நாம் கண் மூடி திறப்பதற்குள் வந்து செல்லும் காட்சி என கூறப்படுகிறது.

அதாவது மாயி படத்தில் வடிவேலு காமெடி காட்சியில் வாம்மா மின்னலே என்று ஒரு உருவம் தோன்றி மறையுமே அது போல கேரக்டர் எனவும் சொல்லப்படுகிறது.

அப்படி என்ன கேரக்டர் என்றுத்தானே யோசிக்கிறீர்கள்? நாங்களும்தான்.

இக்காட்சியை 30 நிமிடங்கள் படம் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி கமல் கருத்து

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி கமல் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassanஜல்லிக்கட்டு பிரச்சினையின் போதே கமல் தன்னுடைய பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து தமிழக முதல் அமைச்சர் பதவிக்கு அதிமுகவில் எழுந்த மோதலை தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வத்திற்கு தன் ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சட்டசபையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

ஆனால் அவையில் கடும் அமளி நடைபெற்று வருவதால் அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பு நடைபெறும் முன்பே தன் கருத்தை கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்…

அதில் ‘இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Kamal tweets about Tamilnadu Assembly majority issue

விஜய்-அஜித் படத்தயாரிப்பாளரின் படத்தில் சிவகார்த்திகேயன்?

விஜய்-அஜித் படத்தயாரிப்பாளரின் படத்தில் சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanமோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் தற்போது நயன்தாரா, ஸ்நேகாவுடன் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதனையடுத்து பொன்ராம் இயக்கத்தில் சமந்தா உடன் ஜோடியாக நடிக்கிறார் சிவா.

இதன்பின்னர் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படங்களை முடித்துவிட்டு இறுதிச்சுற்று சுதா இயக்கத்தில் சிவா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை விஜய் நடித்த கில்லி, சிவகாசி மற்றும் அஜித் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தயாரித்த ஏ.எம். ரத்னம் தயாரிக்கவிருப்பதாக கோலிவுட்டில் தகவல்கள் பரவியுள்ளன.

Sivakarthikeyan’s next with Producer AM Rathnam

கபாலி முதல் பாட்ஷா வரை ரஜினியுடன் பயணிக்கும் சாந்தனு

கபாலி முதல் பாட்ஷா வரை ரஜினியுடன் பயணிக்கும் சாந்தனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mupparimanam release along with Baasha digital versionஅதிரூபன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ள படம் முப்பரிமாணம்.

இப்படத்தின் டீசரை ரஜினியின் கபாலி படம் வெளியான போது, அத்துடன் இணைத்து வெளியிட்டனர்.

கபாலி படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இப்படத்தின் டீசர் திரையிடப்பட்டது.

இதனையடுத்து காதலர் தினத்தில் முப்பரிமாணம் படத்தின் பாடல்களை ரஜினிகாந்த் வெளியிட்டார்.

இந்நிலையில் முப்பரிமாணம் படம் வருகிற மார்ச் மாதம் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அன்றைய தினம் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படம் டிஜிட்டல் பதிப்பு வெளியாகவுள்ளது.

இது தற்செயலாக நடந்தாலும், ரஜினியுடன் தொடர்ந்து சாந்தனு பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Mupparimanam release along with Baasha digital version

More Articles
Follows